சமீபகாலமாக இளவட்ட டைரக்டர்கள், நடிகர்களின் படங்களை தனது வீட்டில் உள்ள மினி தியேட்டரிலேயே பார்த்து விடுகிறாராம் ரஜினி. அந்த வகையில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த்-பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படத்தை பார்த்தபோது அந்த படம் அவருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம்.
அதனால் உடனே கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்டு பாராட்டியிருக்கிறார். அதோடு, இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ள வில்லன் வேடத்தில் என்னை நடிக்க சொன்னாலும் கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று சொன்ன ரஜினி, அவரிடத்தில் பாபி சிம்ஹாவின் போன் நம்பரை வாங்கி உடனே அவருக்கும் போன் செய்தாராம்.
ஆனால், அப்போது ஏதோ படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்த பாபி சிம்ஹா, ரஜினியின் போன் நம்பரை, யாரோ ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று நினைத்து கட் பண்ணி விட்டுக்கொண்டேயிருந்தாராம்.
அதன்பிறகு, ரஜினி எஸ்எம்எஸ் செய்தபிறகுதான் அவரது நம்பரில் சென்று பேசியிருக்கிறார் பாபி சிம்ஹா. அப்போது அவரது நடிப்பை வெகுவாக பாராட்டிய ரஜினி, என்னை சின்ன வயதில் பார்த்த மாதிரி இருந்தது என்றும் சொன்னாராம்.
அந்த இன்ப அதிர்ச்சிக்குப்பிறகுதான், ரஜினியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினாராம் பாபி சிம்ஹா. ஆக, ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் கவனத்துக்கே தான் வந்து விட்டதால் கதைகளை செலக்ட் பண்ணுவதில் ரொம்ப கவனமாக இருக்கும் பாபி சிம்ஹா, ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி நடித்தது போன்ற காமெடி மற்றும் ஆக்சன் கதைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
|