Rajinikanth's mega hit movie Chandramukhi completing 10 years today. Special article on Chandramukhi movie and its box office reports.
ஒரு படம் மெகாஹிட் என்றாலும் வசூலிலும் ஓட்டத்திலும் ஓரிரு சாதனைகளையே படைக்கும். ஆனால் நம் திரையுலகிற்க்கு "சந்திரமுகி" கொடுத்ததோ அணைத்து விதமான சாதனைகளையும். திரைக்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்தும் சந்திரமுகியின் சாதனை முடிந்து விடாமல் இன்றும் பல இடங்களில் நம் சினிமாவின் உச்சமாய் இருந்து வருகிறது. 10 ஆண்டுகளின் நிறைவாக சந்திரமுகியின் நினைவை கூறும் இந்த சிறப்பு பதிவு.
ரஜினிகாந்திற்க்கு தோல்வி படங்கள் என்று கூறப்படும் படங்களே மற்றவர்களின் வெற்றிப் படங்களுக்கு இணையாக வசூலை குவிக்கும் போது, ஒரு ரஜினியின் ஹிட் படம் அதுவும் ப்ளாக்பஸ்ட்டர் படம் என்றால் வரலாற்றில் இடம் பிடிக்கும் படமாக தானே இருக்கும். 'படையப்பா' என்ற பூகம்ப வெற்றிக்கு பின் நம் திரையுலகம் 5 வருட இடைவெளியில் சந்திக்க நேர்ந்தது "சந்திரமுகி"யின்(2005) வெறி பிடித்த ஆட்டத்தை. அது ஆட்டியது ஹிந்தி பட உலகையும், அது அடக்கியது ஆடி வந்தவர்களின் ஆணவத்தையும்.
"பாபா" படம் எதிர்பார்த்த அளவிற்கு போகல. ரஜினி அவ்ளோ தான். இனி நாம தான் சூப்பர் ஸ்டார் என தமிழ் திரையுலகில் காலரை தூக்கி விட்டு திரிந்தவர்கள் பல பேர்.
படம் வெளிவரும் முன்பே, சந்திரமுகியின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஆயிரம் பேர் முன்னிலையில் "நான் யானை இல்ல.. குதிரை. கீழ விழுந்தா டக்குனு எழுந்திருப்பேன்" என உணர்ச்சி போங்க ரஜினி பேசினார். படத்தில் அவர் பேசும் பஞ்ச் வசனத்தை போல, நிஜத்தில் இந்த வசனமும் தூள் கிளப்பியது.
சந்திரமுகி படம் தனியாக வந்து வெற்றி பெற்ற படம் அல்ல. இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தோடு அன்றைய தினம் வெளிவந்தது.
*அது சரி... கீழே விழுந்த குதிரை மீண்டு எழுந்து ஓடிய ஓட்டத்தின் வேகம் என்ன..? ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மும்பை எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு போனது. சச்சின் கிளீன் போல்டு ஆனார். இதோ.. அந்த புயல் சீற்றத்தின் நினைவலைகள்....
☆தமிழ் திரையுலக வரலாற்றிலே முதல் முறையாக வசூலில் 50, 75 கோடிகளை தொட்டு, அன்றைய பாலிவுட் வெற்றி படங்களுக்கு இணையான வசூலை கண்ட தென்னிந்திய படம் 'சந்திரமுகி'.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் மிக அதிக திரையரங்குகளில்(156) 100 நாட்கள் ஓடிய ஒரே படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் அதிக நாட்கள்(891) திரையரங்கில் ஓடிய படம். (சென்னை சாந்தி தியேட்டர்)
☆தமிழ் திரையுலக வரலாற்றில் பாட்ஷாக்கு(1995) பிறகு சுமார் பத்து ஆண்டுகள் கழித்து ஒரு வருடம் ஓடிய படம். (சென்னை சாந்தி தியேட்டர்)
☆தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக ஆந்திர மாநிலத்தில் ஒரு வருடம் ஓடிய படம். ('ஹைதராபாத்' பிரசாத் மல்டிப்ளக்ஸ்)
☆தமிழ் திரையுலக வரலாற்றில், தமிழ்நாடு மாநிலத்தில் மிக அதிக திரையரங்குகளில்(90) 100 நாட்கள் கடந்த படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில், ஆந்திர மாநிலத்தில் மிக அதிக திரையரங்குகளில்(53) 100 நாட்கள் கண்ட படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில், இலங்கை நாட்டில் மிக அதிக திரையரங்குகளில்(9) 100 நாட்கள் ஓடிய படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக 200+ தியேட்டர்களில் 75 நாட்கள் ஓடிய படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக 250 தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய படம்.
