Other Articles
ரஜினியின் நேர்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் கிடைத்த வெற்றி!
பலர் இப்போது குசேலனில் வரும் சுந்தர்ராஜன் கேரக்டர் மாதிரிதான் மாறியிருக்கிறார்கள்!
தலைவரின் தடபுடலான பேட்டியும், தாய்மார்களின் மகிழ்ச்சியும்...
Video clip of Superstar's speech at fans meeting
If God proposes We can Start Party- The blossoming Rajini
மாவீரனாய் நுழைந்தார்; மகுடத்தோடு திரும்பினார்!
தெளிவான பார்வையே - உன் பெயர்தான் ரஜினியா?
Rajini to finally meet fans on 3rd November
யுத்தத்தை நிறுத்துங்கள்! – ரஜினியின் அர்த்தமுள்ள ஆவேச பேச்சு
Rajini's emotion in the climax left the viewers spell bound
Rajinikanth & Vijayakanth: A rare scene!
நான் தலைவர்னு சொல்றது சூப்பர் ஸ்டார் ரஜினியை - நயன்தாரா !!
Rajini's talent was not fully utalized
முதன் முதலாக நம்பியார் தலைமையில் ரஜினி சபரிமலைக்குச் சென்றார்
அது ஒரு பாண்டியன்’காலம்!
எனக்கு குரு தலைவர்தான். இதை எங்கும் சொல்வேன்..
சந்திரமுகி – கல்லா கட்டும் சன் டிவி!
ஊருக்குத்தான் உபதேசம்... உனக்கில்லையடி கண்ணே!
Manithan surpassed Nayagan collection at all centers
ரஜினியின் தமிழ் உணர்வுக்கு உரைகல் தேவையில்லை!

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
வீரன் போற்றப்படத்தான் வேண்டுமேயொழிய தூற்றப்படக்கூடாது!
(Thursday, 6th November 2008)

 

விடாகண்டர்களும் கொடாகண்டரும்
- சூப்பர் கட்டுரை


"பாபா' -யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை ரஜினி உட்பட எல்லோருக்கும் பலமாக உணர்த்திய படம். எம்.ஜி.ஆர். -சிவாஜி போன்ற இமயங்களுக்கேகூட ஏற்பட்ட சரிவு, திரையுலகில் வெள்ளிவிழா கண்டு விட்ட ரஜினிக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டதாகவே எல்லோரும் கருதினர்.

‘இனி ரஜினி அவ்வளவுதான்!', ‘இதோடு நடிப்பதை அவர் நிறுத்திக் கொள்ளலாம்!'- இப்படிப் பலதரப்பட்ட விமர்சனங்கள். ஆனால் வெற்றியை உறுதி செய்துகொண்டே ‘சந்திரமுகி'யில் கமிட் ஆன ரஜினி, ‘விழுந்தா எழாம இருக்கிறதுக்கு நான் யானை இல்ல... குதிரை!' என்று அதன் கேஸட் ரிலீஸ் விழாவிலேயே கர்ஜித்தார். சொன்னது போலவே ‘சந்திரமுகி'யை சாதனைமுகி ஆக்கியவர், ‘சிவாஜி'யிலும் வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டார். அதுமட்டுமில்லை. ‘சூப்பர் ஸ்டார் நாற்காலியை எப்போது விடுவார்?' என்று இளைய தலைமுறையினர் மண்டையைப் போட்டு பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு இன்றும் எல்லோருக்கும் ‘சிம்ம சொப்பனமாகவே' ரஜினி இருக்கிறார்.

ஆனால் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு போகிற போக்கில் அவரது இமேஜைப் பதம்பார்த்துவிட்டது ‘குசேலன்'. ‘கொஞ்ச நேரம் வந்து போகலாமே!' என்று நினைத்து அவர் நடித்த படம், கொஞ்சமும் மறக்க முடியாத நிகழ்வுகளை அவரது சாதனைப் பயணத்தில் ஏற்படுத்தி விட்டுச் சென்றதில், உப்புமா விஷயங்களைக்கூட உணர்ச்சிப் பெருக்கோடு பேசிக் கவிழ்த்த சிலரின் பெரும்பங்கும் இருக்கத்தான் செய்கிறது.

அறிக்கைக் குத்து!

