தமிழகத்தில் கொரோனாவில் இரண்டாவது அலை காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பால் கடும் மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியையும் அரசு சந்தித்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், வாய்ப்புள்ளவர்கள் தாமாக முன்வந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். தனது பங்களிப்பாக கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சத்தை முதல்-அமைச்சரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், “கொரோனா எனும் உயிர்க்கொல்லி நோயை ஒழிக்க தமிழக அரசாங்கம் கொண்டுவந்த கட்டுப்பாடுகளைப் பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் கொரோனா எனும் நோயை ஒழிக்க முடியும். இது பொதுமக்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள்” என்று அவர் தெரிவித்தார்.
|