Chennai-600028, one of the real offbeat and entertaining movies in recent times, was all about friendship.
The film's producers SPB Charan (Capital Film Works), JK Saravana (Tantra Films, Singapore)and director Venkat Prabhu are bosom buddies, and the film’s essential storyline was about camaraderie fused over cricket and locational closeness.
So it was fitting that the film's 100th day celebration, held in Chennai yesterday, was graced by two of the best known pals in film circuit Rajnikanth and Kamal Haasan. Adding an extra flavour to the occasion was the presence of the ever-friendly SP Balasubramaniam.
Speaking on the occasion, Rajnikanth said, "Everyman needs a mentor in his life. Equally important is a friend, who helps one to shape one's thoughts and character"Â.
In fact, Rajni went on say that friends come higher in hierarchy than the wife in inter-personal relationships.
The audiences were taken by surprise when Rajnikanth and Kamal Haasan occupied the stage as the invitations for the event did not carry their names.
குரு எவ்வளவு முக்கியமோ அதுபோல் வாழ்க்கையில் நண்பர்கள் மிக முக்கியம் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
`வாழ்க்கையில் குரு எவ்வளவு முக்கியமோ அதுபோல் நண்பர்களும் மிக முக்கியம்' என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
சினிமா படவிழா
பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் தயாரித்து, கங்கை அமரனின் மகன் வெங்கட்பிரபு டைரக்ட் செய்த படம் `சென்னை-600028'. இது கிரிக்கெட் விளையாட்டை கருவாகக் கொண்ட படம். இந்தப் படத்தின் 100-வது நாள் விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்கள். படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இருவரும் கேடயங்களை வழங்கினார்கள்.
ரஜினிகாந்த் பேச்சு
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
இன்று நண்பர்கள் தினம். நண்பர்கள் கூட்டாகச் சேர்ந்து எடுத்த இந்த படவிழாவில் நானும் என் நண்பர் கமலஹாசனும் கலந்து கொண்டதில் சந்தோஷப்படுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியில் வெளி வந்த `லகான்' என்ற படத்தை தமிழில் என்னை வைத்து தயாரிப்பதற்காக ஒரு தயாரிப்பாளர் வந்தார்.
படத்தை டைரக்ட் செய்யப் போகிறவர் யார்? என்று கேட்டேன். அவர் ஒரு டைரக்டரின் பெயரை சொன்னார். இந்தப் படத்தை பெரிய டைரக்டர் டைரக்ட் செய்தால்தான் பொறுத்தமாக இருக்கும் என்றேன். சில பெரிய டைரக்டர்களைத் தேடினோம். அவர்கள் பிசியாக இருந்ததால், அந்தப் படத்தை பண்ண முடியவில்லை.
சென்னை-28 படம் வித்தியாசமான கதை. வெங்கட்பிரபு அருமையாக டைரக்ட் செய்திருந்தார். அவருடைய வெற்றியைப் பார்த்து பெற்றோர்கள் எவ்வளவு பெருமைப்பட்டார்கள் என்பதை இங்கு பார்த்தோம்.
ஜோதிடர் கதை
சுமார் 58 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஒரு ஜோதிடரைப் போய் பார்த்து, தன் ஜாதகத்தைக் காட்டி வாழ்க்கையில் நான் சந்தோஷமாக இருப்பேனா? என்று கேட்டார். ஜோதிடர் சொன்னார், ``அட, முட்டாள் உன் பிள்ளைகள் ஜாதகத்தைக் கொண்டு வா. நீ சந்தோஷமாக இருப்பாயா? என்று சொல்லுகிறேன். பிள்ளைகள் சந்தோஷமாக இருந்தால்தான் நீ சந்தோஷமாக இருப்பாய்'' என்றார்.
பிள்ளைகள் சாதனை செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. நல்லவர்களாக இருந்தால் போதும். உங்கள் அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்தினால், திருப்திப்படுத்தினால் இந்த சமுதாயத்தையே திருப்திப்படுத்திய மாதிரி.
நண்பர்கள் முக்கியம்
1983-ல் நான் எங்க அப்பாவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தேன். அவருக்காக தனி கார் எல்லாம் கொடுத்து, 2 வேலைக்காரர்களையும் நியமித்தேன். 10 நாட்கள்தான் அவர் சென்னையில் இருந்தார். மீண்டும் நான் பெங்களூருக்கே போகிறேன் என்றார்.
உங்களுக்கு இங்கு என்ன குறை என்று கேட்டேன். என் நண்பர்கள் இங்கு இல்லையே என்றார். வாழ்க்கையில் குரு எவ்வளவு முக்கியமோ, அதுமாதிரி நண்பர்களும் முக்கியம். வாழ்க்கை துணைவியை விட நண்பர்கள் முக்கியமானவர்கள். வெங்கட்பிரபு, சரண் மற்றும் அந்தப் படத்தில் பணிபுரிந்த நண்பர்களின் நட்பு தொடர வேண்டும்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
கமலஹாசன் பேச்சு
இந்த விழாவில் கமலஹாசன் பேசியதாவது:-
இளம் வயதில் நானும் ரஜினியும் இந்தப் படத்தைப் போல் ஒரு டீமில் விளையாடி இருக்கிறோம். எங்களுக்குக் கேப்டனாக இருந்தவர் கே.பாலசந்தர். நாங்களும் நாடகங்களில் எல்லாம் நடித்து இருக்கிறோம். அப்போது எதிர்காலம் தெரியாத இளைஞர்களாக இருந்தோம். ஆனால் இந்தப் படத்தின் கலைஞர்கள் எங்களைவிட கெட்டிக்காரர்கள்.
எனக்கு கிரிக்கெட் ஆர்வம் போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்படி சொல்வதை தேச துரோகம் மாதிரி நினைப்பார்கள். இந்தப் படம் பார்த்த பிறகுதான் எனக்கு மீண்டும் கிரிக்கெட் ஆர்வம் வந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் கங்கை அமரனுக்கும் இது சந்தோஷமாகவே இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்த வெற்றியை தேடி போக வேண்டும்.
பிரியக்கூடாது
அடுத்தப் படத்தின் வெற்றி விழாவிலும் நானும் ரஜினி சாரும் கலந்து கொள்வோம். அவரைக் கேட்காமலேயே சொல்கிறேன். அவருக்கு எது பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்.
யுவன் சங்கர்ராஜா ஆச்சரியமான திறமைசாலி. அந்தப் படத்துக்கு இசை அமைத்தவரா இந்தப் படத்துக்கும் இசை அமைத்தார்? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு திறமைசாலி. இந்த சந்தோஷமான கூட்டு முயற்சி தொடர வேண்டும், பிரியக்கூடாது.
இவ்வாறு கமலஹாசன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கங்கை அமரன் கடவுள் வாழ்த்து பாடினார். நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகை சங்கீதா, ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், தரணி, சீமான், இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா, எடிட்டர் மோகன், வசந்தகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
|