'ஒரு பஸ் கண்டக்டராகத் தம் வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த், நடிகரானதோ, சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தைப் பெற்றதோகூட வியப்பல்ல. தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளுள் ஒருவராக அவரை லட்சக்கணக்கானோர் கருதத் தொடங்கியது மிக முக்கியமான திருப்பம். இத்தனைக்கும் ஒருமுறைகூட வெளிப்படையாகத் தமக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக அவர் காட்டிக் கொண்டதில்லை! சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியாக ரஜினி வெளியிட்ட சில கருத்துகள் மட்டுமே அவர்மீது இப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன என்பது வேறெந்த நடிகர் விஷயத்திலும் இதற்குமுன் நடவாதது.
ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நாளில், ரஜினி என்கிற மிகப்பெரிய ஆளுமையின் முழுப் பரிமாணத்தைத் துல்லியமாக வெளிக்கொண்டு வருகிறது.'
கிழக்கு பதிப்பகத்தின் ரஜினி சகாப்தமா? புத்தகம் இப்போது புத்தம் புதிய பதிப்பாக கடைகளில் கிடைக்கிறது. விபரங்களுக்கு அணுகவும்.
http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=bio&itemid=92
|