Related Articles
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Enthiran New Stills from Goa Shooting
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?
Good turn out for Bangalore Rajini fans meeting
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
ஜப்பானில் ரஜினி
ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் - மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks about Superstar Rajinikanth
Sivaji Vs Dasavatharam ... Box Office Analysis

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
(Tuesday, 14th October 2008)

இது ஏற்கனவே அலசி ஆராய்ந்த விஷயம்.  ரஜினியை பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு இந்த அறிக்கை ஆச்சர்யத்தை தராது. என்ன நடக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஒருவருக்கு ஒரு விஷயத்தில் ஆர்வமிருந்திருந்தால் அதை எப்போதே செய்திருக்க முடியும். இதை நாம் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ள முடியும்.

முதல் பார்வை

என்னுடைய கணிப்பின்படி ரஜினி அரசியலுக்கு வரவேண்டாம் என்று நினைத்திருக்கலாம். அவரது பாப்புலாரிட்டியை தவறாகபயன்படுத்தி அவரை சினிமாக்காரர்கள், அரசியல்வாதிகள் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைத்திருக்கலாம் அதன் விளைவாக அரசியல் வாடை வீசும் டயலாக்கு வந்திருக்கலாம்.

ரஜினியின் ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறார் என்பது எல்லா ரசிகர்களுக்கும் தெரியும். அப்படி படங்களில் நடிப்பதை நிறுத்திவிடும் பட்சத்தில் ரஜினியையும் அவரது படங்களையும் இதுவரை ஆராதித்தவர்களுக்கு வேறு வேலைகள் எதுவும் இல்லாத நிலை வரும்.

இதற்கு ரஜினியை மட்டுமே குறை சொல்ல முடியும். அவருடைய தவறுகள் அவருக்கு தெரிந்திருக்கலாம். அதை திருத்திக்கொள்ள நினைத்திருக்கலாம். ஆனாலும் இனி அரசியலுக்கு வரமாட்டேன் என்று அவரால் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை. அவரது ரசிகர்களில் பாதி பேர் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் இன்னும் பாதிபேர் அரசியலுக்கு வரத்தேவையில்லை என்கிற நிலையில் உறுதியான முடிவெடுக்கும் பட்சத்தில் அதற்கு ஆதரவு எப்படியிருக்கும் என்பதை அவரால் கணிக்க முடியவில்லை. இது நிச்சயம் Catch 22 நிலைமைதான்.

ரஜினி நிலைமையில் நாம் இருந்தாலும் அதே நிலைமைதான். ரஜினி அளவுக்கு மிதமிஞ்சிய புகழும், செல்வாக்கும் நமக்கிருந்தால் அதுவே நமக்கெதிராய் போய் நம்மை தவறுகள் செய்ய வைக்கும். நாம் எல்லோரும் மனிதப்பிறவிகளே. எல்லாருக்கும் இருக்கும் பலவீனங்கள் உண்டு, ரஜினி உட்பட.

இந்த நிலையில் ரஜினியை கட்டாயப்படுத்தி முடிவெடுக்கச் சொல்வது சரியான முறையல்ல. அவருக்கு அரசியலில் விருப்பம் இருந்தால், என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று சரியான நோக்கங்கள் இருந்தால் அதை அவர் நிச்சயம் செய்து முடிப்பார். அப்போது நம்முடைய ஆதரவு அவருககுத் தேவைப்படும்.

மாற்று பார்வை பார்வை

ரஜினிக்கு உண்மையில் அரசியலில் ஆர்வமுண்டு என்று வைத்துக்கொள்வோம். சரியான நேரத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.  கட்டாயப்படுத்தி வந்தே ஆகவேண்டும் என்று யாராவது வற்புறுத்தினால் என்ன நடக்கும்? நீங்களே கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யாராவது அப்படி உங்களை கட்டாயப்படுத்தினால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? தன்னிலை மறந்து கோபப்படுவீர்களா? நிச்சயம் அதைத்தான் செய்வீர்கள்.

ரஜினியின் கடந்த கால வாழ்க்கை பார்க்கும்போது அதிலிருந்து உங்களால் ஒரு விஷயத்தை தெளிவாக தெரியும். பரபரப்பான சினிமா வாழ்க்கை பல நேரங்களில் அவரை தன்னிலை மறந்து கோபப்பட வைத்திருக்கிறது. கோபத்தை மறக்க அவரை கோப்பையை நாடினார். பின்னர் ஆன்மீகத்தையும் முயற்சி செய்தார். இதில் எந்த தவறும் இல்லை.  ரஜினி போன்றவர்களால் வெளியிலிருந்து வரும் வற்புறுத்தல்கள், கட்டாயப்படுத்தல் இவை எதற்கும் இணங்கிப் போக முடியாது.  ஆகவே, கெடுபிடிகளிலிருந்து வெளியே வந்து அமைதியாக யோசித்து முடிவெடுக்க அவர் நினைக்கலாம்.

