Other Articles
அவருக்கு யாரும் கெடு விதிக்க முடியாது!
Put a full stop to the Tamasha
நன்றி தலைவா!
ரஜினி அரசியலில் என்ன சாதிக்க முடியும்?
அரசியல் நிலைப்பாடு: தலைவரின் தெளிவான அறிக்கை!
Fan club office bearer's urgent Chennai Meet!
Payum Puli broke record at Chennai Alankar theater
ரஜினி அரசியல்: ரசிகர்களிடம் ஏன் இந்த முரண்பாடு?
சென்னையில் திரளும் ரசிகர் வெள்ளம்!
பூர்ணம் விஸ்வநாதன் நினைவலைகள்
There is a lot of power in Rajini s eyes
வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்!
உங்களோடு சில நிமிடம் - 2
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும்: திருநாவுக்கரசர் கோரிக்கை
ஏதோ ஒரு இறை உத்தரவுக்காக அவர் காத்திருப்பது..
தேசிய திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் - புதிய கட்சி
Times of India hails Thalaivar as ‘World SuperStar’
Enthiran New Stills from Goa Shooting
Rajini is the epitome of stardom in the World!
ரஜினியை அரசியலுக்கு அழைப்பது சுரண்டிப் பிழைக்கவா?

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உங்களை உணர வேண்டிய தருணம் இது!
(Wednesday, 15th October 2008)

சினிமா பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பு முதல் முறையாக திரை விமர்சகர் விருது எனும் பெயரில் இந்த ஆண்டு சில கலைஞர்களைத் தேர்வு செய்து விருது கொடுத்தது.

இந்த விருது நிகழ்ச்சிக்கு ஸ்பான்ஸர் ஜே.கே.ரித்தீஸ் என்பதை மனதில் கொண்டு, மேலே படியுங்கள்.

இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்ட கையோடு இரண்டாகப் பிளந்தது. பிரிந்து போனவர்கள் முன்கூட்டியே பருத்தி வீரன் படத்துக்காக அமீருக்குப் பாராட்டு விழா நடத்தி விட்டார்கள். அந்த விழாவில் அமீரின் வாயில் சிக்கிக் கொண்டவர் கமல்ஹாசன். காய்ச்சி எடுத்துவிட்டார். நான் அப்போதே இதைக் கண்டித்து எழுதினேன்.

அதன் பிறகும் எக்கச்சக்க அமைப்புகளிடம் விருதும் பாராட்டும் வாங்கிவிட்டார் அமீர். பெர்லின் தொடங்கி பக்கத்திலிருக்கும் பெரியபேட்டை சந்துமுனை வியாபாரிகள் வரை அனைவரும் பாராட்டித் தள்ளி விட்டார்கள் இந்தப் படத்தை. விதவிதமாய் விருது கொடுத்தும் கவுரவித்து விட்டார்கள்.

இப்போது சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முறை. இவர்கள் சில தினங்களுக்கு முன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிறந்த இயக்குநருக்கான விருது பருத்தி வீரனுக்காக அமீருக்குக் கொடுக்கப்பட்டது. சிறந்த படம் அவர் இயக்கிய பருத்தி வீரன். சிறந்த நடிகை பருத்தி வீரன் புகழ் ப்ரியாமணி.

விருதை வாங்கிய அமீர், அன்றைய நாளிதழ்களின் சினிமா பக்கத்தில் முக்கிய இடம் பிடிக்குமளவு எதையாவது பேசி வைக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இந்த முறை ரஜினி பெயரை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்.

விழாவில் ரஜினி பற்றி அமீர் பேசியவை:

...சிறந்த நடிகர் என்று ரஜினிகாந்துக்கு விருது கொடுப்பது எங்களைப் போன்றவர்களை அவமானப்படுத்தும் செயல். அந்த விருத்துக்கு அவர் தகுதியானவர் இல்லை என்று அவரை உருவாக்கிய பாலச்சந்தருக்கே தெரியும். ஏன்... ரஜினிக்கே கூடத் தெரியும். இருந்தாலும் விருது கொடுப்பவர்கள் அவர் இருக்கும் இடம் தேடிப்போய் விருது கொடுப்பது கேவலமானது. வியாபாரத்தனம்...

