'இதெல்லாம் ஒரு பிழைப்பா?' என்று பல பத்திரிக்கைகளை கேட்டிருக்கிறோம். ஆமாம் சர்க்குலேஷ்னை ஏத்தறதுக்கு இதை விட வேறு வழி எங்களுக்கு இல்லை என்று பத்திரிக்கைகள் வியாபாரம் நடத்துவது அவ்வப்போது வெளிச்சத்துக்கு வரும் விஷயம்தான்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட ஒரு சமுக விரோதியை பற்றி சில வாரங்கள் கூட எழுத முடியாமல் அவசர அவசரமாக தொடரை முடித்துக்கொண்ட ஜீனியர் விகடன் குசேலன் வெளியீட்டு நேரத்தில் நடந்த பரபரப்புகளை காசாக்கி கொள்ள நினைத்திருக்கிறது. யாரோ ரசிகர் வருத்தப்பட்டதாக இரண்டு பக்கத்தில் ஒரு கட்டுரையை எழுதி , அதை அட்டடைப்பட கவர் ஸ்டோரியாக்கி, ஊரெங்கம் போஸ்டர் ஒட்டியிருப்பதில் சர்க்குலேஷன் தவிர வேறென்ன பொதுநல நோக்கு இருப்பதாக தெரியவில்லை.
பணத்துக்காகவும் சர்க்குலேஷனுக்காகவும் வாராவாரம் ஏதாவது ஒரு பரபரப்பபுச் செய்தியை மஞ்சள் பத்திரிக்கைகளை விட கேவலமான யுக்தியை பயன்படுத்தி பத்திரிக்கை தர்மதத்தை சிதைக்கும் ஜீனியர் வகிடன் போன்ற பத்திரிக்கைகளுக்கும் பஸ்களிலும் ரயில்களிலும் பையில் கை விட்டு பர்ஸை லவட்டும் மோசமான ஜேப்படிக்காரர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
பத்திரிக்கைகளில் முகத்திரையை கிழித்து நமக்கும் அலுத்துப்போய்விட்டது. இம்முறை சம்பந்தப்பட்ட பத்திரிக்கையில் பணியாற்றியவரே இதைப்பற்றி எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்.
"அந்த போட்டிப் பத்திரிகையை விட ஜூ.வி. எந்த விதத்தில் உசத்தி என்று சொல்கிறாய்?" - ரொம்பப் பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள் இந்தக் கேள்வியை.
"கேள்வியே தப்பு.. 'அந்த'ப் பத்திரிகையை ஜூ.வி.க்கு போட்டி என்றே சொல்ல முடியாது. ஜூ.வி.யின் ஸ்டாண்டேர்டே வேறு" - இது நாள் வரை இப்படி தான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
ஜூ.வி.யில் தனி மனித தாக்குதல் கிடையவே கிடையாது என்பது நான் குறிப்பிடும் காரணங்களில் ஒன்று. ஒரு மேட்டரில் எந்த அளவிற்கு உண்மை இருக்கும் என்று ஆராய்ந்து பிறகே வெளியிடுவது தான் ஜூ.வி.யின் வழக்கம்.
நேரடியாகவே ஜூ.வி.யில் பணி புரிந்த பரிட்சயம் உள்ளதால் ஒவ்வொரு சிறு எதிர் கருத்துகளுக்கு கூட ஆசிரியர் குழுவினர் எப்படி பதறியடித்துக் கொண்டு ரீயாக்ட் செய்வார்கள் என்றெல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன்.
உப்பு பேராத கடிதத்துக்கு கூட பெரிய முக்கியத்துவம் தருவார்கள். மறுப்பு கடிதம் வந்து விட்டால் போதும், உடனடியாக அதற்கு விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிருபரை வறுத்து எடுத்து விடுவார்கள்.
இதெல்லாம் பழைய கதை... எப்போது 'சீனியர்' விகடனை 'இளைஞர்களுக்காக' என்று காரணம் கூறி சகலத்தையும் மாற்றினார்களோ அப்போதே இந்த கொள்கைகளையெல்லாமும் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.
லேட்டஸ்ட் ரஜினி மேட்டரை எடுத்துக் கொள்வோம்..
எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து எழுத முடியுமோ அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து எழுதப்பட்டுள்ளது அந்தக் கட்டுரை.
ஜூ.வி.யில் வெளியான இந்தக் கட்டுரைக்கும் முன்னதாக ஏற்கனவே இதே ரஜினியின் நிலைப்பாடு குறித்து அதற்கும் முந்தைய இதழிலும் ஒரு கட்டுரை வெளியானது. அதற்கான வலைத்தள வாசகர்கள் கருத்துகளைப் பார்த்தால் ஜூ.வி.யின் லட்சணம் நன்கு புலனாகும்.
தனிப்பட்ட முறையில் ரஜினியை 'மெண்டல்' என்றெல்லாம் தாக்கும் கடிதங்களை வலைத்தளத்தில் பிரசுரம் செய்திருந்தார்கள்.
"I think he (rajini) is still mental..Let me request him to keep his holes shut.." - இப்படி ஒரு கருத்து கவிதா என்ற முண்டத்தினால் அங்கே கொடுக்கப்பட்டு அதையும் பிரசுரித்திருந்தார்கள்.
ஒன்று இது ஆங்கிலத்தில் இருப்பதினால் நெறியாளுநருக்கு புரியாமல் அனுமதித்திருக்க வேண்டும். அல்லது இப்படிப்பட்ட கருத்துகளை (மட்ட்மே) அனுமதிப்பது என்ர கொள்கைப் பிடிப்பு (புதிய தமிழ் கலாசார காவலர்?!) அவர்களாகவே உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
மேலே சொன்ன வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பதை நீங்களே சொல்லுங்கள்.
