Other Articles
ஆசிரியர் கோபாலி தனது மாணவன் ரஜினி பற்றிச் சொல்கிறார்
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது
(Thursday, 16th October 2008)

அன்பு நண்பர்களே,

நம் அன்பு தலைவர் நம்மை எல்லாம் தன் சுய நலதிற்காக பயன்படுத்தி விட்டு இப்போது கை விட்டு விட்டது போல சிலர் புலம்புகிறார்கள்.
தலைவரை கேள்வி கேட்கும் முன் நாம் அவருக்காக என்ன செய்திருக்கிறோம் என்று சற்று யோசித்து பார்க்க வேண்டும்.  உடனே நான் அவருக்காக பேனர் கட்டினேன், போஸ்டர் ஒட்டினேன், முதல் நாள் முதல் ஷோ விசில் அடித்து பார்த்தேன் என்று பெருமையாக சொல்லாதீர்கள், இதையெல்லாம் நேற்று தோன்றிய நடிகர்களுக்கு கூட அவரவர் ரசிகர்கள் செய்து கொண்டிருகக்கிறார்கள். இவர்களை காட்டிலும் நாம் என்ன ஸ்பெஷலாக நம் தலைவருக்காக செய்து விட்டோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். தலைவரின் அறிக்கை பற்றி அவரை விமர்சிக்கும் முன் அவரின் சூழலை சற்று புரிந்து கொள்ளுங்கள். இது ஒன்றும் சினிமா திரைகதையல்ல அடுத்த காட்சியில் மாற்றி விடுவதற்கு. உங்களை சுற்றி உள்ளவர்கள் செய்யும் கிண்டலுக்காகவெல்லாம் நீங்கள் எதிர் பார்க்கும் முடிவை அவர் எடுத்து விட முடியாது. அவரை கேள்வி கேட்கும் முன் முதலில் அவரை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள்..

1.  சமீபத்தில் கட்சி ஆரம்பித்த சிலர் எங்கே அவர் வந்தால் தங்கள் கட்சி டெபாசிட் இழந்து விடுமோ என்ற பயத்தில், அவரின் செல்வாக்கை சீர் குலைக்க அவருக்கு எதிரான செய்திகளை சில மீடியாக்களின் மூலம் கட்டவிழ்த்து விடுகிறார்கள். (இதில் ஒரு மீடியா மட்டுமே இரண்டு தினசரிகள், நான்கு டிவி சேனல்கள், ஒரு வார இதழ் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது)

2.  தொடர் தோல்விகளால் பயந்து போன ஒரு சிறு நடிகர் தன் செல்வாக்கை எப்படியாவது மீட்டு விட கட்சி கொடி என்று இறங்கி இருக்கிறார். அவரை மக்களின் அபிமானம் பெற்றவராக காட்ட நம் தலைவரின் செல்வாக்கை குறைத்து காட்ட பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் செலவிடும் பணமும் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தனைக்கும் அந்த நடிகர் நம் தலைவரின் பெயரை சொல்லி வளர்ந்தவர்.

3. அவர் மீது பயத்தில் உள்ள பழுத்த அரசியல் கட்சிகள் கூட தங்கள் பங்கிற்கு அவரின் செல்வாக்கை குலைக்கும் வேலையில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தீவிரத்தை அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் காட்டியிருந்தால் நாடு முன்னேறி இருக்கும்.

4. திரையுலகில் அவரின் வளர்ச்சியை கண்டு பொறுக்காதவர்கள் இதுதான் நேரம் என்று தங்கள் பங்கிற்கு புழுதி வாரி தூற்றுகிறார்கள். இதில் நண்பர் என்ற போர்வையில் குளிர் காய்பவர்களும் உண்டு.

இப்படி அவரை சுற்றி ஒரு சதிவேலையை ஒரு பெரும் கூட்டமே பின்னி கொண்டிருக்கும் இந்த சூழலில் அவரின் ரசிகர்கள் ஆகிய நாம் செய்ய வேண்டியது என்ன?

"எப்ப மாட்டுவார்" என்று காத்திருந்த சில நடிகர்களின் ரசிகர் கூட்டங்கள் அடிக்கும் கிண்டலுக்கு பயந்து அவருக்கு எதிராக நாமும் பேசுவது சரியா சற்று யோசித்து பாருங்கள்.

முப்பது வருடங்களுக்கும் மேலாக தனக்குள் உள்ள ஒரு சிறந்த கலைஞனை மறைத்து வைத்துவிட்டு நமக்காக, நம்மை மகிழ்விப்பதற்காக நடித்து, நம்மை எல்லாம் இத்தனை நாள் சந்தோஷப்படுத்திய ஒரு நல்ல மனிதனுக்கு நாம் செய்ய போவது என்ன?

முதலில் அவரை கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு,
ஒரு இக்கட்டான சூழலில் இருக்கும் நம் அன்பு தலைவருக்காக நாம் இச்சூழலில் என்ன செய்ய போகிறோம்?

பட வெற்றியின் பொழுது அந்த வெற்றியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டு பெருமிதம் கொள்வது மட்டும் ஒரு நல்ல ரசிகனுக்கு அழகல்ல, இது போன்ற சோதனை காலத்தில், மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு நம் தலைவரின் பின்னால் படை போல் நிற்பது தான் ஒரு உன்மையான ரசிகனின் கடமையாகும்.
தலைவரின் ஆணையின்படி செயல் படுபவனே உண்மை தொண்டனுக்கு அழகாகும்...

ஒன்று படுவோம்!         

சூழ்ச்சிகளை தகற்போம்!!     

வெற்றி மாலை சூட்டிடுவோம்!!!

வாழ்க தலைவர்...

-கோபி தேசிங்


 
49 Comment(s)Views: 3482

Previous Page
Previous
123
Prasanna,India/Chennai
Friday, 17th October 2008 at 00:34:13

100% True, Fans should try to understand the situation. Please obey Thailavar’s order…….Keep him Peaceful.
boopathi,bangalore
Thursday, 16th October 2008 at 23:31:40

nice article gopi, keep it up we are and we will be with our superstar
m.mariappan30,india/tuticorin
Thursday, 16th October 2008 at 23:23:45

Dear gobi

I like your words. Kindly send like this type of words. After that some fans can get clear.
We dont want that. But this is our duty.
Because any one mother is not living a irrespective son. Maximum she is try to change him. same like that we want change them.

santhosh,chennai
Thursday, 16th October 2008 at 22:22:34

தலைவரின் ஆணையின்படி செயல் படுபவனே உண்மை தொண்டனுக்கு அழகாகும்...


Super lines gopi..


Sounder,los angeles, california
Thursday, 16th October 2008 at 22:06:39

I couldn't agree with you more and there are more tamil selfish and useless, stupid actors there who do nothing for tamil people but talks lot and make(us)tamil people stupid.
bharatha priyan,
Thursday, 16th October 2008 at 20:29:49

So frank article.Even after this they dont understand let them go...
EE RAA,
Thursday, 16th October 2008 at 19:52:24

மிக நல்ல பதிவு கோபி வாழ்ட்துக்கள்

ஈ ரா

Anonymous,
Thursday, 16th October 2008 at 18:50:11

if we guys have just treated him only as an actor; there wouldnt be no problem today or atleast if he have said it firmly about his decision about politics long back... there wouldnt be any problem. He asked for it
shiva,vijayawada
Thursday, 16th October 2008 at 12:46:18

100% True, we should be wait---------
Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information