Other Articles
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே
ரஜினி பதில்கள்- 1.. Updated with English version
Moondru Mudichu - Beginning of Style Samarat
Kuselan smart enough in overseas Box Office!
எம்.என்.நம்பியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் ரஜினி
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் பிறந்த விதம்
No Rajini Birthday Celebration in 2008
Kuselan loss row settled
சத்தியநாராயணா நீக்கம் இல்லை: இனி ரஜினிதான் எல்லாம்! – சுதாகர் பேட்டி
‘Sultan’ worldwide release on April 14th!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
இதுவும் தீவிரவாதம்தான்!
(Sunday, 30th November 2008)

 

மீடியாவில் இருந்து கொண்டே மீடியாவுக்கு எதிராக தொடர்ந்து பல கடும் விமர்சனங்களை, குற்றச்சாட்டுகளை வைப்பதாக என்னிடம் உரிமையுடனும் கோபத்துடனும் சண்டைக்கு வரும் நண்பர்கள் நிறைய!

ஆனால், அவர்கள் எல்லாரும் ஒருமனதுடன் நேற்று மீடியாவை, குறிப்பாக எலக்ட்ரானிக் மீடியாவில் பெரும் பங்கு வகிக்கும் தொலைக்காட்சி செய்திக் குழுவின் அடாவடித்தனமான சில செயல்களைப் பார்த்தபிறகு, ‘மீடியாவின் தீவிரவாதம்’ எத்தகைய பயங்கரம் வாய்ந்தது என்பதை ஒப்புக் கொள்ளத் துவங்கியிருக்கிறார்கள்.

சாம்பிள் ஒன்று:

கடந்த இரு தினங்களாக மும்பை நகரில் தீவிரவாதிகள் நடத்திய வெறித் தாக்குதல்களைப் பார்த்து நாடே பதற்றத்தில் துடித்துக் கொண்டிருந்தது. மும்பை மக்களின் கண்ணெதிரே தீவிரவாதிகளும் கமாண்டோ படையினரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபராய் ஓட்டலிலிருந்து கையில் குண்டடிபட்டு ரத்தம் சொட்டச்சொட்ட ஒருவர் ஓடிவருகிறார். அடுத்த கணம்

அவரை என்ன செய்திருக்க வேண்டும், மனிதாபிமானம் பற்றி முழங்கும் இந்த மீடியா மேதாவிகள்…?

மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கலாம். அட, குறைந்தபட்சம் முதலுதவி செய்யச்சொல்லி யாரையாவது உதவிக்கு அழைத்து விட்டிருக்கலாம்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

‘ஹலோ… ஹலோ… இங்க வாங்க… இப்படிக் காட்டுங்க உங்க கையை…’, ‘மிஸ்டர்… ப்ளீஸ் ஷோ மீ யுவர் ஹான்ட்ஸ்…’, ‘இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க… இருங்க, அவசரப்பட்டு ஓடாதீங்க!’ ‘அங்க எத்தனை பேர் இருக்காங்க. என்ன செஞ்சாங்க… உங்களை எப்படி சுட்டாங்க… ஒரு பைட் (byte) எடுத்துக்கிறேன்…!’

‘சரி… இதைச் சொல்லுங்க… கமாண்டோ படையால உங்களைக் காப்பாத்த முடிலையா… அவங்க வந்தும் பிரயோஜனமில்லேன்னு சொல்றீங்களா…?’

அந்த மனிதரோ வலியால் துடிக்கிறார், ரத்தம் இன்னமும் கொட்டியவண்ணம் உள்ளது. அவரைப் போக விடாமல் மறித்துக் கொண்டு நிற்கின்றன 20க்கும் மேற்பட்ட கேமராக்களும், அவற்றை இயக்கும் இதயமற்ற மனிதர்களும்!

சாம்பிள் இரண்டு:

ஓட்டலுக்குள் பிணைக் கைதியகளாய் மாட்டிக் கொண்ட நபர்களை விடுவிக்க கமாண்டோக்கள் போராடிக் கொண்டிருக்க, அதை லைவ் கவரஜ் எனும் பெயரில் ஒளிபரப்பிக் காசு பார்த்துக் கொண்டிருந்தன சேனல்கள் (அரை மணிக்கு குறைந்தது 20 விளம்பரங்கள் - டைம்ஸ் நவ், NDTV, IBNLive) இந்த லைவ் கவரேஜை யாராவது தீவிரவாதி டிவியில் பார்த்துக் கொண்டிருந்தால்… அல்லது இவர்களை வெளிநாட்டிலிருந்து இயக்கும் கும்பல் பார்த்துக் கொண்டிருந்தால், கமாண்டோக்களின் இத்தனை முயற்சியும் வீண் அல்லவா…!

