தாம் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி தம்மை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
தற்போது அரசியலுக்கு ஏன் வர முடியவில்லை என்பதற்கான காரணங்களைத் தாம் ஏற்கெனவே விரிவாக விளக்கி உள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற அறிவிப்பை ரஜினி மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி அவரது ரசிகர்கள் சார்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“நான் என் முடிவைக் கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டாம்,” என்று ரஜினி கேட்டுக் கொண்டுள்ளார்.
|