Other Articles
சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!
I can see only one actor to play Balram: Rajnikanth!
ஈழ பிரச்சினைக்கும் ரஜினி எதிர்ப்புக்கும் என்ன சம்பந்தம்?
உணர்வுகளைக் காட்டுங்கள்; வக்கிரத்தையல்ல!
Media campaign mislead the Fans!
ரஜினியின் இமேஜை உச்சிக்கு கொண்டு சென்ற படங்கள்
Sridhar, the Man of self respect and confidence!
சூப்பர் ஸ்டார் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்..
தம்பி என பாசத்தோடு அவரை அழைக்கும் உரிமை
ரஜினியின் அறிக்கை: சில பார்வைகள்!
ரஜினி சொன்னாலும் கட்சியைக் கலைக்க மாட்டோம்
கமலுக்கும் ரஜினிக்கும் கைகலப்பு வருமளவில் சிறு மோதல்
ரஜினி சாருக்கு நேர்ந்த பிரச்சினைதான் எனக்கும்!
Maveeran is not a flop movie
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
(Saturday, 25th October 2008)


ஜீத்-

அறிமுகம் தேவையில்லாத முன்னணி நடிகர். தலைவருக்குப் பிறகு மெகா ஓப்பனிங் உள்ள நடிகர் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் பெயரெடுத்துள்ளவர்.

எப்போதும் சர்ச்சை நாயகனாகத் தெரிந்தவர்... இப்போது சாந்த நாயகனாக மாறியிருப்பவர். 

Rajinifans.com என்றதும் கையை ஒருகணம் இறுகப் பற்றியவர், ஒரு அஞ்சு நிமிஷம் இருங்க பாஸ் என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுடன் அவசர அவசரமாகப் போட்டோ செஷன் முடித்துவிட்டு வந்தார். நமக்காக அஜீத் ஒதுக்கியது 10 நிமிடங்கள். அதில் ஒன்பதரை நிமிடங்கள் அவர் பேசியது தலைவர் ரஜினியைப் பற்றி!

ரஜினியைப் பற்றி பேசும்போது அவர் குறிப்பிடுவது இரண்டு வார்த்தைகளைத்தான்... தலைவர் அல்லது சார்...

அவரது வாழ்க்கையின் திருப்புமுனை எப்படி நிகழ்ந்தது...? ரஜினி என்ற மந்திரம் அவருக்குள் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியது?

இனி அஜீத் பேசுகிறார்...

அடிப்படையில் நான் தலைவரின் ரசிகன். அவரைப் பார்த்து, அவரைப் போலவே வரவேண்டும் என்ற ஆசையோடு வந்தவன். நான் நடித்த படங்களில் என்னால் முடிந்த வரை, ஒரு ரஜினி ரசிகனாக அவர் புகழ் பாடியிருக்கிறேன். அடிப்படையில் உங்களைப் போன்றே மிகத் தீவிரமாக அவரை ரசித்து மகிழும் ரசிகன் நான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இடையில் நான் பேசியவை, அவை எந்த மாதிரி வடிவம் பெற்று மீடியாவில் வந்தன என்பதெல்லாம் எல்லோரையும்விட சாருக்கு நன்கு தெரியும்.

ஆனால், முன்பெல்லாம் நானாக அவரிடம் இதுபற்றிப் பேசினாலும் கூட அவர் தவிர்த்துவிடுவார். ‘விடுங்க... நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார்.

எத்தனை சத்தியமான, அனுபவப்பூர்வமான வார்த்தைகள் பாருங்கள்!

அவர் எனக்கு தி ஹிமாலயன் மாஸ்டர் புத்தகம் கொடுத்தார். ஒரு குருவைப் போல அது எனக்கு வழிகாட்டும் என்றார். எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன், எப்போதும் சொல்வேன். ரஜினி சாரின் ரசிகர்களுக்கு இதைச் சொல்லுங்கள், ப்ளீஸ்...

பில்லாவில் நான் நடிக்கிறேன் என்று தெரிந்த பிறகு எத்தனை விதமாக அதைக் கெடுக்க நினைத்தார்கள் தெரியுமா... ஆனால் அப்போதெல்லாம், சாருடைய ஆதரவுதான் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. அந்தப் படம் துவங்கியதிலிருந்து, ரிலீஸ் வரை அனைத்திலும் ரஜினி சாரின் நேரடிப் பார்வை இருந்தது. யாருக்கும் கிடைக்காத பாக்கியம் அது என்றுதான் சொல்வேன்.

