Related Articles
Rajini photo quiz - When, Where and What?
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
1995 Rajinikanth Interview in Doordarshan TV in English
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
சத்திக்கு தற்காலிக ஓய்வு: மன்றப் பணிகளில் சுதாகர்!
எந்திரன்: கழிந்தது முதல் திருஷ்டி!
ரஜினிக்காக காத்திருக்கும் பூர்வீக கிராமம்
ரஜினிகாந்த், ஒரு உன்னத மனிதர் - ஐஸ்வர்யாராய்
பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
(Friday, 28th November 2008)

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நோக்கமெல்லாம் இருப்பதை நிலைகுலையச் செய்து, பீதியைக் கிளப்பி, அரசின்மீதும் ஆட்சி அமைப்பின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்க வைத்து, அதன் மூலம் சட்டம், ஒழுங்கு முற்றிலும் தகர்ந்த அராஜக நிலைமையை ஏற்படுத்துவதுதான். அதன் மூலம் அவர்கள் சாதிக்க நினைப்பது என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை. இருக்கிற அமைப்பைத் தகர்த்து அதற்குப் பதிலாக ஒரு நல்லாட்சிக்கான திட்டம் எதுவும் அவர்களிடம் உண்டா என்று கேட்டால் கிடையாது.

இதுபோன்ற பயங்கரவாத இயக்கங்கள் அத்தனையுமே அழிவு சக்திகளே தவிர ஆக்கபூர்வமான சிந்தனையோ, மாற்றுத் திட்டமோ இல்லாதவை. அவலை நினைத்து உரலை இடிக்கும் கதையாக யார் மீதோ, ஏதோ ஒரு கொள்கை அல்லது செயல்மீதோ இருக்கும் கோபத்தை, தங்களது எதிரிகளிடம் நேரிடையாகக் கொள்கை ரீதியாக மோதி ஜெயிக்க முடியாத காரணத்தால், அப்பாவிப் பொதுமக்களை ஈவிரக்கம் இல்லாமல் கொன்று குவித்தும், பிணைக் கைதிகளாக்கித் துன்புறுத்தியும் தங்களது துன்பியல் உணர்வைத் தணித்துக் கொள்பவர்கள்தான் இந்த பயங்கரவாதக் கும்பலைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒருவகை மனநோயாளிகள்.

இதுபோன்ற பயங்கரவாத அமைப்புகளும் அதன் உறுப்பினர்களும் தங்களுக்கு ஒரு லட்சிய முகமூடியை அணிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். உதாரணத்திற்கு, இப்போதைய மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் "லஷ்கர் - இ - தொய்பா' அமைப்பை எடுத்துக்கொண்டால், தாங்கள் காஷ்மீரை மீட்டெடுக்கப் போராடுவதாகக் கூறிக் கொள்கிறார்கள். மும்பையில் நூற்றுக்கணக்கானவர்களைச் சுட்டுக் கொல்வதால் காஷ்மீர் மீட்கப்படப் போகிறதா என்ன? துன்பியல் சார்ந்த மனநோய் பாதிப்புதான் இது.

உலகெங்கிலும் சமீபகாலமாக இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது இயலாத ஒன்று என்பதை நாம் உணர்ந்து செயல்பட்டாக வேண்டும். அதை எந்த அளவுக்குத் தடுப்பது, இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து எப்படி ஒடுக்குவது என்பதில் கவனம் செலுத்துவதுதான் புத்திசாலித்தனமே தவிர மனோரீதியான ஆராய்ச்சியில் இறங்கி அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் முயற்சி.

1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பும், அதற்குப் பிறகு நடந்த இரண்டு மூன்று முயற்சிகளும் நமக்குப் பாடமாக இருந்திருக்க வேண்டாமா? உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி, மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகள் ஒரு விசைப்படகில் கடற்படைத் தலைமையகத்தைக் கடந்து விரைந்து, மும்பை கடற்கரையில் இறங்கி நகரத்திற்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் தேசியப் பாதுகாப்புப் படையினரும், கடற்படை கமாண்டோக்களும் உடனடியாகச் செயலில் இறங்கவில்லையே, ஏன்?

தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரேயை, பயங்கரவாதிகள் தாங்கள் கடத்திய காவல்துறை வாகனத்தில் இருந்தபடி சுட்டு வீழ்த்திய காட்சி அதிர்ச்சி அளிக்கிறது. கர்கரேயும் சரி, ஏனைய காவல்துறையினரும் சரி, பயங்கரவாதக் கும்பலை எதிர்கொள்வதுபோலச் செயல்படாமல், ஏதோ அரசியல் கட்சிகளின் ஊர்வலத்திற்கோ, போராட்டத்திற்கோ கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டதுபோல இருந்தனர் என்பதுதான் உண்மை.

ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நமது காவல்துறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புப் படையினர், இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லை. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை. தகுந்த ஆயுதங்கள் தரப்படவில்லை. காவல்துறையினர் "கள்ளன்-போலீஸ்' விளையாட்டுகளிலும், "மாமூல்' பொழுதுபோக்கிலும் ஈடுபட்டு வந்த காலம் மலையேறி, பயங்கரவாதக் கும்பல்களையும், முற்றும் கற்றுத் தேர்ந்த, சர்வதேசத் தொடர்புள்ள குற்றவாளிகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மாறுபட்ட சூழ்நிலைக்கு அவர்களை நாம் தயார்படுத்தாவிட்டால், முதல் பலி அவர்களாக இருக்கக்கூடும்.

