Related Articles
ரஜினி ஒரு தனி நடிகரல்ல... ஒன்மேன் இண்டஸ்ட்ரி!
Why Muthu didn t celebrate Silver Jubilee?
இது ஒரு மிக அரிய புகைப்படம்...
இணையத் தமிழ் மென்பொருளறிஞர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தலைவர் செயல்பட மாட்டார்!
In the historical place Machu Picchu..
ரஜினி ஒரு வகையில் எனக்கு தெய்வம்தான்
தலைவர் வார்த்தைகள்தான் நமக்கு ..
தலைமை ரஜினி மன்றத்தின் அனுமதியில்லாமல் ரஜினி மன்ற நிர்வாகிகள் பத்திரிக்கைகளுக்கும், மீடியாவ
ரஜினியும் அமிதாப்பும் பணிந்து செல்ல
மன்னிப்பு... வருத்தம் - இரண்டும் ..
ரஜினி... அரசியல்... சில உண்மைகள்!
Pondichery theater cutout quiz answer!
தலைவர் எந்த முடிவை எப்போது அறிவித்தாலும் நமக்கு அது கொண்டாட்ட நேரம்தான்
Anbulla Rajinikanth is the best of all Thalaivar’s guest role film
Don't urge him, just wait with patience !
Times of India praises thalaivar...
1980-ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!
குசேலன் படத்தை பற்றி ஷங்க்ரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டது
சினிமா ரசிகர்கள் சங்கத்துக்கு ரஜினிபேன்ஸ்.காம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2013 2003
2012 2002
2011 2001

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார்
(Friday, 19th September 2008)"உழைப்பாளி'' படத்தில் நான் ரஜினி சாரை இயக்கியபோது, ஒருநாள் லஞ்ச் பிரேக்கில் நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ரஜினி என்னிடம், "வாசு சார்! உங்களுக்கு நடிப்பில் யார் யாரையெல்லாம் பிடிக்கும்?'' என்று கேட்டார்.
 
 நான் அவரிடம், "எனக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி ரொம்ப பிடிக்கும். அவர்களை அடுத்து இப்போதுள்ள நடிகர்களில் கமல் ரொம்ப பிடிக்கும்'' என்றேன்.
 
 நான் இப்படிச் சொன்னதும், ரஜினி சார் சிரித்தபடியே "அப்படியா?'' என்று கேட்டார்.
 
 "உண்மைதான் சார். "நாயகன்'' படம் பார்த்த நேரத்தில் "இப்படி ஒரு நடிகரா'' என்று பிரமித்துப்போனேன். "நாயகன்'' ஸ்பெஷல் ஷோவுக்கு கமல் சார் பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் வந் திருந்தார். படம் முடிந்ததும் சிவாஜி சார் எழுந்து கமலை கட்டித் தழுவினார். நடிப்பின் சிகரம் நடிகர் திலகம் கமலை இப்படி பாராட்டியதை அத்தனை பேரும் வியப்புடன் பார்த்தோம். சிவாஜி சாரின் அந்த பாசத் தழுவலிலேயே நடிப்பின் நாயகனை அங்கீகரிப்பது புரிந்தது. நான் கமலைப் பாராட்டும்போது, "படம் முழுக்க நான் பார்த்தது, வேலு நாயக்கரைத்தான்! வேலு நாயக்கர் என்பவர் இருந்தால், நான் அவருக்கு ஆயுள் முழுக்க அடியாளாக இருக்க விரும்புகிறேன்'' என்றேன். கமல் சார் சிரித்துக் கொண்டாரே தவிர, வேறு எதுவும் பேசவில்லை'' என்றேன்.
 
 ரஜினி சார் இப்போது என்னை ஆழமாகப் பார்த்தார். "வாசு சார்! உங்க பீலிங்தான் எனக்கும். நாயகன் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வரேன். உட்கார முடியலை. நிற்க முடியலை. நடக்க முடியலை. அந்த வேலு நாயக்கர் சும்மா சும்மா கண்ல வந்து நிக்கறார். இனியும் பொறுக்க முடியாதுன்னு ஆனப்ப, உடனே போன் போட்டு கமல் சாருக்கு வாழ்த்து சொன்னேன். நான் மட்டும் உடனே பாராட்டலைன்னா அன்னிக்கு எனக்கு தூக்கமே வந்திருக்காது'' என்றார்.
 
மற்றவர்களுக்கும், ரஜினிக்கும் இதுதான் வித்தியாசம். நான் பாராட்டிய கமலை என்னையும் தாண்டி பாராட்டுகிறார். கமல் - ரஜினி இருவரிடமும் இந்த பெருந்தன்மை சிகரமாய் எழுந்து நிற்கிறது என்பதும் உண்மை.''
 