அவர் பொறுமையாக முடிவெடுக்க இடம் கொடுத்து சரியான முடிவெடுக்க நாம்தான் அனுமதிக்க வேண்டும். இங்கே கட்டாயப்படுத்தி எதையும் சாதிக்க முடியாது.

முடிவுரை

ரஜினியின் முடிவு அவரது பாப்புலாரிட்டியை பாதிக்குமா? நிச்சயமாக இல்லை.  ரஜினிக்கு ரசிகன் உருவாவது எப்படி? அவர் அரசியலுக்கு வருவார் அதன் மூலம் நமக்கு ஏதாவது லாபம் கிடைக்கும் என்று நினைத்துதான் ஒரு ரசிகன் உருவாகிறானா?  அதுவே உண்மையென்றால் எத்தனை காலம் அவனால் ரசிகனாக இருக்க முடியும்? ரஜினி அரசியலுக்கு வருவார் என்று நினைக்கும் ரசிகன் நிச்சயம் மைனாரிட்டிதான்.  பெரும்பாலான ரசிகர்கள் அவரை அரசியலில் எதிர்பார்ப்பதில்லை.

ரஜினி ரசிகர்களை அடிக்கடி சந்திக்காதது அவரது பெரிய குறை. ரசிகர்களை சரியான இடைவெளியில் அவர் சந்தித்திருக்கலாம்.

இதெல்லாம் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. உங்களுக்கு அரசியல் ரீதியாக ஏதாவது லட்சியங்கள் இருந்தால் வேறு யாரையாவது அரசியலில் எதிர்பார்க்கலாம். யாரையாவது உங்களுக்கு தலைமை ஏற்கச் சொல்லலாம். ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ரஜினியால் என்கிற தனிநபரால் இந்த அரசியல் அமைப்பை மாற்றி அமைக்க முடியாது.

அதுவொரு கஷ்டமான வேலை. ஒரு இயக்கமாக நடத்தப்படவேண்டியது. அனைவருக்கும் கல்வியிலிருந்து அது ஆரம்பமாக வேண்டியது. படித்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டியிருக்கும். குறைந்தபட்ச அதிகபட்ச வயது வித்தியாசமெல்லாம் அரசியலில் அவசியம். இந்திய அரசியலமைப்பு சட்டடத்தை மாற்றாமல் எந்தவொரு அரசியல் கட்சியாலும் பெரிதாக மாற்றத்தை கொண்டு வரமுடியாது.

ஆக ரஜினி அரசியலுக்கு வருவதால் என்ன பெரிய மாற்றங்கள் வந்துவிடப்போகிறது?  எதுவுமில்லை. மற்றவர்களைப் போல் இன்னொரு அரசியல்வாதியாக மட்டுமே ரஜினியை நாம் பார்க்க முடியும். இது ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்துபவர்களக்கும் தெரியும். தெரிந்தும் அவர்கள் வற்புறுத்துவதறகு காரணம் அவர்களது சுயநலமே அன்றி வேறில்லை.

சுயநலத்தையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு மனசாட்சியை தொட்டு கேட்டுப்பாருங்கள். ரசிகர்கள் என்கிற போர்வையில் ரஜினியை சங்கடத்தில் ஆழ்த்துபவர்களின் கபட நாடகம் புரியும். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமில்லை. ஆனால் இங்கே சொல்லப்பட்ட கருத்துக்களின் பின்னாலிருக்கும் நியாயத்தை புரிந்து கொள்ள இதுதான் சரியான சமயம்.

யார் என்னை குறை சொன்னாலும் நான் கவலைப்படப்போவதில்லை. அவர் ஒரு நல்ல ஜனரஞ்சக கலைஞர் அதையும் தாண்டி ஒரு மாபெரும் மனிதர். அந்த மனிதருக்கு நான் என்றும் நிரந்தர ரசிகன். அதை நினைத்து எப்போதும் பெருமைப்படுவேன்.

அன்புடன்
ராஜ் நாராயணன்.


 
17 Comment(s)Views: 908

rajagopalan,chennai
Saturday, 25th October 2008 at 06:18:55

poruthar boomi alwar......naan sollala...periyavanga soliirukanga.....Tat wat talaivar is gonna do....some say....rajini will become 10 1 11 if he enters politics...rajni has changed the cinefield itself....y cant he change india.........he is not only a hero in the silver screen...but also in real life.....he will prove it very soon.....coming soon.......Entiran, Thalivan....cm seatla ukkara
Mohan,Chennai
Thursday, 23rd October 2008 at 06:28:13

i am not in Rajini fan but i love and enjoy his pictures. My openion he should not enter the political he should live as a Super Star "Rainikanth".