மும்பையில், பயங்கரவாதிகள் வெளிநாட்டுப் பயணிகளைக் குறிவைத்து இயங்கினார்களோ என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. மேலைநாடுகளில் தங்களது கைவரிசையைக் காட்ட முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இருப்பதால், இந்தியாவை அவர்கள் இலக்காக மாற்றி ரத்தப்பலி வாங்குகிறார்களோ என்றுகூடத் தோன்றுகிறது. நமது பாதுகாப்பு அமைப்புகள் ஒரு தலைமையின் கீழ் இயங்காமல் இருந்தால், இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வது கடினம்.

பிரதமர் மன்மோகன் சிங்கும், எதிர்க்கட்சித் தலைவர் லால்கிஷன் அத்வானியும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் கலந்து பேசியிருப்பதும், ஒன்றுபட்டுச் செயல்பட உறுதி பூண்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. முறையான, முழுமையான பாதுகாப்பு அமைப்பும், அதற்கேற்றபடி சட்டங்களும், பயங்கரவாதத்தை நேர்கொள்ளப் போதிய அதிகாரத்துடன் ஒரு கூட்டுத் தலைமையும் அத்தியாவசியத் தேவை.

இது ஒரு தேசிய சவால். அதை எதிர்கொள்ள நம்மால் முடியும். இன்று நேற்றல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து அன்னியத் தாக்குதல்களை எதிர்கொண்டு, துவளாமல் பீடுநடை போடும் பாரத தேசம், இதுபோன்ற சிறுமதியர் சதியால் துவண்டுவிடுமா என்ன? துயருண்டோ, துணிவுள்ளோர்க்கே?

Thanks : தினமணி

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் துறந்த அப்பாவி பொதுமக்களுக்கும், போலீசாருக்கும், தேசிய  பாதுகாப்புப்படை கமேண்டோக்களுக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலி.






 
11 Comment(s)Views: 1412

G.RAAMANAND,INDIA
Sunday, 30th November 2008 at 08:29:27

WE SHOULD SALUTE THE POLICEMEN AND THE ARMY MEN AND NSG COMMANDO MEN FOR THEIR SACRIFICE OF THEIR PRECIOUS LIVES.TERRORISM DOES NOT KNOW ANY RELIGION LANGUAGE AND CASTE. TERRORISM MUST BE CONDEMNED IN ALL WAYS.TERRORISTS ARE COWARDS. KILLING INNOCENT PEOPLE IS NOT A SIGN OF BRAVERY.THESE BRAVE POLICEMEN AND ARMY MEN DESERVE TO BE APPLAUDED FOR THEIR BRAVERY AND SACRIFICE.SACRIFICING LIVES FOR THE COUNTRY IS SOMETHING GREAT.MY HEARTFELT CONDOLENCES TO THEIR FAMILY MEMBERS AND MAY GOD GIVE THEM THE STRENGTH TO OVERCOME SUCH A GREAT TRAGEDY.AND GOD PLEASE SAVE OUR COUNTRY FROM FURTHER TERRORIST ATTACKS.
kanthi mathi nathan,india,chennai
Saturday, 29th November 2008 at 20:01:50

Dear All,

We shouls saluate our national hero.There was a article in our websit stating that our mr.thackery invited our thailvatr to come dwn to mumbai to fight maharathra cause.Mr.Thackery our hero faught for everyone who got trapped inside.They faught only for maharatriaans.Why i am saying this becuase those who are trying to divivde india must be taught a lesson.why we are asking our thalivar to come politics and tech all these people a tough leasson

Kaldhan,
Saturday, 29th November 2008 at 10:13:48

I think these terrorist are benifited by these attack in someway , there will be a Plan and motive behind this. Government has to take a list of people who are benifited by these attacks , who all have gained by shorting in the STOCK markets in billions in that particular day. Multi billionaires operates and must be the background of these attack who are getting benifited . Indian government can find the real culprits who are operating from behind the scenes. I SALUTE the real heros 3 brave police office who lost their lives,let their soul rest in peace. Jai Hind
panneer selvan,tamilnadu,chennai
Saturday, 29th November 2008 at 08:18:56

first iam proud to see this news in our site.....
and v all a INDIAN must SALUTE the REAL HEROS....
let the soul end in peace.....
and congrats to the brave NSG team.........
jai hind

manivannan,singapore
Saturday, 29th November 2008 at 06:01:12

jai hind ,sallute my indians real superstars
arul,chennai
Saturday, 29th November 2008 at 03:11:58

its horrible to see the terrorist attacks in mumbai.the arrival of the terrorists in the boat raises our national security questionable.but no terrorist can change our national integrity through this type of attacks. jai hind
alagan.rajkumar,madurai
Saturday, 29th November 2008 at 01:13:30

appavi makkalai ippadi seiyum rascals aandava nee punishment kudu.en mother nation INDIA enbathil innum unarvu vendum nam anaivarukkum
Sundar,india
Saturday, 29th November 2008 at 01:08:09

Salute to the heroes on behalf of Rajini Fans
Anonymous,India
Friday, 28th November 2008 at 19:49:32

Where are both the thakreys now ? Idiotic personlities. Both must be chucked out.
Abraham,India
Friday, 28th November 2008 at 19:46:35

Obsolute Madness. Lets be united and show the power of Indians.
Vijay,India
Friday, 28th November 2008 at 19:41:02

Appalled at the foolishness of the curious onlookers who are disrupting the NSG operations.

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information