ரஜினி, விஜய் போன்றவர்களை எந்த அடிப்படையில் சிறந்த நடிகர் என்று தேர்ந்தெடுத்து விருது கொடுக்கிறீர்கள். அவர்கள் நன்கு நடிப்பவர்களாக இருக்கலாம். பாப்புலர் ஹீரோக்களாக இருக்கலாம். ஆனால் விருதுக்குரிய கதைகளை அவர்கள் தேர்வு செய்வதே இல்லை. அப்புறம் எதற்கு அவர்களுக்கு விருது? என்றவர், சிறிது நேரம் கழித்து, நான் ரஜினியை மதிப்பவன். ஆனால் அவருக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பதை என்னால் ஏற்க முடியாது. வேண்டுமானால் அவருக்கு பாப்புலர் அவார்ட் என்று எதையாவது வழங்கலாம், என்று தன மேதாவித்தனத்தைக் காட்டினார்.

இதே அமீர் ஒகேனக்கல் பிரச்சினையின் போது ஜூவிக்கு அளித்த பேட்டியில் ரஜினியை தீவிரமாக ஆதரித்திருந்தார். அப்போது நாமும் அவரைப் பாராட்டினோம். இப்போதோ யாரிடமோ நல்ல பெயர் வாங்க எண்ணி, தேவையின்றி ரஜினியை அமானப்படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

அவரது இலக்கு விருதுக் கமிட்டிகள்தான் என்றால் அவர்களை நேரடியாகத் தாக்கியிருக்க வேண்டுமே தவிர, ரஜினியை அவமானப்படுத்தும் விதத்தில் அவர் பெயரை இழுத்திருக்கக் கூடாது.

அமீரின் பிரச்சினை என்ன?

பல அமைப்புகளும் மாநில அரசும் ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது கொடுப்பதுதான் அமீரின் பிரச்சினையா...? ரஜினி உலகத் தரமான நடிகர் என சர்வதேச அளவில் பெயரெடுத்தவர்.

மூன்றே மூன்று (அவற்றில் இரண்டு சராசரிப் படங்கள்) படங்களை இயக்கிவிட்டு எல்லா விழா மேடைகளையும் ஆக்கிரமித்துக் கொள்கிற அமீர் போன்ற இயக்குநர்களின் சான்றிதழ் ரஜினிக்கு இனி தேவையில்லை.

அடுத்து, ரஜினி எப்படிப்பட்ட நடிகர் எனத் தெரிந்து கொள்ள முள்ளும் மலரும், ஜானிக்கெல்லாம் கூடப் போகத் தேவையில்லை. சிவாஜியைப் பாருங்கள். மக்களை ஒரு புது உலகுக்கே கொண்டு செல்லும் உன்னதமான கலைஞன் அவர். நடிப்பில் சோகம் காட்டலாம். ஆனால் மின்சாரத்தைக் காட்ட முடியுமா... மின்னலின் வேகத்தை உணர வைக்க முடியுமா.. அந்த அற்புத வித்தை தெரிந்த ஒரே கலைஞன் ரஜினி எனும் உச்ச நட்சத்திரம்... கலை உலகின் ஒரே உச்ச நட்சத்திரம்.

சூரியனின் பெருமையை விளக்கிக் கொண்டிருப்பது போலத்தான், ரஜினியின் நடிப்புச் சிறப்பை விவரிப்பதும்.

ரஜினியின் நடிப்பைக் குறைசொல்லும் அமீர் எடுத்த படங்களை சற்றே அலசிப் பாருங்கள். அவற்றில் என்ன லாஜிக் இருந்தன... என்ன பெரிய கலைச் சிறப்பு இருந்தது?