‘ரசிகர்களை சந்திக்கப் போகிறார் ரஜினி!' என்று அவரது ரசிகர்களிடையே பரவிய செய்தி, சேவை இயக்கம் தொடங்க போகிறார் என்ற கட்டத்தில் இடைவேளையை தொட்டு, விரைவில் அரசியல் கட்சி தொடங்கப்போகிறார் என்ற இடத்தில் க்ளைமாக்ஸை நெருங்கியது. ஆனால் எல்லா யூகங்களுக்கும் சேர்த்து சூப்பர் ஸ்டார் கொடுத்த அறிக்கைக் குத்து, முஷ்டி தூக்கி சம்பந்தப்பட்டவர்களின் மூக்கைக் குத்தாத குறையாகதான் இருந்தது.
இந்த அறிக்கை, சூப்பர் ஸ்டாரின் பின்வாங்கலை பிரகடனப்படுத்துவது போல இருந்தாலும், அதற்குப் பின்னணிக் காரணமாய் முக்கியமான இமேஜ் மீட்புப் பணி ஒன்றும் ரஜினிக்கு இருக்கிறது.

இமேஜ் மீட்புப் பணி!

‘பாபா' ஏற்படுத்திய இமேஜ் சரிவை ‘சந்திரமுகி'யின் சரித்திர வெற்றியால் சரிகட்டியது போல ‘குசேலன்' தந்த இழப்புகளை ‘எந்திரன்' வெற்றி மூலம் விரட்ட வேண்டிய தேவை ரஜினிக்கு இருக்கிறது. இதனைச் செய்யாமல் வேறு எதைச் செய்தாலும், அது ‘தோல்வி தந்த பயத்தில்தான் ரஜினி தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வந்திருக்கிறார்' என்ற கேலிப் பேச்சுகளை எழுப்பும். ஆக, நல்ல மனதோடே ரஜினி சில முடிவுகளை-முயற்சிகளை எடுத்தாலும் காலமும், சூழ்நிலையும் சேர்ந்து அவரது எண்ணத்தைக் கொச்சைப்படுத்தி திசை திருப்பும் ஆயுதங்களாகவே மாறிவிடும்.

ரஜினிக்கு கிடைத்த எல்லாப் புகழுக்கும் அடிப்படையே அவரது சினிமாக்கள்தான். ஒரு சினிமா அவரது புகழைப் பறிக்கிறதென்றால் இன்னொரு சினிமா மூலம் அதை மீண்டும் எப்படி அடைவது என்பது அவருக்கு அநாயச அத்துபடி. ஆக, இந்தச் சிறிய இமேஜ் மீட்புப் பணிக்காக தனக்கு ரொம்பவும் பழக்கமான சினிமாவைதான் ரஜினி கையிலெடுப்பாரே ஒழிய, பழக்கமே இல்லாத அரசியலில் நுழைந்து கையைச் சுட்டுக்கொள்ள அவர் விரும்புவாரா என்பது சந்தேகமே!

ஒரு வெற்றியாளனை தன் தலைவன் என்று சொல்லத்தான் எவருமே ஆசைப்படுவார்கள். ‘பஸ் கண்டக்டர் டூ சூப்பர் ஸ்டார்' ரஜினியை மக்கள் விரும்பத் தொடங்கியதின் மையம் அதுதான். ஆக, மீண்டும் ஒரு மெகா ஹிட்டை கொடுத்து தன் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறார் ரஜினி.

இப்படியெல்லாம் கணக்குப்போட்டு ரஜினி காய் நகர்த்திக் கொண்டிருக்கும்போது ‘சேவை அமைப்பு', ‘அரசியல் கட்சி' என்றெல்லாம் ரசிகர்கள் முந்திக்கொண்டு திரி கிள்ளினால் அவருக்கு கோபம் வராதா பின்னே! சூப்பர் ஸ்டாரும் மனுஷன்தாம்பா!

இப்போ இல்லாட்டி எப்போ?

‘சரி இப்போ இல்லை! ஆனால் என்றாவது ஒருநாள் சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வந்துவிடுவார் இல்லையா?' என்று நீங்கள் கேட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை!
ஏன்? உங்கள் யூகங்களுக்கும், கேள்விகளுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியேகூட பொறுப்பில்லை!