இந்த யோசனை வந்ததும், முதலில் டிவி கேமராமேன்களுக்கு விஷயத்தைப் புரிவைத்து விலகிப் போகச் சொன்னது பாதுகாப்புப் படை.

சொன்னவுடன் கேட்டுவிட்டால் பத்திரிகையாளன் என்ற நான்கு கொம்பு வைத்த, சட்டத்தை மீறிய சிறப்பு உரிமைகள் பெற்ற (உ.ம்: ஏம்பா நோ என்ட்ரில வந்தே? சார்.. பிரஸ். அர்ஜென்ட்) இந்த மாவீரர்களுக்கு இழுக்கு வந்துவிடும் அல்லவா..!

உடனே இதுகுறித்து அவர்கள் தத்தமது செய்தி ஆசிரியர்களுக்குத் தகவல் சொல்கிறார்கள்.
ஒரு தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், அலுவலகத்திலிருந்து சம்பந்தப்பட்ட செய்தியாளருக்கு இப்படி உத்தரவு போடுகிறார்: ‘நீங்கள் போய் நமது கேமரா மட்டும் இன்னும் குளோசப்பாக நிகழ்ச்சியைக் கவர் பண்ண முடியுமா என தனியாகக் கேளுங்கள். முடிந்தால் அவரிடம் போனைத் தாருங்கள், நான் பேசுகிறேன். நமக்கு லைவ் கவரேஜ் முக்கியம்!’

இதற்குப் பெயர் என்ன? இவர்களை என்ன சொல்லித் திட்டுவது? எப்படித் திருத்துவது? கேட்டால் செய்தியை முந்தித் தருகிறார்களாம். மக்களுக்கு உண்மையை அறிவிப்பதில் அவ்வளவு ஆர்வமாம். அளவுக்கு அதிகமானால் எதுவுமே ஆபத்தில்தான் முடியும்!

மும்பை பயங்கரவாதத்தின் பின்னணியும், உண்மைகளும் உடனடியாக தொலைக்காட்சி பார்க்கும் இந்த வேடிக்கை மனிதர்களுக்குத் தெரிந்து இப்போது என்ன ஆகப் போகிறது? நாட்டின் இறையாண்மையைக் காக்க, உடலும் உயிரும் இந்தியத் திருநாட்டுக்கு என்று வீரவேசமாகக் கிளம்பி வருகிற கூட்டமா இது…!
‘ஏம்பா… போரடிக்குது. எவ்வளவு நேரம்தான் இதையே காட்டிக்கிட் டிருப்பாங்க. கையாலாகாத கமாண்டோ படை… சேனல் மாத்துப்பா… கோலங்கள் அபி சட்டிப் பாத்திரம் கழுவுறாளா… கலைஞர்ல இன்னிககு ஆடறவ ரம்பாவா, கும்பாவா… பாரு!’ என்று பொழுதுபோக்கில் தங்களைப் புதைத்துக் கொண்ட இந்தக் கூட்டத்துக்கு, செய்தியை முந்தித் தர இரக்கத்தையும் மனித நேயத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு செயல்படும் இந்த எந்திரங்களை மீடியா தீவிரவாதிகள் என்று சொல்லாமல் வேறென்னவென்று சொல்வது!

ஒரு குறிப்பு: எங்கும் எதிலும் சில அதிசயமான விதிவிலக்குகள் உண்டு. மீடியாவிலும் அப்படிச் சிலர் இருக்கலாம்… இருக்கிறார்கள். இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல!

ஒரு சல்யூட்: இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப், உன்னி கிருஷ்ணன், வீரர் கஜேந்திர சிங் தியாகங்களுக்கு வார்த்தைகளில் வெறும் புகழஞ்சலி செலுத்துவதை அவர்கள் ஆத்மா மன்னிக்காது (மோடி அளித்த நிவாரணத் தொகையைக் கூட மறுத்துவிட்டது கர்கரே குடும்பம்). அவர்கள் எந்த நோக்கத்துக்காக உயிர் தியாகம் செய்தார்களோ அது முழுமையடைய நம்முடைய பங்களிப்பைத் தர தயாராக வேண்டும்!

