இந்திய திரை உலகின் உயரிய விருதான "தாதா சாகேப் பால்கே" விருது இந்த ஆண்டு ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது !!!
மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதை அறிவித்தவுடன் பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது !!!
அதுவும் பிரகாஷ் ஜவடேகரும், தனக்கு மிகவும் பிடித்த படம் ரஜினியின் அண்ணாமலை என்றும், இவ்விருதுக்கு ரஜினியின் பெயர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அறிவித்த போது ரஜினி ரசிகர்கள் உண்மையில் சந்தோசத்தின் எல்லைக்கே சென்று விட்டனர் !!!
அதிலும் பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் முதல்வர் பிரென் சிங், கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆகியோர் ரஜினியை தலைவர் என்றே குறிப்பிட்டு வாழ்த்தியது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது !!!
இது வழக்கம் போல ரஜினி எதிர்ப்பாளர்களின் வயிற்றெரிச்சலையும் வழக்கத்துக்கு அதிகமாக சம்பாதித்து இருக்கிறது !!!
ஆனால் தேர்தல் காலம் !!! என்ன செய்ய முடியும் ? சிலர் அவசர அவசரமாக கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று மறைமுகமாக ரஜினியை சீண்டிய ஸ்டாலின் வாழ்த்துகிறார் !!!
எடப்பாடி, ஓபிஎஸ் போன்ற ஆளும் கட்சி தலைவர்களும் வாழ்த்துகிறார்கள் !!! ஒரு பேட்டியின் போது ரஜினியை போல மிமிக்கிரி செய்து கிண்டல் செய்த TTV தினகரனும் வாழ்த்துகிறார் !!! ரஜினி இளைஞர்களை கெடுக்கிறார் என்று குற்றம் சாட்டிய பாமகவும் வாழ்த்தி இருக்கிறது !!!
அவ்வளவு ஏன் ? ரஜினியை படு பயங்கரமாக விமர்சித்து வந்த சத்யராஜ் கூட வாழ்த்தி வீடியோ வெளியிட்டுள்ளார் !!!
விருது அறிவித்த உடனே ரஜினியின் ரசிகர்களின் வாக்குகளை கவர்வதற்கு பாஜக இந்த விருதை அறிவித்துள்ளது என ஒரு கோஷ்டி பொங்கியது. அந்தந்த கோஷ்டியின் தலைவர்கள் எல்லாம் ரஜினியை வாழ்த்தியவுடன் தாங்களும் கமுக்கமாக ரஜினியை வாழ்த்திவிட்டு செல்கின்றனர் !!!
மோடி வாக்குக்காக செய்கிறார் என்றால், இவர்கள் செய்வது என்ன ? வேறு ஒருவர் பெயரை சொல்லி கைதட்டல் வாங்குவதற்கு இந்த தமிழன் நாக்கை புடிங்கிக்கொண்டு சாவான் என்று சூளுரைத்த சத்யராஜ் இன்று 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்றும், தமிழ் சினிமாவின் வியாபாரத்தை உலகெங்கிலும் விரிவு படுத்தினார் என்று புகழாரம் சூட்டுவதற்கு என்ன காரணம்? தான் சார்ந்துள்ள திமுகவிற்காக ஸ்கோர் செய்கிறாரா?
இவங்களுக்கு ரஜினி பாசம் வந்தா அது கலைத்தாகம் !!! வருஷா வருஷம் கலைக்கு விருது கொடுக்குறவங்க ரஜினிக்கு கொடுத்தா அது அரசியல் !!! தட் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மொமெண்ட் !!!
ரஜினி அரசியலுக்கு வரேன் என்று சொன்ன போது பாஜகவின் முகமாக வருகிறார் என்று குற்றம் சாட்டினார்கள். அவர்கள் கணக்குப்படி பார்த்தாலே அவர் அரசியலுக்கு வராமல் போனதால் அவர் மீது பாஜக தான் செம்ம காண்டாக இருக்க வேண்டும். இந்த போராளிகள் லாஜிக்கே புரியலப்பா !!!
