Other Articles
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
(Thursday, 4th December 2008)

சென்னை சத்யம் திரையரங்கில் பட்டாளம் பட ஆடியோ வெளியீட்டு விழா. இயக்குநர் லிங்குசாமியின் சகோதரர் போஸ் தயாரித்துள்ள படம்.

இசை வெளியீட்டின் போது ரஜினியின் வெற்றி ரகசியம் குறித்துப் பேசிய லிங்குசாமியிடம் நமது தளத்துக்காக சில நிமிடங்கள் ஒதுக்கித் தரக் கேட்டோம். அதற்கென்ன... தாராளமாக என்றவர், அடுத்து கேட்டது, ‘சார் இந்த சைட்டை பார்ப்பாரா?’

'அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது', என்று பதிலளித்தோம்.

இனி லிங்குசாமி...

இந்த திரைத் துறைக்குள்ள அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளைஞரும் ஒரு அவார்டு படம் இயக்கனும் அல்லது பாலச்சந்தர் மாதிரி படமெடுக்கணும் என்று வருவதில்லை. நான் உள்பட எல்லோருமே, ஒரு ரஜினி படம் எடுக்கணும் என்று சொல்லிக் கொண்டுதான் வந்திருக்கிறோம்.

‘ரஜினி படம் மாதிரியா அதிரடியா பண்ணலாம் சார்!’ என்றுதான் தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லவே துவங்குகிறார்கள் புதிய இயக்குநர்கள். ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்.

ரஜினி சார் ஒரு பல்கலைக் கழகம். அவர்கிட்ட கத்துக்கிறதுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கு. அவரைப் பின்பற்றுபவன் ஒரு முழுமையான மனிதனாகிவிடுவான்.

30 வருஷம் ஆயிடுச்சு ரஜினி நடிக்க வந்து. ஆனா, இப்போதும், இனி வரும் காலங்களிலும் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார் மட்டும்தான். இனிமேல் இந்தப் பட்டத்தைத் தாங்கும் வல்லமையுள்ள நடிகர் ஒருவர் வருவாரா... தெரியவில்லை!

இத்தனை ஆண்டுகள் நம்பர் ஒன் இடத்திலேயே வீற்றிருக்கிறாரே... அதன் ரகசியம் என்ன? இதற்கு அவர் சொன்ன பதிலைத்தான் விழாவில் குறிப்பிட்டேன்.

நடிப்பு எப்போதாவது போரடித்திருக்கிறதா சார்... என்று ஒரு முறை கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலில் அத்தனை அர்த்தங்கள்.

“1992-க்கு அப்புறம் நான் நடிக்கிற எல்லாப் படமும் முதலும் கடைசியுமான படமா இருக்குமோ என்ற எண்ணத்தில்தான் இறங்குவேன். ஆனால் ஷூட்டிங்கில் தேங்காய் உடைக்கும்போது மட்டும் இது கடைசி படமாக இருந்துவிடுமோ என்ற எண்ணம் வந்துவிடும்.
இப்படியே 15 ஆண்டுகள் ஓடிவிட்டன. காலம் என்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்து விட்டது என்று சொன்னார்.

ஒவ்வொரு படத்தையும் தனது கடைசி படமாக நினைத்து உழைக்க எந்த அளவு மனப்பக்குவம் வேண்டும் தெரியுமா... நிச்சயம் வேறு யாருக்கும் இந்தப் பக்குவம் வராது. அதனால்தான் அவர் ஒரு சகாப்தமாகப் பார்க்கப்படுகிறார். புதிய தலைமுறை படைப்பாளிகள் இதை மனதில் கொள்ள வேண்டும்”, என்றார் லிங்குசாமி.

லிங்குசாமி அடிப்படையில் ஒரு ரஜினி ரசிகர். ஆனந்தம் படத்துக்காக சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டுப் பெற்று பின்னர் அதே ரஜினியிடம் ஒரு படத்துக்கு கதை சொன்னவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கநாதன்


 
8 Comment(s)Views: 5484

k.thulasirajan,india/thanjavur
Monday, 8th December 2008 at 05:00:08

lingusami sir, thalaivara vachu oru nalla padam panna nalla irukkumnu nenaikuren.
SL Boy,Sri Lanka
Saturday, 6th December 2008 at 08:02:41

Thank you sir for posting in english
m.mariappan,india/tuticorin
Friday, 5th December 2008 at 06:12:26

Dear Mr.Lingu sir

Thank You sir

arulkanth,chennai
Friday, 5th December 2008 at 02:43:02

such a nice interview..
thanks a lot to mr.lingusamy sir.v are so happy about ur words..his one

SL Boy,Sri Lanka
Friday, 5th December 2008 at 01:34:36

please translate into english
R.V.SARAVANAN,INDIA
Thursday, 4th December 2008 at 23:18:45

lingusamy sir unga padangalai polavey rajini patria ungal padilum yadarthamaga irukkudu
Raja,
Thursday, 4th December 2008 at 22:10:48

தலைவர பத்தி அருமையா சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் லிங்க்சாமி.
Prasanna,India/Chennai
Thursday, 4th December 2008 at 20:02:32

Nice Lingusamy sir............Thanks a lot for your Interview

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information