ஆம்! சினிமாவில் கால் பதித்த நாள் முதல் இன்றுவரை அரசியலைப் பொறுத்தவரை ரஜினியின் நிலைப்பாடு ஒரே மாதிரியாகவே இருந்து வந்திருக்கிறது. தனது தனிப்பட்ட பேட்டிகளில் இதுவரை ஒருமுறைகூட ‘அரசியலுக்கு வருவேன்!' என்பதை உறுதியாகத் தெரிவிக்கவில்லை ரஜினி. அதற்கான ஆதாரங்கள் இதோ!

‘‘அரசியல் எனக்கு வேண்டாம். அதென்னவோ இந்த அரசியல் என்றாலே எனக்கு அலர்ஜிதான்.''(விசிட்டர், 15.12.1979)

‘‘நான் நிச்சயமா என் ரசிகர்களை அரசியலில் இறக்கமாட்டேன். நானும் இறங்கமாட்டேன். என் ரசிகர்கள் எல்லாக் கட்சியிலும் இருக்காங்க. அவங்க விருப்பப்பட்டா எந்தக் கட்சியையும் ஆதரிக்கலாம். அந்த உரிமைக்கு நான் குறுக்கே போகமாட்டேன்.''
(1988-‘மனிதன்' வெள்ளிவிழாவில்,)

‘‘எனக்கு அரசியலில் விருப்பமில்லை. அப்படியொரு சந்தர்பத்தை ஏற்படுத்தித் தரவேண்டாம் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். அப்படி அரசியல்தான் என்று தலையில் எழுதியிருந்தால் அதை யாராலும் தடுத்த நிறுத்த முடியாது. நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளைக்கு என்ன ஆவேன்னு எனக்குத் தெரியாது!''
(1991-தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை விழாவில்)

இப்படி 70களில், 80களில், 90களில், தற்போது வரை... என்று எல்லாக் காலத்திலும் அரசியலுக்கு எதிராகவே ஒலித்திருக்கும் ரஜினியின் குரல், அவரது ரசிகர்களின் காதில் மட்டும் ‘அரசியலுக்கு வருவேன்!' என்று சிறப்புக் குரல் கொடுத்திருக்குமோ என்னவோ தெரியவில்லை!

அரசியல் அலர்ஜி!

ஏதாவதொரு அரசியல் இயக்கத்தின் பின்னணி இருந்தால்தான் தமிழ்த் திரையுலகில் வளர முடியும் என்ற நிலை இருந்த காலகட்டத்திலேயே, ‘‘அரசியல் கட்சியின் பின்னணி இருந்தால்தான் வளர்ச்சி இருக்கும் என்பதை நான் ஏற்க மாட்டேன். என்னுடைய சுய முயற்சி, உழைப்பினால் மட்டுமே சினிமாவில் நடிக்க சந்தர்ப்பங்கள் கிடைத்தால் போதும்'' என்று தைரியமாக தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்தவர் ரஜினி.

இத்தனைக்கும் அவர் நடிக்க வந்தே அப்போது நான்கு வருடங்கள்தான் ஆகியிருந்தன.
இப்படித் தனது எதிர்காலத்துக்காக எதையும் செய்யத் துணியும் நடிகர்களுக்கு மத்தியில், அரசியலால்தான் தனக்கொரு வளர்ச்சி வருமென்றால் அப்படியோர் வளர்ச்சியே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை அன்றே எடுத்தார் ரஜினி. அப்படியென்றால் அவருக்கு எந்த அளவுக்கு அரசியல் அலர்ஜியை ஏற்படுத்தியிருக்கும் என்பதை வாசகர்களால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறோம். அந்த அலர்ஜி இந்த 30 ஆண்டுகளில் அதிகரித்துதான் இருக்குமேயொழிய குறைந்திருக்க வாய்ப்பே இல்லை.

மாயா! மாயா! சாயா! சாயா!

