Related Articles
ரஜினிகாந்த் 2023 இமயமலை பயணம் புகைப்பட கவரேஜ்
அலப்பற கெளப்புறோம் : ஜெயிலர் ஸ்பெஷல்
ரஜினி சார் ஒரு ரெக்கார்ட் மேக்கர் - ஜெயிலர் இசை வெளியீட்டு விழா
தலைவரின் அலப்பறை… மாஸ் காட்டும் ஜெயிலர் Hukum பாடல்!
ஜெயிலர் காவாலா பாடல் – VIBE அலையிலிருந்து வெளிவராத ரசிகர்கள்!
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை உயர் அதிகாரி அழைப்பு
முத்துவேல் பாண்டியனின் என்ட்ரி - ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என்டிஆர் (NTR) நூற்றாண்டு விழாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்!
தமிழ் திரையுலகம் இதுவரை பார்த்திராத கதைக்களம்.. விடுதலை படக்குழுவினரை நேரில் பாராட்டிய தலைவர் ரஜினி
நீடா அம்பானியின் கலாச்சார மையம் திறப்பு விழா... புது லுக்கில் தலைவர் ரஜினிகாந்த்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!
(Saturday, 26th August 2023)

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வருவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

படம் வெளியான ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.375 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. தற்போது படம் வெளியாகி 15 நாட்களைக் கடந்த நிலையில் இதுவரை உலக அளவில் படம் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது ‘2.0’ படத்துக்குப் பிறகு ரஜினியின் இரண்டாவது ரூ.500 கோடி க்ளப் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கமலின் ‘விக்ரம்’ படம் ஒட்டுமொத்தமாக உலக ரூ.430 கோடி வரை வசூலித்திருந்தது. தற்போது அந்த சாதனையை ‘ஜெயிலர்’ முறியடித்துள்ளது. மிகப் பெரிய ஹிட்டான ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தின் ரூ.500 கோடி வசூலையும் ‘ஜெயிலர்’ முறியடித்து முன்னேறி வருகிறது.






 
0 Comment(s)Views: 1307

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information