ஒரு கோஷ்டி ரஜினி இதுக்கு தகுதியானவரான்னு தற்குறித்தனமா கேட்குது !!! கமல்ஹாசனுக்கு கொடுக்கணும் என்று சம்மந்தமே இல்லாத comparison !!!
கமல் சிறந்த நடிகர் தான். ஆனால் அவரை பார்த்தா ஜப்பான் காரன் தமிழ் கற்றுக்கொண்டான்?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசும் போது இந்திய ஜப்பான் உறவில் முக்கிய நபர் என்று கமலையா குறிப்பிட்டார் ?
சுருங்கிக்கிடந்த தமிழ் சினிமா மார்க்கெட்டை இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் விரிவாக்கம் செய்தது யார் ?
உங்களுக்கு கமல் மேல பாசம் எல்லாம் இல்ல… ரஜினி மேல காண்டு !!! அவ்வளவு தான். கமல் சிறந்த நடிகராக இருந்தாலும் மக்களின் இதயத்தை வென்றது ரஜினியே !!!
சரி, அதை விடுவோம்… ரஜினி அரசியலுக்கு வரலைன்னு சொன்ன பின்னாடியும் அவரை இன்னும் தலைவர்ன்னு கூப்பிடுறாங்களா என்று சில அறிவு ஜீவிகள் கேட்டது !!!
சோசியல் மீடியா பார்த்து வளர்ந்த குழந்தைகளுக்கு 5 அறிவு தான் இருக்கும் போல !!! ஒரு மிட்டாய் வாங்கி தரவில்லை என்பதற்காக அம்மாவை யாரும் அத்தை என்று பெயர் மாற்றி அழைக்க மாட்டோம் !!!
அவர் அரசியல் அறிவிப்பு செய்யும் முன்னரே அவர் எங்கள் தலைவர் தான் !!! திரையில் தோன்றும் ரஜினியை விட நிஜ வாழ்க்கை ரஜினியை தான் அவரது ரசிகர்கள் அதிகம் கொண்டாடுவது !!!
என்னை பற்றி தனிப்பட்ட விதத்தில் பலருக்கு பல விட அபிப்பிராயம் இருக்கலாம். இவன் இப்படி தான் என்று சில புரிதல் இருக்கும். அப்படிப்பட்ட புரிதலில் … நான் இப்படி தான், என் கேரக்டர் இப்படி தான் என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் அம்மா அப்பா ரஜினி கிருஷ்ணர் போன்றோரின் தாக்கம் இருக்கும்…
என்னை தனிப்பட்ட முறையில் செதுக்கியவரை / எப்போதும் என்னை நேர்மறை எண்ணத்திலேயே இருக்க கற்றுக்கொடுத்தவரை தலைவர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.
நான் ஒன்றும் அரசியல் செய்து மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவனையோ, ஊழல் செய்பவனையோ தலைவன் எனக் கொண்டாடவில்லை. உழைத்து சம்பாதிப்பவரை தான் தலைவர் என்கிறேன்.
மிக முக்கியமான ஒன்று. அவர் அரசியலில் இல்லை என்றாலு அவருக்கான மரியாதை அரசியல் அரங்கில் இருந்துக்கொண்டே தான் இருக்கிறது !!!
இதே இவர்கக்கு ஏதுவான நடிகராக இருந்தால் 'ஆளப் போறான் தமிழன்' ஆஹா ஓஹோ என்று பொங்கி இருப்பார்கள். ரஜினி என்பதால் வயிற்றெரிச்சல் !!! தேர்தல் காலம் என்பதால் அதைக் காட்டவும் முடியவில்லை….
தமிழன் வளர்ந்தா தமிழ் தானா வளரும் என்று அவர் கூறியது போல, தானும் வளர்ந்து, ஜப்பானியரையும் தமிழ் கற்க வைத்த "தாதா சாஹேப் பால்கே" ரஜினிக்கு…… "தலைவர்" ரஜினிக்கு வாழ்த்துக்கள்….
லவ் யு தலைவா !!!
- விக்னேஷ் செல்வராஜ்.
இதோ விஐபி மற்றும் பெரிய பிரபலங்கள் சமூக ஊடகங்கள்
வழியாக எங்கள் தலைவரை வாழ்த்துகிறார்கள்!!
|