ரஜினி ‘குசேலன்' க்ளைமாக்ஸில் கோபப்பட்டதில் எந்தத் தவறும் இல்லை. பின்னே! இத்தனைத் தெளிவாக இத்தனைப் பேட்டிகளில் தனது நிலை பற்றி அவர் தெரிவித்த பிறகும், ‘ஒரு தடவை சொன்னா...', ‘எப்போ வருவேன்...' ‘லேட்டா வந்தாலும்...' போன்ற ரஜினியின் சினிமா ஹீரோயிஸ பஞ்ச் வசனங்களை அரசியலுக்கான அவரது மறைமுக முன்னறிவிப்பாக நம்பியது ரஜினி ரசிகர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமான விஷயம்தான்.

இன்று ரஜினியை நம்பி ஏமாந்துபோய் விட்டதாக பல ரசிகர்கள் வருந்துகின்றனர். உண்மையில் ரஜினி யாரையும் ஏமாற்றவில்லை. மாறாக, அவரது ரசிகர்கள்தான் தொடக்கத்தில் இருந்தே அவரது பேச்சைப் பெரிதாகக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவரது நிலைப்பாட்டுக்கு எதிராக ஒரு மனக்‘கோட்டை'யையே தங்களுக்குள் கட்டி வந்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

உண்மையை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல், அதனை நம்பவும் விரும்பாமல் தங்கள் தலைவனுக்கு ஆரம்பம் முதலே அவர்கள் சூட்டி அழகு பார்த்த மாய (அரசியல்!) முகமூடிதான் இன்று அவர்களை ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது.

 ஏனெனில், ரசிகர்கள் மாட்டிய மாய பிம்பத்தையும் தாண்டி ரஜினியின் ‘ஒரிஜினல்' (ஆன்மீக) முகம் அவ்வப்போது வெளிப்பட்டு பிரகாசித்து விடுவது ஒன்றும் ரஜினியின் தவறு இல்லையே!

என்னதான் தீர்வு?

 ரஜினியின் ‘ஒரிஜினல்' முகத்தை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ரசிகர்கள் விரும்பிப் போட்ட மாய மூகமூடியையே ரஜினி போட்டுக்கொள்ள வேண்டும்.
  ஆக, முகமூடியை போடுவதா? எடுப்பதா? என்பதை ரஜினியும் அவரது ரசிகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்.

 ‘சரி... அரசியல்னாலே அவருக்கு அலர்ஜின்றீங்க. அப்புறம் ஏன் அவர் அரசியலில் பரபரப்பு அறிக்கைகள் விட்டார்? சிலருக்கு ஆதரவு குரல் எல்லாம் கொடுத்தார்?'- என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழும் என்பதையும் எங்களால் உணர முடிகிறது. அதற்கான பதில்கள் இங்கே...

 1.‘திரைப்பட நகருக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரைச் சூட்டுவதுதான் சாலப் பொருத்தம்' என்பதில் உறுதியாக இருந்தார் ரஜினி. அது நடக்காதபோது பின் விளைவுகளைப் பற்றிக்கூட கவலைப்படாமல் ஆள்வோருக்கு எதிராகத் தைரியமாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். இது கலைத்தாயின் தலைமகன் மீது ரஜினி வைத்திருந்த பெரும் மரியாதையின் ஒரு சிறு அடையாளக் குரல்!

 2.மாபெரும் இயக்குனர் மணிரத்னத்தின் வீடு மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. கொதித்தெழுந்த ரஜினி, பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இது ஒரு சக கலைஞனுக்கு ரஜினி கொடுத்த ஆதரவுக் குரல் -ஆறுதல் குரல்!
 
3.ஆட்சியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்று தன் மனதிற்கு பட்டபோது தடாலடியாகக் குரல் கொடுத்தார் ரஜினி. இது நல்ல ஒரு குடிமகனாக அவர் நடந்து கொள்கிறார் என்பதற்கான சாட்சிக் குரல்!

  4.‘‘தமிழக மக்களை எந்தவோர் ஆடம்பரமோ, ஆர்பாட்டமோ இல்லாமல் அன்புடன் பண்புடன் மதித்து, வாழ வைக்கிறவங்க பக்கம்தான் நான் எப்பவும்'' என்றவர், சொன்னது போலவே செயலில் இறங்கி ஆட்சி மாற்றத்திற்குக் குரல் கொடுத்தார். இது தன்னை வாழவைத்த தமிழ்ச் சமுதாயத்திற்கு அவர் கொடுத்த நன்றிக்குரல்!
 
