Other Articles
இதுவும் தீவிரவாதம்தானà¯
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், à
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion.
ரஜினி தன்னைப் பற்றி சரிà®Â
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடுà
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
உலகத் தமிழர் நெஞ்சங்கà®Â
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
அந்த நாள் இனிய நாள் - 2
மதுரை மாவட்ட ரஜினி ரசிகàÂ
ரஜினியைப் போன்ற தேசியவà
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
அந்த நாள் இனிய நாள் - 1
எம்.என்.நம்பியாருக்கு நàÂ

  Join Us



Subscription

 Subscribe in a reader

Article
ரஜினி விஷயத்தில் நடுநில
(Sunday, 30th November 2008)
சன் டிவியில் தொடர்ந்து ரஜினி எதி்ர்ப்பு செய்திகளுக்கு மட்டு்ம் முக்கியத்துவம் தரப்பட்டு வருவதாக அவரது   ரசிகர்கள் எல்லோருக்குமே ஒரு வருத்தம் இருக்கிறது. வருத்தம் என்பது மிக மென்மையான வார்த்தை. அதனை, 'நாள்பட்ட கோபம்' என்று கூடச் சொல்லாம். இந்தக் கோபம் வன்மமாய் உருவெடுக்குமுன், அவ்வப்போது ஏதாவது ஒரு விதத்தில் தலைவர் பற்றிய செய்திகளை, முக்கிய நிகழ்வுகளை மிகச் சரியான நேரத்தில், தனித்த முக்கியத்துவத்துடன் ஒளிபரப்பி சமாதானப்படுத்திவிடும் சன் டிவி.

சன் நிர்வாகம் இதை எப்படிப் பார்க்கிறதோ... ஆனால் ரஜினியின் ரசிகர்கள் (அது தீவிர ரசிகனாக இருந்தாலும் சரி, சாதாரண ரசிகனாக இருந்தாலும் சரி அல்லது அறிவுஜீவி ரசிகனாக இருந்தாலும் சரி -அதாவது 'உள்குத்து ஆசாமிகள்!') அனைவருமே ரஜினி விஷயத்தில் சன் டிவியின் செயலை இப்படித்தான் பார்க்கிறார்கள்.  

ரஜினியைப் பாராட்டியும், அவர் படங்களை ஏக 'ஹைப்' கொடுத்து ஒளிபரப்பியும் நன்றாகக் காசு பார்ப்பது, அதே ரஜினியை நேரம் வரும்போது தாக்குவதன் மூலம் பப்ளிசிட்டிக்கு பப்ளிசிட்டி, வருமானத்துக்கு வருமானம் என்பதே சன் டிவியின் கொள்கையாகிவிட்டது என்ற ரசிகர்களின் குமுறல் நிச்சயம் சன் டிவியின் காதுகளையும் எட்டியுள்ளது.

இதனை அந்த நிறுவனத்தின் நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா மூலம் தெரிந்து கொண்டோம்.

குறிப்பாக குசேலன் திரைப்படத்துக்கு எதிராக சன் டிவி செய்தி வெளியிட்ட விதம், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி மனிதாபிமான முறையில் ரஜினி மேற்கொண்ட சில நடவடிக்கைகளை அவர்கள் வெளிப்படுத்திய விதம், அவர் கேட்காத மன்னிப்பைக் கேட்டுவிட்டதாக செய்தி பரப்பியது, ரசிகர்களை கோபம் என்னும் மலை மீதேறி நிற்க வைத்துவி்ட்டது. அந்தக் கோபம் சந்திரமுகி ஒளிபரப்பு மற்றும் தலைவரின் ரசிகர் சந்திப்பு பேட்டி ஒளிபரப்பு, மறு ஒளிபரப்பு, பிறந்த நாள் ரத்து செய்தி ஒளிபரப்பு  போன்றவற்றின் மூலம்தான் சற்றே தணிந்தது.

இந்த நிலையில் சன் நெட்வொர்க் இயக்குநர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் அவர்களை, சமீபத்தில் அவர்கள் கூட்டிய ஒரு முக்கியமான பத்திரிகையாளர் சந்திப்பில் பார்த்தோம்.

பிரஸ்மீட் முடிந்த சில நிமிடங்களில் அவரை தனியே சந்தித்து இரண்டு கேள்விகளை மட்டும் முன்வைத்தோம்.

தொடர்ந்து ரஜினிக்கு எதிரான செய்திகள் வருவதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு உணர்வு நிலவுகிறதே...