இதோ.. ஏகன் ரிலீஸ். மிகுந்த சந்தோஷம் என்று சொல்ல மாட்டேன். நிறைவாக இருக்கிறது. இந்தப் படம் எப்படி வந்திருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொண்டார் தலைவர்.

தலைவரிடம் நான் கற்றுக் கொண்ட முக்கியமான விஷயம், எப்போதும் உண்மையாகவே இருக்க வேண்டும் என்பது. அவரைப் பாருங்கள்... யாரிடமாவது தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற ரீதியில் பழகியிருப்பாரா... பேசியிருப்பாரா...! அவரே அப்படியென்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு பாஸ்!!

அவரது ரசிகன் என்று சொல்லிக் கொள்வது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது.

நான் அமைதியாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்... உண்மைதான். எதற்கு அவசரப்பட வேண்டும். கிடைப்பது நிச்சயம் எனக்குக் கிடைத்தே தீரும் என்ற தலைவரின் வார்த்தைகளை நம்புகிறேன். அந்த நம்பிக்கையை நான் பெறும் வரையில்தான் அமைதியற்ற மனநிலையில் இருந்தேன்..., என்ற அஜீத், ஒரு புன்முறுவலுடன் விடை கொடுத்தார்.

-Sanganathan.


 
38 Comment(s)Views: 13102

Previous Page
Previous
123Next Page
Next
PMK,Chennai
Monday, 27th October 2008 at 03:16:56

மனதளவில் அஜித் அவர்கள் பலம் பெற்று வருகிறார் என்பது தெரிகிறது.. சரியான நேரத்தில் சூப்பர் ஸ்டாரிடம் வாழ்க்கை கல்வி பயில வந்துள்ளார். வாழ்த்துக்கள். ஆனால் கடைசி வரை குருவிடம் நல்ல சிஷ்யனாக இருக்க வேண்டும் அதுதான் முக்கியம்.அதிகம் பேசாமல் இருக்கும் வரை நாம் முன்னேரிக்கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்.


நன்றி,
என்றும் அன்புடன்,
PMK.

கிரி,Singapore
Sunday, 26th October 2008 at 22:58:58

அஜித் அவர்களின் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சங்கநாதன். அவர் உண்மையான அன்போடு கூறினாரா இல்லை ரஜினி ரசிகர்களை கவர கூறினாரா என்று தெரியவில்லை. தலைவரை போல கஷ்டப்பட்டு வந்து இருப்பதாலும், மிகவும் எளிமையான நபர் என்பதாலும் மற்றவர்கள் விசயத்தில் அவர் தலையிடுவதில்லை என்பதாலும் அவர் கூறியதை உண்மை என்று நம்புவோம்.

அன்புடன்
கிரி

Arooran,London
Sunday, 26th October 2008 at 13:58:13

I think Ajith said dat 2 attract our talaivar' s fans and make his films big hits at the box office like Billa! But ever1 should know dat no 1 can bcome or replace the only n 1 Rajnikanth da Boss!!!
edward,london
Sunday, 26th October 2008 at 10:00:31

Thanks Mr.Ajit. you have grown lot,after Thalivar you are the mass hero in Tamil Nadu.we wish you all the best.
Manikandan Bose,Chennai
Sunday, 26th October 2008 at 06:46:06

AJITH KUMAR
THE ONLY REAL GENTLEMAN CURRENTLY IN THE TAMIL CINE FIELD NEXT TO OUR THALAIVAR...
Ajith is a Perfect gentleman. The earlier statements given by him about becoming superstar was twisted badly.. He mentioned that in many interviews.. Dont you know guys about our film industry..!! They wont allow good people to grow more..
Directly in any interviews no people told bad about Ajith. Indirectly some PIGS may speak anything.

He is not remaking his movies like a Xerox copy from other movies like other star. Just taking the theme and making that in a diffent way just LIKE OUR THALAIVAR.
For media he may tell like MR, SIR as a addressing note. But as a Rajini fan when he speak with another Rajini fan the THALAIVAR will come very friendly.
HE is known as the IKON of Self confidence. He dont need to follow any indirect ways to get fans. He loves his fans. Also he is not making any move to use his fans to get into politics.
There are more similarities between superstar and Ajith..
1. Both are not from Cinema Background.
2. Both grown themself without any support from family or politics or etc..
3. Both faced lot of bad comments and critizism during there grownup.
4. Ajith is in next place to Rajini in his film opening and his salary.

