Superstar Rajinikanth has surprised his fan at Mumbai airport by giving his autograph on the flight ticket.
ரஜினியுடன் ஒரு முறையாவது படம் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்காதா என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அவர் செல்லும் இடங்களிலெல்லாம் அவரை மொய்த்துக் கொண்டு, கிடைத்த வாய்ப்பைத் தவற விடாமல் படமெடுத்து கைகுலுக்கி தங்கள் ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
நேற்று மும்பையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் திரும்பினார் ரஜினி.
அப்போது ஸ்ரீனிவாஸ் என்ற ரசிகர் விமான நிலையத்தில் ரஜினியை பார்த்ததும் மிகுந்த உற்சாகத்துடன் அவரிடம் சென்று, 'தலைவா... உங்க ஆட்டோகிராப் வேண்டும்' என்று நின்றார். ஆனால் எதில் ஆட்டோகிராப் வாங்குவது என்று தெரியவில்லை அவருக்கு. உடனே தன் கைவசமிருந்த விமான டிக்கெட்டை நீட்டி, 'இதிலேயே போடுகள் தலைவா' என்றார்.
ரஜினியும், ரசிகரின் ஆசையை நிறைவேற்ற அந்த பயண டிக்கெட்டில் 'காட் ப்ளஸ்' என எழுதி கையெழுத்தை போட்டுள்ளார். இது அந்த ரசிகருக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
சமூக இணையதளங்களில் ரஜினி கையெழுத்து போட்ட டிக்கெட்டும், ரஜினி விமான நிலையிலிருந்து வெளியே வரும் புகைப்படங்களும்தான் இன்று பரபரவென உலா வருகின்றன.
|