சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளிவந்து வெற்றி நடை போட்ட தர்பார் திரைப்படம் தற்போது ஜப்பானில் வெளிவந்து மீண்டும் ஓர் சாதனையை படைத்துள்ளது..
தனக்கென உலகும் முழுவதிலும் ரசிக பட்டாளத்தை கொண்ட நடிகர் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஜப்பானிலும் தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை வைத்துள்ளார்...
ஜப்பானில் வெளியான முதல் தமிழ் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்து திரைப்படம் ஆகும்...முத்து திரைப்படம் மூலம் ஜப்பானில் பல சாதனையை படைத்தது, அது மட்டும் அல்லாது அந்த படத்தை பார்த்து பல ஜப்பான் மக்கள் ரஜினியின் ரசிகர்கள் ஆகினர்... வருட வரும் ரஜினி படம் வெளியாகவில்லை என்றால் முத்து திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட்டு கொண்டாடுவார்கள்..
தற்போது கடந்த ஆண்டு வெளியான தர்பார் திரைப்படம் ஜப்பானில் திரையிட ஏற்பாடுகள் தீவிரமடைந்தது, பின் நேற்று தர்பார் படத்தின் டிக்கெட் வினியோகம் தொடங்கி வரும் 21ம் தேதி வரை அனைத்து காட்சிகளின் டிக்கெட்-களும் விற்று தீர்ந்தது...
All housefull shows for Darbar from today to 21st at Japan MKC plex 🔥
#DarbarThiruvizhaJapan One & only Superstar @rajinikanth என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் ட்வீட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்...இது வரை வெளியான தமிழ் படங்களில் இது போல் முன் கூட்டியே டிக்கெட் விற்பனை ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போலீஸ் கமிஷ்னர் ஆக கலக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது...படத்தின் பின்னணி இசையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பார் அனிரூத் அவர்கள்...தர்பார் திரைப்படம் இந்தியாவில் வசூலை குவித்தது போல் ஜப்பானில் வசூலில் வெற்றிபெறும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Courtesy : https://sentamizhnews.blogspot.com
|