Related Articles
Rediff dives in to villain roles played by The Boss
Art Director Thotta Tharani on Sivaji
The man who shot Sivaji..... K V Anand
Director Shankar Sun Tv Interview English Transcript
Superstar wishes for Periyar movie success ... Periyaar Banner at Udhayam Theatre
ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார், வேறு சூப்பர் ஸ்டார் வரவே முடியாது - விஜய்
ஆஷ்ரம் பள்ளி 15-வது ஆண்டு விழா
Thank you Sify for announcing www.rajinifans.com as No.1
Is Superstar Rajinikanth Chandramukhi running or made to run?
Kungumam : Is it true that Chandramukhi broke Haridas record?

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
Writer Sujatha on Sivaji The Boss
(Saturday, 26th May 2007)

சிவாஜி படத்தின் வசனகர்த்தாவும் முன்னணி எழுத்தாளருமான சுஜாதா,  சிவாஜி பற்றிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

சூப்பர் ஸ்டார் நடித்த காயத்ரி, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களை தொடர்ந்து சிவாஜி படத்திலும் சுஜாதா வசனம் எழுதியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் ரசனையை பின்னுக்கு தள்ளிவிட்டதாக படையப்பாவுக்கு விமர்சனம் எழுதிய சுஜாதா, ரஜினி படத்துக்கு கதை, வசனம் எழுதியதே ஆச்சர்யமான விஷயம். பாபா படத்திற்கும் சுஜாதா தான் வசனம் எழுதுவதாக இருந்தது.

பாய்ஸ் சறுக்கலுக்கு பின்னர் சிவாஜி, சுஜாதாவுக்கு நல்ல பெயரை வாங்கி தரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் சுஜாதாவின் வாசகர்கள். பார்க்கலாம்!

சிவாஜி பற்றி சுஜாதா என்னதான் சொல்கிறார்?


"1. ‘சிவாஜி’ ரஜினி படமா, ஷங்கர் படமா?

ரஜினி நடிக்கும் ஷங்கர் படம்.

 

2. ரஜினி ரசிகர்களின் எதிர்-பார்ப்புகள் அனைத்தும் நிறை-வேறுமா?

நிறைவேறும், அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குப் பங்கம் வராமல்! அதே சமயம்...

 

3. அதே சமயம்..?

ஒரு ஷங்கர் படத்தின் கதைத் திருப்பங்களுக்கும் சுவாரஸ்யமான முரண்பாடுகளுக்கும் பிரமாண்டத்துக்கும் குறைவிருக்காது.

 

4. ரஜினி என்றால், பன்ச் டயலாக் இருக்குமா?

இருக்கிறது. விவேக் ம ;லம் சொல்ல வைத்துவிட்டோம். பன்ச்சுக்கு பன்ச்; டிக்னிட்டிக்கு டிக்னிட்டி!

 

5. ஏன் இத்தனை தாமதம்?

நல்ல கேள்வி! படத்தில் பணிபுரிந்த அத்தனை கலைஞர்களும் இந்தியாவின் சிறந்த கலைஞர்கள். ரஜினி, ஷங்கர், ஏவி.எம். படம் என்பதால் தனிப்பட்ட சிரத்தையுடன் பார்த்துப் பார்த்துச் செய்ததால் தாமதம். லேட்டாக வந்தாலும் நீட்டாக வந்திருக்கிறது.

 

6. படத்தின் theme என்ன?

‘சிவாஜி’ அமெரிக்காவிலிருந்து வந்து, முதல் பாதியில் விழுகிறார்; இரண்டாம் பாதியில் எழுகிறார்!

 

7. கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்..?

சொல்கிறேனே... அடுத்த வாரம்! "






 
0 Comment(s)Views: 847

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information