(சிரிக்கிறார்...) நிச்சயம் இல்லை. இதே மாதிரியான குற்றச்சாட்டைத்தான் கலைஞரும் முன்வைக்கிறது. இதிலிருந்தே புரியும் சன் டிவியின் நடுநிலை. எங்களுக்கு ரஜினி- திமுக-அதிமுக என்ற பாகுபாடு கிடையாது.
ரஜினி தொடர்பான எந்த நிகழ்வையும் திரித்துக்காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது. என்ன நடந்ததோ அதன் முதல் தர அறிக்கையை நாங்கள் தருகிறோம். அதை விமர்சனமாகப் பார்க்கக் கூடாது.
ரசிகர்களின் உணர்வுகளை நாங்கள் மதிப்பதால்தான் ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பை, சில ரசிகர்களின் தொடர்ந்த வேண்டுகோளுக்கிணங்கி மறு ஒளிபரப்பு செய்தோம்.

தனிப்பட்ட முறையில் எந்த விரோதமும் யாரிடமும் எங்களுக்கு இல்லை. இது குறித்து மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் சக்சேனாவிடம் கேட்கலாம்.

ரஜினி பற்றிய பொதுவான உங்கள் கருத்து...

அவரை வெறும் நடிகராக நாங்கள் பார்க்கவில்லை. அருமையான மனிதர். எங்கள் நண்பரும் கூட. அதனால்தான் அவர் தொடர்பான செய்திகளில் எப்போதுமàÂ

Previous

Next
 
   
13 Comment(s)Views: 6089

Sarav,Bangalore
Monday, 1st December 2008 at 21:36:21

Better our group members not to mention about other political leaders... If corruption means JJ and JJ means corruption... Like that also I can mention... Nowadays, really annoying comments about others coming...
ragavendra,karnataka
Monday, 1st December 2008 at 10:09:43

i am seeing this for the past 3 yrs, you know that, they will stop sms message's in sun music during Dec -10,11,12 and now they are stopped displaying superstar sms in their music channel
i experinced it many times

narumugam,tuticorin
Monday, 1st December 2008 at 08:49:53

rajini padangalai enrum muthal idaththil vaithu irukkum sun tv groups thanks
by
rajini veriyaan
narumugam

T.JAWAHAR,TIRUPUR, INDIA
Monday, 1st December 2008 at 06:33:10

சங்கநாதன், இது எப்படியிருக்குத் தெரியுமா?

கலைஞரிடம்: உங்கள் ஆட்சியில் ஊழல் அதிகமாமே??
பாகிஸ்தானிடம் : இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை ஊக்குவிப்பது உங்கள் நாடாமே??
ம‌ன்னிக்க‌வும் கிண்ட‌லாக‌ கூறூவ‌தாக‌ எண்ண‌ வேண்டாம்... இது போல‌த் தான் ச‌ன், விக‌ட‌ன் போன்றோர்கள்
சிலர் பணம் பண்ணுவதர்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.. தலைவன் பழுத்த மரம்.. கல்லடி பட்டாலும் கனியும் தரும்.. நிழலும் தரும்.. சிலரைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம்..
தயாநிதி மாறன் சொல்வது வடிகட்டிய பொய்..பொய்..பொய்..பொய்..பொய்..பொய்...

thanks

Karthik,Mamsapuram
Monday, 1st December 2008 at 06:31:46

ஒரு உண்மையான ரசிகனின் உள்ளக்குமுறல்:

சன் டி.வி மட்டுமல்ல பலரும் தங்களுடைய சுயநலத்திற்காக் தலைவரை பயன்படுத்திவிட்டு பின்பு படுத்தி விடுகிறார்கள்.

(உதா)ரணம்:

1. ஆனந்த விகடன்:

பாபா பக்கம் போட்டு (திருட்டுத்தனமாக புகைப்படத்தை பயன்படுத்துவது பாபா டு சிவாஜி வரை) இரண்டாம் முதலிடத்திற்கு வந்தவர்கள், இன்று ரஜினி விரோத போக்கை கடைப்பிடிப்பது ஏன்??

இதன் நிர்வாகம் திரு.பாலசுப்ரமனியத்திடம் இருந்து அவரது புதல்வர் திரு.சீனிவாசன் கைக்கு வந்தபின்பு ரஜினி விரோத போக்கு அதிகரித்துள்ளது. திரு.சீனிவாசன் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விகடன் வாசகர்களுக்கே வெளிச்சம்.
1. சந்திரமுகியை விட சச்சின் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களுக்கு அதிக மதிப்பென் வழங்கியது(சந்திரமுகியின் வெற்றி உலகறிந்தது)
2. சமீபத்திய விஜயகாந்தின் ஊர்வலம் தொடர்கட்டுரை பாரம்பரிய வாசகர்ளுக்கே விகடன் மீது வெறுப்பை சம்பாதித்து கொடுத்துள்ளது. இதன் பின்னனியில் இருப்பது பணம்.

