எஸ்பி முத்துராமன் இல்ல திருமண விழாவில் தலைவர் சூப்பர் ஸ்டார்!
(Wednesday, 8th April 2015)
மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமனின் பேத்தியின் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
எஸ்பி முத்துராமனின் மகள் வழிப் பேத்தியும் டாக்டர் விசாலாட்சி – டாக்டர் முத்தையா தம்பதிகளின் மகள் முத்துலட்சுமிக்கும் முத்துக்குமாருக்கும் சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
அதன் வரவேற்பு நிகழ்ச்சி ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். அவரை எஸ்பி முத்துராமன் வரவேற்று அழைத்துச் சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.