5.தன் ரசிகர்களைத் தாக்கியவர்களை தண்டிப்பதற்காக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாற்றுக் கூட்டணிக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார். இது தன் ரசிகர்களுக்காக அவர் கொடுத்த அன்புக் குரல்!

 இப்படி ரஜினி தன்னை அனைத்துச் சிறப்பம்சங்களும் கொண்ட நல்ல மனிதனாகதான் முன்னிறுத்த விரும்பினாரே ஒழிய, நல்ல அரசியல்வாதியாகப் பெயரெடுத்து ஆட்சியைப் பிடிக்கவோ, அதிகார சுகம் காணவோ விரும்பவில்லை.

 ஆக, ரஜினி என்கிற நல்ல மனிதனை ‘அரசியலுக்கு வாருங்கள்' என்று அன்போடு அழைக்கும் உரிமைதான் எவருக்கும் இருக்கிறதே தவிர, அதற்கு அவர் செவி சாய்க்காவிடில் ‘கோழை' என்றும் ‘பயந்தாங்கொள்ளி' என்றும் அவரை திட்டுவதற்கு எவருக்கும் உரிமையில்லை. ரசிகர்கள் உட்பட!

 இனி, ரஜினியிடம் அரசியல் கோரிக்கை வைத்து ஏமாறுபவர்கள் ரஜினியை திட்டுவதற்கு முன் அவர் வைக்கும் கோரிக்கைக்கும் கொஞ்சம் செவிசாய்த்தால் சிறப்பாக இருக்கும்! ‘‘தமிழக மக்கள் என்னிடம் எதிர்பார்க்கும் சேவையை என்னால் செய்ய முடியாது. நான் நினைக்கும் அரசியல் மறுமலர்ச்சியை என்னால் கொண்டுவர முடியாது. அன்பு ரசிகர்களும் மக்களும் என்னை அரசியலுக்கு இழுக்க முயற்சி செய்யாதீர்கள்!'' (27.09.1995 பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி).

சுத்த வீரன்!

 ரஜினியை பற்றிய குழப்பமான விஷயங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு கட்டும் வண்ணம் அவரை இப்படியோர் வரையறைக்குள் கொண்டு வருவது மிகப் பொருத்தமாக இருக்குமா?

  ‘‘ஒரு தப்பை மனிதத்தன்மை இருக்கிற எவனும் தட்டிக் கேட்கலாம். இன்னும் தப்பா இருந்தா உதைச்சும் கேட்கலாம். ஆனால் அரசியல் பின்புலத்தோடுதான் தட்டிக் கேட்பேன்னு ஒருத்தன் சொன்னா அவன் பப்ளிஸிட்டி கேட்கிறான்; ஆதாயம் தேடுறான்னு அர்த்தம். அரசியல் சாராமல் குரல் கொடுப்பவன்தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவன்'' -இது இயக்குனர் ஒருவர் நடிகர்களின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் நம்மிடம் தெரிவித்த கருத்து!

 இந்தக் கருத்தின்படி பார்க்கும்போது, மேற்படி தவறுகளை எல்லாம் மனிதத்தன்மையோடுதான் ரஜினி தட்டிக்கேட்டார். ஒகேனக்கல் பிரச்சினை இன்னும் தப்பாக அவருக்குத் தெரிந்ததால் உதைத்துக் (‘உதைக்கவேணாமா?') கேட்கவும் தயாராகவே (பின்னர் வருத்தம் தெரிவித்ததை மறந்து விடுவோம்!) இருந்தார். ஆனால் இது எதையும் தனக்கான ஒரு அரசியல் அமைப்பின் பின்புலத்தோடு அவர் செய்யாததால் அவர் பப்ளிஸிட்டியும் தேடவில்லை; ஆதாயமும் தேடவில்லை. ஆக, அரசியல் சாராமல் அனைத்திற்காகவும் அச்சமில்லாமல் குரல் கொடுத்த ரஜினி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர் மட்டுமில்லை. சுத்த வீரனும்கூட!

ஆக, ரஜினி என்கிற சுத்த வீரன் போற்றப்படத்தான் வேண்டுமேயொழிய தூற்றப்படக்கூடாது!