Iam not a Ajith fan to say these things..

I like Ajith.. BUT I LOVE RAJINI...

Gopalan Sriram,India
Sunday, 26th October 2008 at 05:48:35

The word Rajni gives lot of meanings and peace not only for Ajit and to many people in the world. Peace is the only one every people searching for in the life.
karthik,
Sunday, 26th October 2008 at 04:35:50

if this words were really from his true heart,i respect him.if i am not wrong,during the shooting of JI he told to media that people will understand who is real super star after JI film

cinema industryil naan vanangum ore manithan rajini mattum thaan,and will be fan of that man alone till my death- vazhga thalaivar

Sridhar Ramachandran,
Sunday, 26th October 2008 at 03:44:54

What a opportunistic these people are, especially actors like Ajith. If something is required, they would go to any extent and once they get things done, they will boast that they did everything on their own. Do not believe these people - these guys will change at any time.
m.mariappan30,b9931
Sunday, 26th October 2008 at 01:51:42

Thanks and wish u from our rajini fans team
hemnath,salem
Sunday, 26th October 2008 at 01:49:06

கொஞ்சமா பேசுங்க... நிறைய செய்ங்க. அப்புறம், நீங்க பேசாவிட்டாலும் இவர்கள் அனைவரும் உங்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டே இருப்பார்கள்’ என்றார்.

தலைவர் சொன்ன மாதிரி இருந்து அஜித் மீண்டு வருகிரார்.ஆனா ஒருத்தன் ரொம்ப ஆடுரான்,அவன் எப்போ அடி வாங்க போரான்னு தெரியலெ.அப்பவும் நம் தலைவர் தான் காப்பாட்ருவார்.
உயிர் வாழும் தெய்வம்
நம் தலைவர்
yendrum thalaivar bakthan....
hemnath

Rajavel,Tamilnadu
Sunday, 26th October 2008 at 01:41:50

ajith epavum rajini sir a thappa sonnahu kidayadhu...media tan thappa mathiduchi...personally i know ajith...he is a urdent rajini fan
buntee,tamilnadu
Sunday, 26th October 2008 at 00:30:44

Ajith is a person who won't address anyone as thalaivar. Being a professional he address everyone as Mr... He would have addressed as Mr RajiniKanth or Rajni sir. I think Rajinifans.com have replaced that with thalaivar...

I don't oppose to this as a Rajini fan you have every right to do it. But this article definitely misinterpretation of ajith.

sivakumar,DUBAI, UAE
Saturday, 25th October 2008 at 23:05:39

Dear FANS of all STARS,
Now you can understand why RAJNI FANS celebrating RAJANI to this extend. He is not only a GOOD ACTOR he is a good human being and has good moral and ethics. So many things, one has to learn from him ; which will nourish their circle, family and friends as well.

BP,
Saturday, 25th October 2008 at 23:02:27

As Kannan mentioned whether ajith maintains this statement for years to come..let's wait and watch.

This statements should be one trying to pull thalivar's fan to well establish his career.

ILHAM,SRI LANKA colombo
Saturday, 25th October 2008 at 22:51:09

thnx ajith
vinai kumar,india/tirunelveli
Saturday, 25th October 2008 at 21:02:05

THALA.... perfect gentleman u r... thkz..
'THALA in guru THALAIVAR'

Raja,Washington DC
Saturday, 25th October 2008 at 18:23:40

அடுத்த தலைமுறை நடிகர்களை வளர்த்து விடுவதில் ரஜினிக்கு நிகர் யாருமில்லை. ஆனால் ரஜினியை எதிர்ப்பவர்களை ஆணடவன் பார்த்து கொள்கிறான். அஜித் தலைவரை தவறாக பேசியதற்க்காக‌ தண்டனையயும் இப்போது ரஜினியின் மூலம் இழந்ததையும் மீட்டிருக்கிறார். இன்னொரு நடிகர் இப்பொது தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்து விட்டார். அஜித் ஒரு பழைய படத்தில் ரஜினி பட போஸ்டர் ஒட்டுவது போல் வரும் ஒரு சீன் நன்றாக இருக்கும்.
Kannan,USA
Saturday, 25th October 2008 at 15:33:51

Nice to hear from Ajith.
He should maintain this statement.

Previous Page
Previous
123Next Page
Next

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information