தேவர் சமுதாயத்தை இழிவு படுத்தினாரா ரஜினி?
பத்திரிக்கைகளில் இந்த விஷயம் வெளியான போது, எனக்கு பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை. தேன்கூடு வலை தளத்திற்கு சென்ற போது, அதிகம் பார்வை இட்டவை பகுதியில் இந்த விஷயம் முதலில் இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. சரி அப்படி என்ன தான் செய்து விட்டார் ரஜினி என்று தெரிந்து கொள்ள குமுதம் வலை தளத்திற்கு முதல் முறையாக சென்றேன்.
அந்த விஷயத்தை படித்ததும் எனக்கு சிரிப்பும், கோபமுதான் வந்தது, குமுதம் மீதும் சேதுராமன் மீதும்
விழாவில் ரஜினி பேசியது இது தான்.
-----------------------------------------------------------------------------------
டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்தபோது பயந்தேன். ஷாட் ஓ.கே. ஆகுமா என்கிற தவிப்பு எனக்குள் இருக்கும். அவர் படங்களில் நடித்து 30 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சிவாஜியில் நடிக்கும்போதும் அதே பயம் இருக்கிறது. ஷாட் ஓ.கே. ஆகுமா, ஷங்கர் ஏத்துக்கிட்டாரா என்றெல்லாம் யோசிக்கிறேன்.
இதில் விவேக்கும் என்னோடு நடிக்கிறார். சிவாஜி ரிலீசுக்கு பிறகுதான் விழாக்களில் கலந்துக்கணும் என்று முடிவு எடுத்திருந்தேன். விவேக் இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்தார். சில விஷயங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த விழாவையும் விதிவிலக்கா கருதி கலந்துக்க சம்மதித்தேன்.
`வீரா‘ படத்தில் விவேக் என்னோடு நடித்தார். அப்ப அவர் சின்ன பையன் மாதிரி இருந்தார். வசனம் நல்லா பேசினார். திறமைசாலி. அதன் பிறகு இப்போது `சிவாஜி’யில் முழு படத்திலும் விவேக்குடன் நடிக்கிறேன். எனக்கு ஷாட் முடிந்ததும் விவேக்குக்கிட்டே போய் உட்கார்ந்து பேசிக்கிட்டே இருப்பேன். அவர் மிகப்பெரிய அறிவாளி. விஞ்ஞானம், கம்ப்ïட்டர், வரலாறு, புவியியல் என்று எல்லாவற்றையும் தெரிஞ்சி வச்சிருக்கார்.
எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க.
இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது. பாலசந்தர் ஒரு சமூகத்தை சேர்ந்தவர். எல்லார்கிட்டேயும் நல்லா பழகுவார்.
விவேக்குடன் சூட்டிங் போகும்போது அறிவாளியா பேசுவார். லைப்ரரி, புத்தகங்கள் என்றுதான் இருப்பார். சிந்தனையாளர். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது. அதன் பிறகுதான் தேவர் என்று புரிந்தது.
புகழின் உச்சியில் இருந்தாலும் ஒரே மாதிரி இருக்கணும். புகழ் ஆயிரம் கிலோ பாறை மாதிரி. அதை `பேலன்ஸ்’ ஆக வச்சிக்கணும். கொஞ்சம் ஆடினால் காலில் விழுந்து விடும். விவேக் கதாநாயகனாக நடித்த இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
-----------------------------------------------------------------------------------
இதில் ரஜினி தேவர் சமுதாயத்தை எப்படி இழிவு படுத்தினார். நடை, உடை, பாவனைகள் பிராமணர் மாதிரி தெரிந்தது என்று தானே சொன்னார், அவர் புத்திசாலி தனத்தை வைத்து அவர் பிராமணர் என்று நினைத்தேன் என்று சொன்னாரா . . ?
