அட போப்பா ' ரஜினி பாஜக ஆளு தானே ... என்னைக்கு அவங்கள எதிர்த்து பேசி இருக்கார் ' என க்ருவர் கேட்டால் உண்மையில் அவர் செலக்டிவ் அம்நீசியவால் பாதிக்கப்பட்டு இருக்க நிறையவே வாய்ப்புள்ளது... அல்லது இன்றைய வாட்ஸப் உலகில் மட்டும் வாழும் உயிரினமாக இருப்பார்.
பெரியார் சிலையை உடைத்தது காட்டுமிராண்டித்தனம்
எஸ் வீ சேகரின் கருத்தை எதிர்த்தது , ஸ்டெர்லைட் விவகாரத்தில் உளவுத்துறை தோல்வி என சாடியது , இவையெல்லாம் பாஜக மீதான விமர்சனம் இல்லையோ ?
பாஜகவின் தேசிய தலைமையையும் கண்டித்துள்ளார்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் கடுமையான விளைவுகளை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என கூறியது.
புதிய கல்வி கொள்கை பற்றி சூர்யாவின் விமர்சனத்திற்கு பகிரங்க ஆதரவு தெரிவித்ததை மறந்து விட்டீர்களா ?
சரி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய போது, கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலின் சும்மா இருந்த போது , இந்தியாவிலேயே முதல் ஆளாக ராகுல் காந்தி ராஜினாமா செய்யக்கூடாது எனச் சொன்னவர் ரஜினி., அப்போது காங்கிரஸ் பக்கம் சாய்கிறாரா? ரஜினி என விவாதம் வைக்காதது ஏனோ ?
அதெல்லாம் விடுவோம்... பாஜகவை சேர்ந்த சுப்ரமணிய சுவாமியே கேட்டார்... ரஜினி பாஜகவின் எந்த கொள்கையோடு ஒத்து போனார்
ராமர் கோவில் வேண்டும் என்றாரா? சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்தாரா? இல்லை ஹிந்திக்கு முக்கியத்துவம் கொடுத்தாரா என்று....
அப்போதும் உங்களுக்கு புரியவில்லை என்றால் என்ன செய்வது?
இதோ!! ஹிந்தி விஷயத்திலும் தனது வெளிப்படையான நிலைப்பாட்டை ரஜினி தெரிவித்து விட்டார்....
பொதுவாக ஹிந்தி எதிர்ப்பு செய்யும் அரசியல்வாதிகள் சொல்வதெல்லாம் தமிழை அழிக்கும், தமிழனை வஞ்சிக்க பார்க்கிறார்கள், விழித்துக்கொள் தமிழா ரகம் தான்...
ஆனால் ரஜினியின் பேச்சை கவனிதவர்களுக்கு நிச்சயம் தேசிய எண்ணம் கொண்ட , அதே சமயம் தேச வெறி இல்லாமல் அனைவரும் சமம் எனும் எண்ணம் கொண்டவர் தான் ரஜினி என்பது புரிந்திருக்கும்...
விழித்துக்கொள் தமிழா என கூறி அவரது வேல்யுவை ஏற்றிக்கொண்டு இருக்கலாம்...
மொழிப்போர் உருவாகும் என கூறி போராளிகள் கூட்டத்தை தான் பக்கம் திருப்பி இருக்கலாம்...
வெறுமனே ஹிந்தியை திட்டிவிட்டு தான் ஒரு தமிழ் இன பாதுகாவலன் போல தன்னை சித்தரித்து இருக்கலாம்...
ஆனால் ரஜினி அவ்வாறு செய்ய மாட்டார்... ஏன் என்றால் அவர் ரஜினி !!!
அவரது பேச்சு இன்றும் தேசிய பார்வை கொண்டதாகவே இருந்தது...
வெறும் தமிழ் என உணர்ச்சியை கொட்டாமல் , ஹிந்தி அல்லாத அனைத்து மாநிலத்தின் சார்பாகவும் அவரது குரல் ஒலித்தது...
வட இந்தியா, தென் இந்தியா எனும் வேறுபாடு இன்றளவும் உள்ளது என்பதை குறிப்பது போல, முதலில் தமிழகம் மட்டும் அல்லாது அனைத்து தென் மாநிலங்களும் இதை எதிர்க்கும் என கூறினார்..
பின்னர் வட மாநிலங்களிலும் பல இதை எதிர்க்கும் என அழுத்தமாக கூறினார்..
இதல்லவா தேசிய பார்வை !!!
நாம் ஒரு தேசிய இனம் என பிரிவினையை தூண்டும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் நாம் இந்த தேசத்தின் இனம் என ஒற்றுமையை போற்றும் அவரை எப்படி பாஜக எனும் சிறு வட்டத்தில் அடைக்க முடியும்?
அமித்ஷா அவர்களின் பேச்சு தான் இத்தனை விவாதத்திற்கும் காரணம்... பலர் பல நாட்களாக கண்டித்தும் பதில் அளிக்காத அமித்ஷா , ரஜினியின் கருத்து வெளியான நான்கே மணி நேரத்தில் மறுப்பு தெரிவிக்கிறார் .
காரணம் ஒன்று தான்... எந்த தேச பக்தியை காட்டி பாஜக காய்களை நகர்த்தியதோ, அதே தேச பக்தியை ரஜினியும் கையில் எடுத்தார்....
வேற்றுமையில் ஒற்றுமை தான் இந்தியாவின் கலாச்சாரம் என்பதை குறிக்கும் விதமாக , இந்தியாவில் ஒரு மொழியை அமல்படுத்த முடியாது என முழங்கினார்....
ஆனாலும் இந்தியாவை ஆதரிப்பது என்றால் எதோ மோடியையே ஆதரிப்பது போல தமிழகத்தின் போலி போராளிகள் உருவாகியுள்ள பிம்பதால் ரஜினி நாட்டின் நலனை முன்னிறுத்தி தெரிவிக்கும் பாராட்டுகள் அவருக்கு காவி சாயம் பூச முற்படுகிறார்கள்....
ஆனால் இந்தியாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ரஜினியின் கருத்து புரிந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...
தான் ஒரு இந்திய தமிழன் என்பதை அவர் மீண்டும் ஒரு முறை உரக்ககூறி உள்ளார்...
அவர் எப்போதும் கூறுவது போல...
வாழ்க தமிழ் !
வளர்க தமிழக மக்கள் !!
ஜெய் ஹிந்த்!!!
- விக்னேஷ் செல்வராஜ்
|