 14 ஏப்ரல்.. ’வீரா’ திரைப்படம் வெளியான நாள்.
“எங்க தியேட்டர்ல பிரமாதமா ஓடின ரஜினி படங்கள்ல வீராவும் ஒண்ணு. குறிப்பா பாடல்களுக்குப் பிரமாதமான வரவேற்பு. ஏன்னா படம் வெளியாகும் முன்பே இளையராஜா இசையில ரொம்ப பாப்புலராயிடுச்சி பாடல்கள். படத்துல ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார்னா… ராஜா சார் இசையும் அவருக்கு இணையான முக்கியத்துவத்துடன் திகழ்ந்தது. இந்தப் படத்துல முதல்நாள் மூணாவது ஷோன்னு நினைக்கிறேன்… என் வாழ்க்கைல அந்த மாதிரி ஒரு டீஸண்டான வேண்டுகோள் அதுவும் ரசிகர்கள் தரப்பிலிருந்து வந்ததா நினைவில் இல்லை. இந்த ”கொஞ்சிக்கொஞ்சி அலைகள் ஆட”… பாடல் ஆரம்பிச்சதுமே தியேட்டர்ல அசாதாரணமான ஒரு அமைதி. நானும் பாக்ஸ்லேர்ந்து பார்த்துக்கிட்டிருக்கேன். பாடல் முடியற நேரம் வரும்போது, இன்னும் 5 நிமிஷம் ஓடாதான்னு எனக்கே ஏக்கமா இருந்ததுன்னா பார்த்துக்கங்க… பாடல் நின்னதும்… எல்லாரும் அமைதியா இருக்காங்க. அப்ப ஸ்கிரீன்ல ஒரு குழந்தை அந்தப் பாட்டை திரும்பப் பாட ஆரம்பிக்கும். அப்பதான் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்துச்சு. படம் பார்த்துக்கிட்டிருந்தவங்கள்ல முன்வரிசை ஆளுங்க எழுந்து நின்னு கைதட்ட ஆரம்பிச்சாங்க. கூச்சல் இல்லை… ஆரவாரம் இல்லை… ஆனா தியேட்டர் அதிரும் அளவுக்கு கை தட்டல். என்கூட உட்கார்ந்திருந்த அத்தனைபேரும் கை தட்டிக்கிட்டே இருக்காங்க. உடனே என்னோட உதவியாளரைக் கூப்பிட்டு, ‘பரவால்ல அந்தப் பாட்டை இன்னொரு வாட்டி போடுப்பா’ன்னு சொல்லிட்டு அமைதியா வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சேன். பாட்டு திரும்ப வந்ததும் ரசிகர்களின் உற்சாகம் தாங்க முடியல. அதுவரை அமைதியா பாத்தவங்க இப்ப உற்சாகத்துல ஆரவாரமா பார்த்தாங்க. நானும் அவர்களைப் பார்த்து சந்தோஷப்பட்டேன். உண்மையைச் சொன்னா, எனக்குத் தெரிஞ்சு நானே ஒன்ஸ்மோர் போடச் சொன்ன பாட்டு அதுமட்டும்தான், என்னோட இத்தனை வருஷ திரையரங்க அனுபவத்தில்”
- அபிராமி ராமநாதன்.
தகவல் நன்றி: envazhi.com
|