Mohan K

m.mariappan30,india/tuticorin
Wednesday, 15th October 2008 at 03:59:19

Dear Raj Narayanan

I like and thanks of your valuable Point.
All real fans is follow rajini sir only.
Rajini sir is going any way fans follow the same. I am one of the fan that way

padmanabhan,Bangalore
Wednesday, 15th October 2008 at 01:44:01

The paragraph is really good. No fan will say if Rajini comes to politics he will be is fan. As rajini kanth says himself in Basha movie that his fan following came due to affection or love and not political mileage or fan heroism. More over Rajini is also loved by common people who may be not his diehard fans but when his movie comes they may go with the family and watch his movie one or two times. If rajini would have just had mass fan following he would have not generated revenue like this and he would not have been Asia's third highest paid actor. The common public says he makes movie from age of 6 year child to 60 year man. His movie always show less glamour and hence child can see. His movies are matured where an husband and wife can go and enjoy. His movie also shows how parenting should be done with childern. Padayappa and many more was the best example movie with all phases. Enjoyment in first half and maturity and parenting in second half. He is a class actor in giving movies to public and mass actorin generating revenues to public.
manna,Chennai
Tuesday, 14th October 2008 at 23:51:57

Instead of mentioning simply RAJINI we can mention as THALAIVAR henceforth.That gives more weightage to our THALAIVAR....isnt?
Raja,US
Tuesday, 14th October 2008 at 13:31:35

Makes a lot of sense to me. Rajini has all the rights to decide his future and I beieve he is smart enough to make a right decision.

Lets leave it at that and not prolong this topic.

Thanks all,
Raja

balamurugan,
Tuesday, 14th October 2008 at 11:10:36

u r insulting thalaivar RAJ NARAYAN. i dont know how the moderator allow this to publish? truly rajini is a noble man. Nalai enna nadakkum enbadhai avar mudivu seivaar. Naam mudivu seiya koodaadhu. Anbe shivam.

Ramana Neeye thunai

M.Balamurugan

venkatesh,somerset
Tuesday, 14th October 2008 at 10:47:40

Fans

He goes by astrology which I also belive in that. The saturn is in the 8th positonh till feb 2010. He will make decsion only by next year end. I am an ardent fan of Rajini. One has to understand the Fact that Lok Sabha polls are very much in the conrer. He need at leat an year or two to stablise things.

We shall wait for an year then we can come to conclusion

praveen,chennai
Tuesday, 14th October 2008 at 10:39:18

what Mr. Raj Narayanan has said is only his perception,it's not necessarily true.i would like to remind rajini's words again in ndtv.he said "i believe in destiny,i did not know that i will be here today,and i dont know what will happen tomorow","now im doing the role of an actor ,when god tells me to do a politicians role,i will defenitely do it." lets not forget we have cho's opinion as well that if rajini comes to politics we will have a better future.
when such great personalities with so much experience leave it to GOD,im surprised Mr. raj narayanan is almost predicting rajini"s future in the name of perception.as far as im concerned for everyhting there is time,only time will tell what our beloved rajini is going to do,i believe he is destined to someting big and great,lets honor his decesion and wait patiently "poruthar boomi alwar" :-)

karthick,India/Madurai
Tuesday, 14th October 2008 at 09:09:42

Why does Rajini never says things clearly, not even at this point. He just keeps his fans guessing and raises the expectations bar. When it comes to politics not even a single instance he has spoke clearly. If he is not really that interested to get in to politics, he should say it clearly. But he can get in to Politics and do something to good to the people of TN. I am sure he will never get in to politics other than makes us to keep guessing...
mohanraj,coimabtore
Tuesday, 14th October 2008 at 08:59:48

well said, we will wait for thalaivar to say the entry of poltics,we assure he should come for us,but his movement should be strong
tirupur,tirupur
Tuesday, 14th October 2008 at 08:52:21

Please publish this article in tamil
Sathish,UK
Tuesday, 14th October 2008 at 08:48:24

Raj Narayanan,
You have not covered the important aspect!
No one can force our SS to come into politics. It is upto him to decide.
We are expecting from our SS is nothing but the clear statement.

goku,sydney
Tuesday, 14th October 2008 at 08:03:50

how come Raj Narayanan be a fan after he calling rajini as a "freak"... and how come these articles get published in rajinifans??... are we following the same footsteps of AV,JV and kumudam?...
Sherfrose,US
Tuesday, 14th October 2008 at 07:30:30

Yes every Rajini fan should read this and think about it. I like him as an actor , as a superstar..he is great..he knows what to do at what situation..
meeran,doha
Tuesday, 14th October 2008 at 07:26:11

can u pot this artical
A.MOHAN,INDIA / TUTICORIN
Tuesday, 14th October 2008 at 07:03:26

DEAR RAJ,LIKE YOU MILLIONS FANS LOVE AS A GREAT HUMAN AND LOVEABLE PERSON ON/OFF THE SCREEN

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information