 சினிமாவில் இன்றைய முன்னணி ஹீரோக்கள் கமல் - ரஜினி இருவருமே நண்பர்கள். போலித்தனம் எதுவும் இல்லாத நிஜமான நண்பர்கள். கமல் பற்றி ரஜினியிடம் யாராவது குறையாக சொன்னால் ரஜினி, அதை சகித்துக் கொள்ளமாட்டார். அதுமாதிரி கமலிடம் ரஜினி பற்றி யாராவது கூறினாலும் அதுதான் கதை.
 
 ஒருமுறை ரஜினியிடம் இதுபற்றி நான் ஆச்சரியமாகவே கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டு சொன்னார் இப்படி: "வாசு சார்! எங்களுக்குள் போட்டி உண்டு. பொறாமை மட்டும் கிடையவே கிடையாது. நான் நடிக்கும் படம் முடிந்ததும் அவர் பார்ப்பார். அவர் படம் முடியும்போது எனக்கு போட்டுக்காட்டுவார். இருவரும் படத்தின் நிறைகுறை பற்றி விவாதித்துக் கொள்வோம்.
 
 "தசாவதாரம்'' படத்தில் அவர் நடித்த 10 கேரக்டர்களையும் அவர் எனக்கு காட்டியபோது, என் பிரமிப்பு அடங்க ரொம்ப நேரமாயிற்று. அதிலும் புஷ் வேடத்தில் அவரது கெட்டப் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வை என்னால் விவரிக்க இயலவில்லை'' என்றார், ரஜினி.
 
 இவர்கள் நடிப்பை வியக்கிற மாதிரியே நட்பையும் வியக்கிறேன்.''
 
 இவ்வாறு டைரக்டர் பி.வாசு கூறினார்.


 
16 Comment(s)Views: 3621

Basker,India
Sunday, 7th March 2010 at 06:42:47

ரஜினி நிகர் ரஜினி தான்
kalai,malaysia
Sunday, 23rd November 2008 at 01:42:30

thalaivar not come to dasavatharam funtion becoz he was in robo shooting.
Dhanendran,MALAYSIA
Wednesday, 24th September 2008 at 05:19:25

kamal not even respect rajini sir. valge thailavar.
Govind,USA
Sunday, 21st September 2008 at 12:21:33

'வெணாம்! அழுதுடுவேன்... இத்தோட நிறுத்திக்குவோம்... ‍ ‍ இப்படிக்கு "முன்னாள் ஆசுகாரு ரவி இன்னாள் ஆர்டினரி நரி"
R.Bashyam,Chennai,india
Sunday, 21st September 2008 at 01:17:23

Thats BOSS our BOSS has always showed lot of respect , affection to this undesering character
SAMBI,Coimbatore
Saturday, 20th September 2008 at 01:08:47

That is thalaivar.
Where is will there will be skill - i.e thalaivar
but
Where is skill there will be ------ i.e "Karma(m)yogi

K.Selvanathan,Coimbatore
Friday, 19th September 2008 at 22:35:38

thalaiver thalaiver than
Raj T,USA
Friday, 19th September 2008 at 20:32:32

ரஜினி இந்த ஒரு விசயத்தில் தவறு செய்திருக்கிறார்... ஒரு COPY CAT ஐ , 'மைக் மோகனிடம் பதினைந்த்து ஆண்டுகள் முக்கி மோதி பொட்டியிட்டவனை' இந்த அளவுக்கு ரஜினி மதிக்ககூடாது....
Vadivel,India/Chennai
Friday, 19th September 2008 at 20:02:30

Yep I am able to accept what has been written about Rajinikanth. But I am not too sure whether Kamal also shows the same respect or affection towards Rajinikanth!! In dasavatharam audio release when they have invited Jackie Chan from China, Mamooty from kerela, Amitabh from Mumbai why did he skip/miss Rajinikanth who stays along with him in the same city??????
Bharat,U.S.A
Friday, 19th September 2008 at 19:15:34

Hats off to Rajini. As far as Kamal is concerned, of course, he has openly showed 'kinda' jealousy. I am yet to see him praising Rajini after watching his movie recently. I would suggest you remove this article from this web site since it is doing no good to our thalaivar!
Anonymous,
Friday, 19th September 2008 at 11:41:47

இனி வரும் நடிகர்களிடம் இப்படி ஒரு நட்பு இருப்பது மிகவும் கடினம். ரஜினி, கமல் காலத்தோடு இதெல்லாம் ஓவர்.
deepu,india/madurai
Friday, 19th September 2008 at 08:59:50

thats thalaivar
vasuhi,srilanka
Friday, 19th September 2008 at 08:53:08

Hi all
i am new to this site.Thanks to give rajani's latest news and valuable articles. He is always great. I also proud to be a fan of suppe star.

Sanjev,USA
Friday, 19th September 2008 at 08:45:24

Rajni Sure does respect this ,Not sure about Kamal's part
Sathyananthan,Malaysia
Friday, 19th September 2008 at 08:28:42

Please Post back this Article in english. I dont know to read tamil well... i'm now only learning tamil so please help to post back this article in english
johnroyal,chennai
Friday, 19th September 2008 at 05:45:58

kindly publish in English the system does not support

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information