ஒரு தீர்வு:
இது வர்த்தக உலகம். மீடியா தன் வேலையைத் தாமதப்படுத்த முடியாது. செய்திகளை முந்தி தருவது தொழில் தர்மம். அதைக் குறை சொல்லலாமா என இன்னமும் வாதிடுபவர்களுக்கு… உண்மைதான். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தருவதில் ஒருவரை ஒருவர் மி்ஞ்சும் வகையில் செயல்படலாம். அது அக்மார்க் வியாபாரம்.

ஆனால், நாட்டின் பாதுகாப்பு கந்தலாகிவிட்ட அந்த சூழலில், இருக்கிற வீரர்களை வைத்துக் கொண்டு நிலைமையைச் சமாளிக்க ராணும் திணறிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பைத் தருவதே முதல் கடமை. செய்தி அப்புறம்தான்.

நிலைமையின் தீவிரம் கருதி விவரமான அறிக்கை மற்றும் காட்சிப் பதிவை சில மணிநேரங்கள் கழித்துத் தருகிறோம் என்று அறிவித்தால், பார்வையாளர்கள் தேடி வந்து கழுத்தை நெறித்துவிடுவார்களா என்ன…

நகரப் பகுதிகளில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் யாரென்பதே தெரியாமல் வாழ்ந்து வரும் கலாச்சாரம் இன்று அதன் உச்சத்துக்குப் போய்விட்டது. இனியும் இது தொடர வேண்டாம்.

புதிதாக ஒரு கிராமத்துக்குள்இருவர் போய் பாருங்கள். ஏய் யாரப்பா நீங்க… உங்களை இதுக்கு முன்ன பார்த்ததே இல்லையே… என சுற்றி வட்டமிடாத குறையாக கேள்வி எழுப்புவார்கள். சந்தேகமிருந்தால் கட்டி வைத்து விடுவார்கள்!

ஆனால் நகரங்களில் புதிதாக ஒருவர் நுழைந்தால், முதலில் அவரை இருகரம் கூப்பி வரவேற்று வாடகைக்கு வீடும் பிடித்துக் கொடுத்து கமிஷன் பெறுவதற்கென்றே தெருவுக்குத் தெரு ஒரு கூட்டம் அலைகிறது. அவன் யார், எங்கிருந்து வருகிறான், என்ன கொண்டு வருகிறான் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் அக்கறையே கிடையாது.

இந்த விஷயத்தில் போலீஸை விட அதிக அக்கறை நமக்குத்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் காக்கிச் சட்டை போடாத போலீஸ்தான்!

-வினோஜாஸன்


 
18 Comment(s)Views: 4416

Anandhan,India
Tuesday, 2nd December 2008 at 05:26:41

Excellent beat to media thank you so much. They are more interest to make money only they have no moral response to the society. It is the second incident the first is at chennai law college.
priyankar,chennai
Monday, 1st December 2008 at 19:50:35

199% agree with this article it was a wonderful views by thalaivarfans.com keep it up
Hari Haran,India
Monday, 1st December 2008 at 13:13:40

The article is written in the HEAD and HEART in its corresponding place. Happy to find such sensible people like you, around us.

Keep continue to watch the 'tamasha' aftermath this terror like analysis, surveys, political bashing etc.,

D.VIJAYAKUMAR,Chennai
Monday, 1st December 2008 at 08:00:37

VERY GOOD ARTICLE. WHY THE MEDIAS SO URGENT. LET THEM WAIT AND GIVE PATH TO THE PEOPLES TO FIGHT THE SITUATION. WHY THE COVERGE FOR PUBLIC. WHETHER IT IS ENTERTAINMENT SHOW. ALL TERROR AND HORROR ACTIVITES SHOULD BE TELECAST LIVE. IT WILL AFFECT SO MANY PEOPLES MIND. FURTHER SOME SMALL INCIDENT ALSO MAY BECOME BIG BALLON. LET THE MEDIA TRY TO FIND OUT THE SOLUTION AFTER THE INCIDENT WITH THE CONSULTATION OF THE EMINENT PEOPLES ORDINARY CITIZENS, POLITICIANS AND BURECUTS. THE LIVE COVERGE IS ALSO A TEERROSIM. SO PLEASE VISUAL MEDIAS AVOID TELECAST REPEATED KILLING INCIDENT UNLESS IT IS WARRRANTED DIN THE DEBATE
saba,India
Monday, 1st December 2008 at 05:41:10

