Helping Hands for Female Hostel Students (2020)
2 Feb 2020
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவர்
பெற்றான் பொருள்வைப் புழி
என்றார் திருவள்ளுவர்.
தலைவரின் தர்பார் வெற்றியை Rajinifans.com இணைய தளம் சென்னை எழும்பூர் சேவா சமாஜம் பெண்கள் காப்பகத்தில் தங்கி படிக்கும் 45 மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி, நோட்டு புத்தகங்கள்/பேனா வழங்கி கொண்டாடினர்.
பெண் குழந்தைகள் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை.
அப்பா ரஜினியை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும், நன்றியை கடிதம் வாயிலாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் நிகழ்ச்சியில் பெண்கள் காப்பகத்தில் காவலர்களாக பணிபுரியும் இருவரின் குழந்தைகளுக்கும் நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் Rajinifans.com சார்பில் சத்தியநாராயணன், கிருஷ்ணகுமார், விஜய்சாம்பு மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|