யார் யாரை தந்திரன் என்பது.

2.குமுதம்:

குசேலன் படத்தை வெகுவாக புகழ்ந்துவிட்டு பின்பு ஊரோடு சேர்ந்து படம் சரியில்லை என்று ஒப்பாரி வைத்துவிட்டு(உபயம்:ஞானி, அரசு) அதை சமாளிக்க ரஜினிக்கு ஆதரவான கருத்துக்கணிப்பை வெளியிட்டு.... அடடா அடடா...
முன்பு குமுதமும் விகடன் போல விஜயகாந்தை மிகத்தீவிரமாக ஆதரித்துவிட்டு, அனந்தநாயகி தொடர்பான பேட்டியில் அவரது சுயரூபம் தெரிந்து (மூக்குடைபட்டு)இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.
என்ன ஒரு குழப்பம்.

யார் யாரை குழப்பவாதி என்பது.

3.தி.மு.க:
இதை நான் பதிவு செய்துதான் ஆகவேண்டும், ஏனென்றால் தலைவரால் பெரும் பலன் அடைந்தது தி.மு.க தான்.

பாபா படம் வெளியான நேரம், படமும் ரசிகர்களும் பா.ம.க வெறியாட்டத்திற்கு இரையான நேரம், அனைத்து கட்சிகளும் பா.ம.க வின் வன்முறையை கண்டித்த நேரம், ஒரு திருமணவிழாவில் (விழுப்புரம் என நினைக்கிறேன்) கலந்து கொண்ட தி.மு.க தலைவர்," 2000வருடம் வாழ்வதாக அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று யாரும் அறிவிழந்து நம்பிவிட வேண்டாம்" என்று கூறினார். மதுரையில் நமது ரசிகர்கள் தாக்கப்பட்டபோதும், கூட்டணியில் இருந்த பா.ம.க வுக்காக வாய்திறக்கவில்லையே....

1996ஆம் ஆண்டு இதே தி.மு.க தலைவர்,"தம்பி ரஜினிகாந்த் மீதோ இல்லை அவரது ரசிக கண்மணிகள் மீதோ சிறு கீறல் விழுந்தால், நானோ தி.மு.க தொண்டனோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்" என சூழுரைத்தார்.

நெஞ்சு பொறுக்கலை தலைவா.......

உன்னால் வென்றவர்கள்
உன்னாலேயே தோற்கடிக்கப்பட வேண்டும்........

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

M.G,JAWAHAR KUMAR,VIBGYOR/SALEM/INDIA
Monday, 1st December 2008 at 06:01:58

MY DEAR FRIENDS ,LET CONVEY REGARDS TO MY BROTHER RAJINI.HE BECOME THE PRIME MINISTER OF INDIA IN A SHORT TIME........ITS SURE YOU CAN CALL ME IN 98427 45089..HE IS THE SUPERMAN OF UNIVERSE
sankar,Podaturpet, Thiruvallur District
Monday, 1st December 2008 at 04:08:04

super article Mr. Sanganathan
arun,india/kumbakonam
Monday, 1st December 2008 at 02:57:45

still i suppose sun tv is playing a double game in issues regarding superstar.lets wait, time will give answer to these guys for anti-rajini informations.
shravan,
Monday, 1st December 2008 at 02:33:39

சிலர் பணம் பண்ணுவதர்க்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.. தலைவன் பழுத்த மரம்.. கல்லடி பட்டாலும் கனியும் தரும்.. நிழலும் தரும்.. சிலரைப்பற்றி பேசாமல் இருப்பதே உத்தமம்..
Manikandan Bose,Chennai
Monday, 1st December 2008 at 01:17:52

கருணாநிதி வாரிசுகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள் தான்..
rajesh,india/chennai
Monday, 1st December 2008 at 00:52:45

please translate in english..........
Mohammed Khalifa,Chennai
Sunday, 30th November 2008 at 21:35:50

சன் டிவி சொல்வ‌து உன்மைய‌க‌ இருக்கட்டும்




S.VIJAY,London
Sunday, 30th November 2008 at 19:15:40

சங்கநாதன், இது எப்படியிருக்குத் தெரியுமா?

கலைஞரிடம்: உங்கள் ஆட்சியில் ஊழல் அதிகமாமே??
பாகிஸ்தானிடம் : இந்தியாவிற்கு எதிராக தீவிரவாதிகளை ஊக்குவிப்பது உங்கள் நாடாமே??
ம‌ன்னிக்க‌வும் கிண்ட‌லாக‌ கூறூவ‌தாக‌ எண்ண‌ வேண்டாம்... இது போல‌த் தான் ச‌ன், விக‌ட‌ன் போன்றோர்க‌ள்!

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information