இந்தியா முழுவதுமிலிருந்து பெரும் தொழிலதிபர்கள், திரைத் துறை வல்லுனர்கள், நடிகர்கள், மீடியா சக்கரவர்த்திகள், விளையாட்டுத் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். (அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசியல் சக்திமிக்கவர்கள் பட்டியல் தனி).
சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் 28 வது இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட குசேலன் சரிவுக்கு பிறகு கூட சூப்பர் ஸ்டார் இந்த வருடம் அதே இடத்தை பிடித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஒரு பெரும் சாதனையாகும்.
யாருடைய அபிப்பிராயம் முக்கியம்…?
நம்மைப் பற்றி நமது நண்பர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை விட நம் எதிரிகள் வைத்திருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியம். ஏனெனில், அவர்களுக்கு நம்மை ப்ளீஸ் செய்யும் அவசியம் கிடையாது. கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாரை கடுமையாக இந்தியா டுடே விமர்சித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க நமது மன்றங்களின் பலம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பற்றி அவர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது தானே?
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள திரைத்துறையினரில் விளம்பரங்களில் (Commercial advertisements) எவற்றிலும் நடிக்காதது சூப்பர் ஸ்டார் மட்டுமே. அப்படியிருந்தும் அவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரும் சாதனையாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்று பணியாற்றும் கடமை வீரன் அவர். அவரை தேடி இத்தகு சிறப்புக்கள் வருவது இயல்பு தானே…?
மேற்படி டாப் இந்தியா 50 பட்டியலில் சூப்பர் ஸ்டார் இடம்பெற்றிருப்பது ஏன் என்ற காரணத்தியா இந்தியா டுடே விளக்கியுள்ளது. (இணைக்கப்பட்டிருக்கும் பேப்பர் கட்டிங்கை பார்க்க)
இந்த டாப் 50 பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற தமிழக பிரபலங்கள்: ஏ.ஆர். ரஹ்மான், மாறன் சகோதரர்கள், அப்பல்லோ பிரதாப் ரெட்டி, விஸ்வநாதன் ஆனந்த்.
பட்டியலில் இடம் பிடித்த மற்ற மாநில திரைத்துறையினர்: ஷாருக் கான், அமீர் கான், அமிதாப் பச்சன்
தமிழகத்தில் அதிகாரமிக்க டாப் 5 பிரபலங்கள் : மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் தமிழகத்தில் அதிகாரமிக்க டாப் 5 பட்டியலில் உள்ளனர். சென்ற முறை இந்த பட்டியலில் இருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இம்முறை இடமிழந்துவிட்டார்.
தமிழக அளவில் டாப் 10 பிரபலங்கள் : தத்தமது துறையில் சாதனையாளர்களாகவும் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் உள்ளவர்களில் தமிழக அளவில் வெளியிடப்பட்டுள்ள சக்திமிக்கவர்கள் பட்டியலில் இயக்குனர் ஷங்கர் இடம் பிடித்துள்ளார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரனை இயக்குவதும் அவரது பன்முகத்தன்மையும் அவர் பட்டியலில் இடம் பெற உதவியிருக்கும் காரணிகளாகும்.
(பட்டியலில் இடம் பிடித்த மற்ற தமிழக பிரபலங்களில் சிலர் : மயில் சாமி அண்ணாதுரை, அடையாறு ஆனந்த பவன் உரிமையாளர் ஸ்ரீனிவாச ராஜா, நரசுஸ் காபி சிவானந்தம், இந்தியன் வங்கி எம்.எஸ். சுந்தர் ராஜன்)
மார்ச் 18, 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள இந்தியா டுடே இதழில் மேற்படி தகவல்கள் அனைத்தும் இன்னும் விரிவாக சுவாரஸ்யமாக இடம்பெற்றுள்ளது.
28. RAJINIKANTH, 58, ACTOR
BIG BROTHER
Because the one-time carpenter and conductor has fanatics extending from Japan to Korea, and his 38,000 registered fan clubs around the world with an estimated 19 lakh members are waiting for him to start his own political party.
Because at Rs 26 crore a film, he’s the most highly paid star in southern India.
Because he compensates for his flops such as Kuselan to his distributors and bounces back with a mammoth project, such as Shankar’s Rs 150-crore film, Endiran.
Because no protest or celebration in Tamil cinema gets complete without his presence.
Spiritual guru: Swami Satchidananda of Rishikesh, on whose call he made a movie, Baba, before the Swami’s death in 2002.
Unforgettable number: 10A, the route number on which he was a conductor in his early days in Bangalore.
Political Inspiration: Singapore’s former prime minister Lee Kuan Yoo
|