எனக்கு ஜாதி மீது நம்பிக்கை கிடையாது. பணம், புகழ் இருந்தா தான் மதிப்பாëங்க. இல்லாட்டி ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல விட்டுடுவாங்க. இது கரெட்டு தானுங்களே
இந்தந்த ஜாதிக்காரங்க இப்படி இடிப்பத்தான் இருப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்காங்க. தலித்துகள் இப்படித்தான் இருப்பார் கள். ரெட்டியார்கள், பிராம ணர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் கிடையாது இது சேதுராமன் அவர்கள் காதிலோ அல்லது குமுதம் ஆசிரியர் காதிலோ விழவில்லையா . . . ?
தன் குணத்தாலும் திறமையாலும் உயர்ந்து நிற்பவர்களை புகழ்ந்தோ, இகழ்ந்தோ பிழைப்பது இந்த பத்திரிக்கைகளுக்கு பிழைப்பாகி விட்டது.
என் கல்லூரியிலும், பள்ளியிலும் நடந்த சில விஷயங்கள் எனக்கு நியாபகம் வருகிறது
நான் கல்லூரியில் படிக்கும் போது நடந்த விஷயம்.
வெங்கட்ராமா, உங்க கிளாசில் இருக்கற நம்மவா பேரெல்லாம் லிஸ்ட் எடுத்து கொடு, காஞ்சிபுரத்துல நடக்குற யாகத்துக்கு போகனும் என்று பக்கத்து கிளாஸ் பையன் சிவகுமார் சொல்ல, எனக்கு யார் யாரெல்லாம் அவான்னு தெரியாது, ஏன்னா நான் உங்கவா இல்ல என்று நான் சொல்ல, சிரித்துக் கொண்டே சாரி சொல்லிவிட்டு சென்றுவிட்டான்.
நணபர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, ஒரே சிரிப்பு தான்.
அதே போல் பள்ளியிலும்,
ஐயர் வீட்டு கல்யாணத்துல, கல்யாணத்துக்கு முதல் நாள் தான் ரொம்ப கிராண்டா இருக்கும்,
என்னடா வெங்கட்ராமா . . ?, என்று ஆசிரியர் சொல்ல, எனக்கு தெரியாது சார் நான் ஐயர் கிடையாது என்று சொல்ல, அப்புடியா, நீ ஐயர் வீட்டு பையன்ல நான் நினைச்சுகிட்டு இருக்கேன் என்று சொன்னார்.
சார், அவன் ஒரு கோழிய வறுத்து வச்சா, ஒரே ஆளா சாப்டுருவான் சார் என்று உடன் இருந்த பையன் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டோம்.
எத்தனையோ பேர் என்னை ஐயர் என்று நினைத்ததுண்டு, எனக்கு அந்த விஷயம் தெரிய வரும் போது எனக்கு சிரிப்பு தான் வரும். இது எப்படி என்னையோ என் இனத்தையோ இழிவு படுத்துவது போலாகும்.
குமுததின் இந்த செயலில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை, காரணம் இந்த பத்திரிக்கைகளின் நிறம் எனக்கு தெரியும். சேதுராமன் விளம்பரத்திற்கு ஆசைப்படுகிறார், குமுதம் வியாபாராத்திற்கு ஆசைப்படுகிறது.
பத்திரிக்கைகள் பற்றிய, என் சில பதிவுகள்
பத்திரிக்கைகளின் கயமைத்தனம்
நாட்டிற்கு தேவையா இந்த சேதி,
என்னங்கடா விளையாடறீங்களா. . . . ., தமிழ் நாடு அமைதியா இருக்கறது உங்களுக்கு புடிக்கவில்லையா . . . . ?
வையகம் காப்பவே ரேனும் - சிறு
வாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்
பொய்யக லத்தொழில் செய்தே - பிறர்
போற்றிட வாழ்பவர் எங்கணும் மோலோர்
-பாரதி
எழுதியவர்: வெங்கட்ராமன் at 5:32 PM
Courtesy : http://rajapattai.blogspot.com/2006/12/blog-post_17.html
|