☆ரஜினியின் 'படையப்பா' படத்திற்கு பிறகு 5 வருடம் கழித்து மும்பை மாநகரில் 100 நாள் ஓடிய தமிழ் படம் சந்திரமுகி (அரோரா தியேட்டர்). பெங்களூரிலும் படையப்பா படத்திற்கு பிறகு 100 நாள் ஓடிய தமிழ் படம் சந்திரமுகி தான்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில், முதல் முறையாக சிங்கப்பூர் நாட்டில் 100 நாட்கள் ஓடிய படம். (கோல்டன் வில்லேஜ் சினிமாஸ்)
☆தமிழ் திரையுலக வரலாற்றில், முதல் முறையாக தென் ஆப்ரிக்கா நாட்டில் திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடிய முதல் படம். ("சினேகார்" சினிமாஸ்)
☆தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக ஜெர்மன் நாட்டில் திரையிடப்பட்ட படம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் இலங்கை, சிங்கப்பூர், சவூத் ஆப்ரிக்கா என 3 வெளிநாடுகளில் 100 நாள் ஓடிய முதல் படமும் "சந்திரமுகி".
☆மலேசியா நாட்டில் 2005-ம் ஆண்டின் ஆல் டைம் "டாப் 10 பாக்ஸ் ஆபிஸ்" பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய படம். (அந்நாட்டு மொழிப் படங்களையே பின்னுக்கு தள்ளியது)
☆ஒரு தமிழ் படம் தமிழ்நாடு(90 தியேட்டர்), ஆந்திரா(53 தியேட்டர்), இலங்கை நாடு(9 தியேட்டர்) என மூன்று வெவ்வேறு இடங்களில் அதிக தியேட்டர்களில் 100 நாள் ஓடி "ஆல்டைம் சாதனை" படைத்துள்ளது என்றால் அதுவும் ரஜினியின் படமான சந்திரமுகிக்கே சொந்தம்.
☆தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முறையாக சென்னை 'சிட்டி'யில் 6 தியேட்டர்களில் ரெகுலர் காட்சியாக 100 நாட்கள் ஓடிய ஒரே படம் "சந்திரமுகி". (இது போல் தமிழகத்தின் அணைத்து பகுதிகளிலும் சாதனை)
☆சென்னை மாநகரின் முதன்மை ஏரியாவான மவுண்ட்ரோட்டில் அதிக இருக்கைகள் கொண்ட தியேட்டரில் 4 காட்சிகளாக அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையும் சந்திரமுகிக்கே. (சாந்தி தியேட்டர் 225 நாட்கள் - 4 காட்சிகள்)
☆கடந்த 20 வருட தமிழ் திரையுலகில் தமிழகம்-ஆந்திரா மாநிலத்தில் 25வாரம் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம்.
2005-ம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்ட சிறந்த 43 படங்களில் நம் தமிழ் படம் "சந்திரமுகி" இடம் பெற்றது. (இந்திய நாடு வெளிநாடுகளில் இந்த 43 படங்களை திரையிட்டு, அந்நாடுகளிடம் நம் நாட்டின் நல்லுறவை வளர்க்க வெற்றி பெற்ற இந்த படங்களை திரையிடுவது என இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. அதில் சந்திரமுகியும் ஒன்று)
(குறிப்பு: பதிவின் நீளம் கருதி பல சாதனைகளை பதிவிட முடியவில்லை)
கமலஹாசனின் மும்பை எக்ஸ்ப்ரஸ், விஜயின் சச்சின் போன்ற படங்கள் சந்திரமுகியின் ஓட்டத்தில் 2% சதவீதம் கூட ஓட முடியவில்லை. சந்திரமுகியின் ஆட்டத்தால் திரையரங்குகளில் தாக்கு பிடிக்கவும் முடியவில்லை. சந்திரமுகியின் வெற்றி மூலம் அடுத்த சூப்பர்ஸ்டார் என கனவு கண்டவர்களின் சூழ்ச்சிகள் சுக்குநூறானது. ரஜினியால் இனி தலை தூக்க முடியாது என்றவர்களின் சாவல்கள் முறியடிக்கப்பட்டது. பொறாமை பொசுங்கியது. ஆண்டவன் கொடுத்த சோதனைகளும் மறைந்தது.
வரண்டு கிடந்த பூமியில் நதிகள் பாய்வது போல, காய்ந்து கிடந்த நம் தமிழ் திரையுலகமும் அதை சார்ந்து இருந்த குடும்பங்களும் சந்திரமுகியின் வரவினால் செழிப்பு பெற்றதை எக்காலமும் திமிழ் திரையுலகம் மறக்க முடியாத கலைத்தாயின் அரிய படைப்பு..!
For more Chandramukhi paper advertisements, please visit this link : http://rajinifans.com/boxoffice/chandramukhi.php
|