Related Articles
ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் - மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks about Superstar Rajinikanth
Sivaji Vs Dasavatharam ... Box Office Analysis
யார் அடுத்த சூப்பர் ஸ்டார்? - மதன் நச்!
தலைவர் ரஜினியை கடவுள் என்றே அழைத்து மகிழ்கிறார்கள்!
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஜப்பானில் ரஜினி
(Wednesday, 24th September 2008)

எஸ். ராமகிருஷ்ணன் பற்றி அறிமுகம் தேவையில்லை. பாபா படத்தின் வசனகர்த்தா. தமிழில் கவனிக்கப்படும் முன்னணி எழுத்தாளர். ஆனந்த விகடனில் வெளிவந்த  துணையெழுத்து, கதாவிலாசத்தின்  மூலம் வெகுஜன மக்களையும் வசீகரித்த இலக்கியவாதி.

ரஜினிக்கும் ஜப்பானுக்கும் உள்ள தொடர்பையும் அதன் பின்னணி விபரங்களையும் அவரது இணைய தளத்தில் அலசியிருக்கிறார். இனி ஓவர் டூ எஸ். ராமகிருஷ்ணன்.

சூப்பர்மேன் ஸ்பைடர்மேன் போல ரஜினிகாந்தை ஜப்பானிய மக்கள் ரசிக்கிறார்கள். அவரது திரைப்படங்கள் பற்றிய செய்திகள் கூட ஜப்பானில் விரும்பி வாசிக்கபடுகின்றன. சமீபத்தில் ஜப்பானில் உள்ள டொஹடோ என்ற நிறுவனம் தனது மெக்ஸிகன் சில்லி சிப்ஸ் பாக்கெட் ஒன்றின் முகப்பாக ரஜினியின் உருவப்படத்தை வெளியிட்டு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. சிப்ஸ் சாப்பிட்டவர்கள் அந்த பாக்கெட்டை அப்படியே பாதுகாத்து வைத்துக் கொள்கிறார்கள் அந்த அளவு ஹாட் ரஜினி , அவர்  ஜப்பானுக்கு வருவாரா என்று மக்கள் காத்திருக்கிறார்கள்.

அவரிடம் உள்ள ஆன்மீக தேடுதலும் எளிமையும் ஜப்பானிய மக்களை வெகுவாக கவர்ந்த அம்சம். அது போன்று ஆன்மிக ஈடுபாடு கொண்ட நடிகர் வேறு யாராவது இருக்கிறார்களா என்று நாங்கள் விசாரித்து கொண்டிருக்கிறோம். யாருமேயில்லை. என்று சொல்லி சிரிக்கிறார் யமாஷிடோ

 தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பலரையும் யமாஷிடோசந்தித்து உரையாடியிருக்கிறார். இந்த ஆய்விற்காக  முக்கியமான திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், விமர்சகர்கள் பலரையும் சந்தித்திருக்கிறார்.

ஜப்பானில் தமிழர்கள் அதிகமில்லை. நவீன தமிழ் இலக்கியம் குறித்த அறிமுகமும் ஜப்பானில் மிக குறைவே. ஆனால் சோழர்களுக்கும் ஜப்பானிய தேசத்திற்குமான தொடர்பு குறித்து தொடர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் தமிழ் சினிமாவின் முக்கிய போக்குகள் மாற்றங்கள் குறித்து ஒரு புத்தகம் ஒன்றை எழுத முயன்றிருக்கிறோம். அதற்கான முதல்கட்ட  ஆய்வு இது என்று தன் பயண நோக்கினை விவரித்தார் 

அவர்கள் தங்கியிருந்த அறையில் நாளிதழ்களில் வெளியான சினிமா பற்றிய செய்திகள், விளம்பர நறுக்குகள் நிரம்பியிருந்தன. தமிழில் வெளியாகி உள்ள சினிமா புத்தகங்கள், குறுந்தகடுகள், ஆங்கிலத்தில் வெளியான தமிழ்சினிமா பற்றிய கட்டுரைகள் என்று ஒரு புத்தகம் எழுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் கடும் உழைப்பு கண்முன்னே விரிந்து பரந்து கிடந்தது.

ரஜினியை நேரில் சந்தித்து இருக்கிறீர்களா என்று கேட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களுரில் உள்ள அவரது இல்லத்தில் ஒரு ஜப்பானிய குழுவோடு ஒருமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அதிகம் உரையாடியதில்லை என்றார்.

தொடர்ந்து படிக்க

http://www.sramakrishnan.com/view.asp?id=173&PS=1

நன்றி :  எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.


 

 


 
4 Comment(s)Views: 1171

Thinakar,
Thursday, 25th September 2008 at 08:39:00

It was a pleasant surprise to me see the name Hiroshi Yamashita in this article. He was my hostel mate during my PG days in Chennai and Yamashita was doing his Phd then. My next room neighbour and a good friend. Very nice person to be friend with. He used to talk very fluent tamil those days itself. I never thought he could be the japanese translator for Muthu. I will be glad to get in touch with him to cherish the golden days memories.

anbudan
Thinakar

Anonymous,
Thursday, 25th September 2008 at 07:15:12

Not here all over world our thalaivar is king........." The Lord cinema Industries " = Super Star...................
sundar,bangalore
Wednesday, 24th September 2008 at 22:46:09

THIS ARTICLE ITSELF SAYS "RAJINI IS KING"
N Ratnam,India/chennai/adyar
Wednesday, 24th September 2008 at 19:29:59

dear rajinites (all rajini fans to be called like this from now on) tell me, why japan people like rajini our thalaivar.. becos of
his speed ( surusuruppu)... they are known for their hardwork.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information