- நரேந்திரா கமல்ராஜ்

Courtesy : Cinema Express


 
16 Comment(s)Views: 5993

balaji,india
Friday, 14th November 2008 at 10:05:08

wonderfull comments. nice.
kannan,
Tuesday, 11th November 2008 at 09:13:50

every thing u are telling is some wat correct.. but in recent times when i analyze the problem of rajini's sorry for the kanada state, it seems that the distributors asked rajini that due to his voice on vokaenakal strike his movie wont be allowed to run so better help us like tat so only rajini would have asked sorry..
Rajasekar,qatar
Friday, 7th November 2008 at 09:50:04

The report seems to be good. But not actually. It says that Rajini confussed again due to eanthiran. It is a misguide report. Please remove this article from this site. And dont discuss more about politics please. we can talk lot about good things about rajini. Thanks.
SL Boy,Sri Lanka
Friday, 7th November 2008 at 08:58:43

please translate to english
........................
..............
please...

sasikumar,coimbatore
Friday, 7th November 2008 at 02:52:21

excuse sir you notgo to arasiyal politics you do only cinema field...plz sir its my request...........
m.mariappan,india/tuticorin
Friday, 7th November 2008 at 02:48:20

Dear Narendra Kamal raj

Your statement is not like fans statement.
some words is giving opposite meaning.

Pls. do not use this words in future.
Because rajini sir known what he said
so you dont say and dont give opp explanation for that.

srini,
Friday, 7th November 2008 at 00:51:00

this post is nt good.........how come they mention like "thalaivar just confused when i come none can stop me just to make enthrin run" how can they allow such posts in rajini fans.com do u think he is selfish in his statement.....how can fan we can talk like dis?...admin how you allow dis kinda post withour verifying fully...these words hurting die hard fans like me.
Boss Rasigan,Pennsylvania/USA
Thursday, 6th November 2008 at 23:17:01

Excellent and unbiased article. Thanks Cinema Express.
Praba,chennai
Thursday, 6th November 2008 at 22:05:10

Assuming that Thalaivar won't plunge into politics, what will be his next move after Endhiran release?
Will he act in another film (I dont think so)?
will he go to himalayas (I dont think so)? ?
Will he play a kingmaker role (Donno)?
Will these politicians allow our thalaivar to quietly retire?

rajeshkumar,Madurai
Thursday, 6th November 2008 at 20:29:38

இந்த கட்டுரை ரஜினியை பாராட்டுவதுபோல் தோன்றினாலும், அவர் அரசியலுக்கு வர கூடாது என்ற நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்பது என் கருத்து...
இதில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் மிக ஜாக்கிரதையாக கையாளப்பட்டுள்ளது... (நய)வஞ்ச(க) புகழ்ச்சி கட்டுரை என தோற்றம் அளிக்கிறது...

kunil,australia
Thursday, 6th November 2008 at 16:35:51

hi, im an avid thlaivar fan and am residing in australia. it is sometimes sad to see that almost all the important articles in this website are in Tamil. its a site for all fans and not all of thalaivars fans can read tamil. but that doesnt make us a lesser fan. it is with great regards to the administrators of this website i ask you all to consider posting articles in dual language. Long Live Thalaivar

---------------------
Dear Kunil,
Thanks for your feedback.. we do post the same articles in english as well - we have a team of volunteers helping in translating articles in tamil to english. Please keep checking the space for english version. It should be in place in maximum 24 hours time. depend on the availability of our team you can see articles in english as well
Thanks
Admin
----------------------

karthik,
Thursday, 6th November 2008 at 16:18:14

oru velai rajini imaya malai poyitta rasikarkallukku eamatramaka irukalam aanal avarakku nimmadhi kidaikkum.avar nimmadhi than en nimmadhi
Manikandan Bose,Chennai
Thursday, 6th November 2008 at 14:26:45

Great Article..

Thanks to CINEMA EXPRESS

Ramakrishnan,Chennai
Thursday, 6th November 2008 at 12:39:43

Good Analysis, good comments by cinema express. I beg you people please leave him free don't try to do what you think in his real life. He is doing everything in the screen. He came back to acting from his peaceful, jealous free
S.Pugazhenthi,Chennai
Thursday, 6th November 2008 at 11:58:30

Acceptable view about Thalaivar...

Kumar,
Thursday, 6th November 2008 at 11:54:27

excellent

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information