I happened to be with OUR SUPER STAR in KING FISHER PUNE-CHENNAI Flight on 17/12/2006. The interview as follows :
கிங்பிஷர் விமானத்தில் என்னுடன் பயணித்த சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் தந்த மினி பேட்டி இதோ:
'ரொம்ப arrogant- சின்ன வயசுல இருந்திருக்கீங்க. இப்போ அப்டியே மாறி silent- இருக்கீங்க. இது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. எப்படி ஸார் சாத்தியம்?'
'Spirituality, நீங்களும் ஆன்மீகம் பழகுங்க. அமைதியாயிருவீங்க'
'ஆன்மீகம் பழகறதுக்கு என்ன ஸார் பண்ணனும்?'
அத விளக்க முடியாது; approachனு எதுவும் நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க முடியாது.
குருவைத் தேடித் தெரிஞ்சுக்கணுமா?'
'அவசியம், நல்ல குரு கெடச்சா ரொம்பவே அதிர்ஷ்டம். அவரு கெடக்கற வரைக்கும் morning 15 minutes, evening 15 minutes daily மெடிடேஷன் பண்ணுங்க. மனசு அமைதியாயிரும்.'
'என்ன மாதிரி I.T. ளுங்களுக்கு இது சாத்தியமே இல்லை. என்ன பண்றது?!'
'அப்டில்லாம் சொல்லி தப்பிக்க பாக்காதீங்க. உங்களால முடியும். உக்காருங்க. ஒரு மாசத்துல நீங்களே அந்த அமைதிய ரசிப்பீங்க!'
'ஆன்மீகத்துல அடியெடுத்து வெக்கறதுக்கு என்ன புக்ஸ் படிக்கலாம்?'
'Himalyan Waters'னு ஒரு புக் இருக்கு. எல்லா இடத்துலயும் கெடைக்குது. வாங்கிப் படிங்க. ரொம்ப நல்ல புக். Good Starter!'
'நினைத்தாலே இனிக்கும், ஜானி, முள்ளும் மலரும், தில்லு முல்லு படங்கள்ல உங்களுக்குனு ஒரு Image வட்டம் இருந்ததில்ல. ஆனா, இப்ப உங்களைச் சுத்தியே சினிமா industry இருக்கறதால இந்த மாதிரி முயற்சில எல்லாம் ஈடுபட முடியாதுன்னு சொல்லிருக்கீங்க. உங்களோட talents-ஐ full use பண்ண முடியலங்கற வருத்தமே இல்லையா?'
'இல்லங்க, நான் சந்தோஷமா இருக்கறத விட, என்னால பத்து பேர் சம்பாதிச்சு சந்தோஷமா இருக்காங்க-ற திருப்தி இருக்கே, அது போதும்'
'என்னோட பத்து வயசுலேந்து உங்க ரசிகனா இருக்கேன். என்னோட எட்டு வயசு பையன் 'தேவுடா, தேவுடா'வுக்கு டறான். என்னோட நாலு வயசு பையன் 'அண்ணனோட பாட்டு'-ஐ கண்ணு கொட்டாம பாக்குறான். இது எப்டி ஸார் உங்களுக்கு சாத்தியமாச்சு?'
'God's Blessing'
'தீவிர ரசிகனான எங்களுக்கே 'சிவாஜி''யோட expectations-ஐ நெனச்சா பயமா இருக்கு. உதறலாவும் இருக்கு. meet பண்ண முடியுமான்னு கவலையா இருக்கு. உங்களுக்கு எப்படி?!'
'அதுக்குத்தான் நாங்க உழைச்சுகிட்டு இருக்கோம். கவலையே படாதீங்க. உங்க எதிர்பார்ப்புக்கு ஏத்தாப்புல நிச்சயம் இருக்கும்'
'எல்லாரும் கேக்கற கேள்வி, எப்ப ஸார் 'சிவாஜி' ரிலீஸ்?'
'தமிழ் நியூ இயர்ல வந்துரும்'
உங்க பேரனுக்கு என்ன ஸார் பேர் வெச்சிருக்கீங்க?
'யாத்ரா'
'என்ன அர்த்தம் ஸார்?'
'ஜதி'ன்னு சொல்வாங்க.
'ரொம்ப சந்தோஷம் ஸார், உங்கள meet பண்ணதுல'
'எனக்கும் ரொம்ப சந்தோஷம். All the Best'
Courtesy : http://apdipodu.blogspot.com/2006/12/arrogant.html
|