மிகவும் அருமையான பதிவு வினோஜேசன்.
Jayaram Ramakrishna,Bangalore
Monday, 1st December 2008 at 04:56:17

I think in today's world especially in India Business everyone are worried about their business to go up and in that they are selling out country to others. Which as a true Indian should know which to cover and to be disclosed to the Public which as a media person should be taught learnt. As in today's world media is only source of information they should be taught what to telecast and what not. I truly agree with the above comments said by vinojaswan. JAIHIND
alagan.rajkumar,madurai
Monday, 1st December 2008 at 02:54:56

nalla katturai anna.nam anaivarukkum ippa ithu thevai
boopathi,India
Sunday, 30th November 2008 at 23:22:49

வினொஜாஸன் ஊங்களுடைய கட்டூரை மிகஉம் அருமை.
boopathi,India
Sunday, 30th November 2008 at 23:18:16

Let the media atleast learn from this useful article. Mr. Vinu hats off to you its such a nice view, as you said they are worried about BREAKING NEWS all the time. Let them learn from this info. Jaihind.
KK,
Sunday, 30th November 2008 at 16:55:24

Perfectly said. I had already given the same comments earlier on what the media is doing to our world today. The worst part is one guy says death toll is 165 another says 187 and another 195. What are these guys doing? Before eradicating cancer, AIDS, smoking, drinking or even terrorism, we have eradicate these selfish, heartless notorious media our of our peaceful world. These guys an informers in disguise to the terrorists giving them live coverage on where a commando is stading so that they can come and shoot. Why dont you talk only about the politicians who are irresponsible and try to correct them? I do not believe any TV channel or news paper now and this revalation has to come to everyone from now.
Thinakar,
Sunday, 30th November 2008 at 16:43:35

Vinojasan,

With the presence of few people like you only, the there are some decency in some corner of the
media world. Thought, most of the Media houses have turned as business enterprise, there are still people like you. Hope things will change sometime.

Regards
Thinakar

veejay,
Sunday, 30th November 2008 at 12:49:32

The behaviour of the media has always been atrocious n it is on the rise every day. I am getting so irritated by the heartless way these media behave. Infact I was thinking that the NSG secretly should have fired on these heartless people on their legs n arms n injure them seriously so that either they would have ran for their lives or they would have been busy taking "BYTES" of their own pain rather than disturbing the public. Its for the people to shun these idiots out. All of us should not watch channels that sensationalise. Either watch DD or listen to radio. Also the sponsors should have ethics in not allowing ads during these kind of painful happenings. But it is difficult for me to expect all these idiots will ever change.
rajan,India/Chennai
Sunday, 30th November 2008 at 12:14:24

Well said Vino. Very good article
Baskar,India/Bangalore
Sunday, 30th November 2008 at 10:15:40

Hai,

Hats off to Vinno. Superb article. Even i felt very bad of the way the media was covering the news. It should have totally hidden what is happening inside and should also tried to keep away the public from the Operation what the commandos had planned would have been more success. Later when everything was over, then they could have analysed and given a detailed Report. Not sure when this people will realise it.

My deep condolences to the families of the relatives who were killed or injured.

JAI HIND.....

Steve,Malaysia
Sunday, 30th November 2008 at 08:00:22

Really worst attacks ever in Mumbai history..Salute for soldiers
A.Sundaresan,Oman
Sunday, 30th November 2008 at 06:58:37

very good artical but this is not enough for that kaind of media people because of thay are not having hart.
sebastian selvaraj,pune
Sunday, 30th November 2008 at 04:59:09

what a beautiful article. you said the right thing. only DD gives the correct and necessary news. all this pvt. news channels only wants publicity and fame and subsequently money.
ayyappan,India Hyderabad
Sunday, 30th November 2008 at 03:28:01

such a wonderful article. hatts of to vijobalan. My heart broke out after seen the mumbai massacre. These xxxx (those who were disturbing the combing operation of our commandos)tv new channels should be penalised and banned immediatly. They showed their utter nonsense behaviour and disturbed our great nation soverginity to the world. Jai hind ..

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information