குறள்: நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு:
விளக்கம்
நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்பேசுவர்
சொல்வதைச் செய்வார்.... செய்வதைச் சொல்வார்:
திரையுலகில் ரஜினியை அறிமுகப்படுத்தியது திரு.பாலசந்தர்.
ரஜினி எனும் நடிகனை பட்டை தீட்டியது திரு.எஸ்.பி.முத்துராமன்.
கதாநாயகன் எனும் நிலைக்கு முதன்முதலில் உயர்த்தியது திரு.கலைஞானம்.
இருவருக்குமான நெருக்கம், நேசம் பலரும் அறிந்ததுதான்.
கலைஞானம் அவர்களின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய சிவக்குமார், “கலைஞானம் இன்னும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார்” என்கிற தகவலைச் சொல்லி தமிழக அரசு அக்கலைஞனுக்கு வீடு ஒன்றினை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையினை விடுத்தார். இதையடுத்து... அமைச்சர் திரு. கடம்பூர் ராஜீ பேசும்போது... “கலைஞானத்திற்கு அரசு சார்பில் வீடு தரபப்டும்” என்றார்.
31/12/17 அன்று ராகவேந்திரா மண்டபத்தில் பேசிய போது தலைவர் சொன்னது :
"கலைஞானம் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் தூரத்துல இருந்தபடியே ‘ரஜினி சௌக்கியமா?’னு புன்னகையோடு... என் பதிலுக்குக்கூட காத்திருக்காமல் போய்க்கிட்டே இருப்பார். ‘ஒரு படம் செய்து கொடுங்க’னு என்கிட்ட கேட்கவே மாட்டார். அழுதபிள்ளைதானே பால் குடிக்கும்... ஆனா அவரோ...‘நான் (ரஜினி) நல்லா இருந்தாபோதும்ங்கிற நல்ல உள்ளம் கொண்டவர். கலைஞானம் சார்...
நான் தப்பு செய்துட்டேன். அவருக்கு நான் ஒரு படம் செய்து கொடுத்திருக்கணும் என்றார்.
1997ல் வெளிவந்த " அருணாச்சலம்" திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக திரு.கலைஞானம் அவர்களையும் சேர்த்து அழகு பார்த்தவர் ரஜினி.
இத்தகவலை ரஜினி அவர்கள் எந்தவொரு மேடையிலும், நிகழ்விலும் சொல்லிக் காட்டியது இல்லை! .
தனிப்பட்ட முறையில் அவர் செய்த உதவிகள் சில சம்பந்தப்பட்டவர்கள் சொல்லியே வெளிவந்துள்ளது. வெளி வராத சம்பவங்கள், நெகிழச் செய்யும் நிகழ்வுகள் ஏராளம்.
அந்திகழ்ச்சியில் பேசிய
ரஜினி தனது பேச்சின்போது... “கலைஞானம் அவர்கள் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்ங்கிறது எனக்கு இப்பத்தான் தெரியும். ‘நல்லாருக்கீங்களா?’னு கேட்டா... ‘நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேன்’னு சொல்லுவார்.
கலைஞானம் அவர்களுக்கு வீடு வழங்கும் வாய்ப்பினை நான் அரசாங்கத்துக்கு வழங்க மாட்டேன்! அவரின் இறுதி மூச்சு வரை என் வீட்டில்தான் இருப்பார் எனச் சொல்லி பலரையும் நெகிழச் செய்தார்.
தலைவரின் இந்த அறிவிப்பு ஒய்வு பெற்ற ஆசிரியரை வாழ்கையில் சாதனை பல புரிந்த மாணவன் தேடிச் சென்று சந்தித்து மரியாதை செய்து அவரின் ஆசி பெற்ற நிகழ்வுக்கு ஒப்பாகும்.
ரஜினிஃபேன்ஸ்.காம் சார்பாக நமது வாழ்த்துக்களைத் தெரிவிக்க திரு.கலைஞானம் அவர்களைத் தொடர்பு கொண்டோம். அவர் தற்போது மதிய ஓய்வில் இருப்பதாக அவரது மகன் தெரிவித்தார். நமது தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டோம்.
Photo Courtesy : www.nakkheeran.in
|