அமீர் போன்றவர்களின் படங்களில் நிறைகளை விட குறைகளே மேலோங்கி இருந்தாலும், அவர்களிடம் இன்னும் வெளிப்படாமல் இருக்கிற திறமைகளை வெளிச்சம் போடவே பத்திரிகைகள், விமரிசகர்கள் இவ்வளவு ஊக்கமளிக்கிறார்கள். அதைத் தவறாகப் புரிந்து கொள்ளும் அமீர், தானே இந்த திரையுலகைத் திருத்த வந்த சாக்ரடீஸ் எனும் மனப்பான்மையில் பேசுவது அவரது அறிவீனத்தையே காட்டுகிறது.

அவர் நின்று பேசிய மேடைக்குச் சொந்தக்காரரே ஜேகே ரித்தீஸ் என்பவர்தான். விழாவில் அவருக்கு மாலை மரியாதை என சிறப்பு வேறு செய்தார்கள் அமீரும் பாலச்சந்தரும். இவர்கள் பெரிதாகப் புகழ்ந்த பத்திரிகையாளர் சங்கம் மற்றும் அவர்கள் தந்த விருதின் லட்சணத்தைச் சொல்ல இது ஒன்றே போதும். அதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத அரைவேக்காடா அமீர்?

இவர்களைப் போல எந்த மேடை கிடைக்கும், எந்த விருது கிடைக்கும் என அலைகிற கலைஞனா ரஜினி?

அமீர், உங்கள் நிலை உணர்ந்து பேசுங்கள். ஒரு மேடையில் ரஹ்மானி்ன் கால்ஷீட் கிடைக்கவில்லையே என ஏக்கம் தெரிவித்தீர்கள். இரண்டு நாள் கழித்து அதே ரஹ்மானை அசிங்கமாகத் திட்டினீர்கள்.

யோகியில் சறுக்கினால் உங்களுக்கு ‘இறைவன்புரத்திலிருந்து இலவசமாகக் கிடைக்கும் சாந்தியும் சமாதானமும்’ கூடக் கிடைக்காமல் போகும். இந்த மேடைகள் எம்மாத்திரம்...!

நமது வருத்தமெல்லாம், இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக வந்திருந்த பெரியவர் கே.பாலச்சந்தர் கூட அதுபற்றி ஒரு வார்த்தையும் பேசாமல், அமீரின் கருத்தை 100 சதவிகிதம் ஆதரிப்பதாக 5 முறை அழுத்தம் திருத்தமாகக் கூறியதுதான்.

அதுமட்டுமல்ல... ‘ரஜினி – கமலை வைத்து நான் படமெடுத்த போது அவர்கள் சாதாரண கலைஞர்களே... இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அது என் தப்பில்ல சாமி... இப்ப போனா போகுதுன்னு எனக்கு ஒரு படம் பண்ணிக் கொடுத்தார் ரஜினி. மத்தபடி அவங்க பாப்புலாரிட்டிக்கு நான் பொறுப்பல்ல... அமீர் சொன்னது சரிதான், என்றார்.

ரஜினி போனால் போகட்டும் என்றா குசேலனில் நடித்தார்? அந்தப் படம் அவரைப் படுத்திய பாடு என்ன... அதில்கூட தன் குருவுக்கு சின்ன மன வருத்தம்கூட வரக் கூடாதென்று தன் சொந்தப் பணத்தை தியேட்டர்காரர்களுக்குக் கொடுத்தவரல்லவா ரஜினி... (இன்னும்கூட அந்தப் பிரச்சினை ஓய்ந்த மாதிரி தெரியவில்லை!)

நல்ல உலகம்டா சாமி!

-Sanganathan


 
41 Comment(s)Views: 9169

Previous Page
Previous
123
thirumalai kumar,bangalore
Wednesday, 15th October 2008 at 18:49:53

ரஜினி போனால் போகட்டும் என்றா குசேலனில் நடித்தார்? அந்தப் படம் அவரைப் படுத்திய பாடு என்ன...

தலைவா உன் வியர்வையை விழலுக்கா இறைத்தாய்????

நன்றி கெட்ட மாந்தர் என் தலைவன் அறிய வேண்டிய பாடம்.

For everyone who exalts himself will be humbled, and he who humbles himself will be exalteட்

பொறுத்தார் பூமி ஆள்வார்

திரும‌லை குமார்


Previous Page
Previous
123

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information