ஆனால் இதை எதிர்த்து அனுப்பும் கருத்துகளை அனுமதிக்கவில்லை.
"இப்படிப்பட்ட கருத்துகளை அனுமதிப்பதற்கு என்ன ம*த்துக்கு நெறியாளுநர் என்று ஒருவர்?" என்று கேட்டு மினஞ்சல் அனுப்பினேன். 'நாகரிகம் தேவை' என்று அட்வைஸித்து பதில் வந்தது. "தனிப்பட்ட முறையில் மெண்டல் என்று ரஜினியை விமரிசிக்கும் கருத்தில் நாகரிகம் நிறைய உள்ளதா?" என்று கேட்டேன். "ஒரு நாளைக்கு ஆயிரம் கருத்துகள் வருகின்றன. எனவே அவ்வப்போது தவறு வருவது சாதாரணம் தான்" என்று பதில் வந்தது. ஆனால் மேற்படி மெண்டல் என்ற கருத்து நான்கைந்து நாட்களுக்கு அப்படியே இருந்தது. இதே போல 'அவன் இவன்' என்றெல்லாம் ஏக வசனத்தில் தாக்கும் கருத்துகளும் இன்னும் அப்படியே உள்ளன.
சரி, இது வலைத்தளத்தில் உள்ள கருத்துகள். ஆசிரியர் குழுவினர் பார்வைக்கு போகாதது போல என்று நினைத்து அவர்களுக்கு ஒரு மினஞ்சலும் அனுப்பினேன். இது வரை பதில் வரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த இதழ் ஜூ.வி.யை பார்த்த உடன் தான் தெரிந்தது, அவர்கள் இதை திட்டமிட்டே செய்திருக்கிறார்கள் என்று.
ஜூ.வி. இந்த அளவிற்கு தரம் தாழும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.
'இது நாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு..' என்ற பெயரில் தொடங்கும் அந்த மொட்டை கடுதாசி கட்டுரையை படிப்பவர்களுக்கு விகடன் குழும இதழ் இப்படியும் தரம் நாறிப்போகுமோ என்ற எண்ணம் நிச்சயம் கண்டிப்பாக ஏற்படும்.
ஒரு வருடத்திற்கு எத்தனை முறை ரஜினி படத்தை அட்டையைல் போட்டு காசு பார்த்திருப்பீர்கள்?
மேற்படி மேட்டரில் பல கேள்விகளை வரிசையாக கேட்டிருக்கிறிர்களே? அந்தக் கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு இப்போது தான் தோன்றியதா?! உதாரணத்திற்கு, எந்த மேட்டரிலாவது உறுதியாக இருந்திருக்கிறீர்களா என்று ஒரு கேள்வி? ஜெ.வை முதலில் வசை பாடி விட்டு பிறகு 'தைரிய லட்சுமி' என்று துதி பாடினார் என்று குற்றம் சாட்டியிருக்கிறர்கள்..
கொஞ்சம் சிரித்து வைத்துக் கொள்வோம்..
தவறு செய்த போது சுட்டிக் காட்டினார். நல்லது செய்த போது பாராட்டினார். இதில் என்ன தவறு. ஒரு முறை எதிர்த்ததற்காக கண்மூடித் தனமாக காலம் முழுக்க எதிர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? சின்னப்புள்ளத் தனமா இல்ல இருக்குது?!
நீங்கள் ஜெ.வை பாராட்டி எழுதாததா? கருணாநிதியை திட்டியும் பாராட்டியும் நீங்கள் எழுதியதில்லையா? அதே கேள்வியை ஜூ.வி.யிடம் திருப்பி கேட்கலாமா?
பா.ஜ.க., காங்கிரஸ் போன்ற கட்சிகளை கருணாநிதி திட்டியோ, பாராட்டியோ மாற்றி மாற்றி நிலைப்பாடு எடுத்ததில்லையா? அப்படியெனில் கருணாநிதிக்கும் இதே கேள்வியை தான் நீஙக்ள் வைக்கிறீர்களா?
உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள்.'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள். முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று யாராவது விளக்குவார்களா?
தமிழர்கள் என்றால் பா.ம.க.வை எதிர்க்க வேண்டும் என்று சொல்கிறார்களா?!
சினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்!
நீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம்.இதெல்லாம் ஜூ.வி.யின் கட்டுரை வரிகள். எந்த அளவிற்கு தனி மனித தாக்குதலில் தாங்கள் ஈடு படுவோம் என்பதை அவர்கள் நிருபிக்கும் வரிகள்.
'நடிகனை நடிகனா மட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம்.இந்தக் கூத்தை படித்தீர்களா? அதாவது ரஜினிக்கு பரிது பேசினால் அது ஜால்ரா போடுபவர்களாம்.
அடப்பாவிகளா...! உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று! இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா? 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு! சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது(?) மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்!போதுமா இந்த தாக்குதல்?
குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன? அதாவது படம் வெளியான அன்றே அது நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என்ற 'கதை'யை கட்டி விடப் பார்க்கிறார்கள் இவர்கள்.
அதுவும் ரஜினி ரசிகர்களை ஜால்ராக்கள் என்று மேலே சொல்லி விட்டு, கீழேயே அவர்கள் மீது பரிதாபப் படுகிறார்களாம். ரசிகர் ஷோ என்பதே முதல் நாள், முதல் ஷோ. தலைவர் படத்தை பொறுத்த வரை முதல் ஷோவிலேயே எப்படி நஷ்டம் வர முடியும்?! சொல்லுங்கள் பார்ப்போம்?! என்ன டப்பா படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை எந்த ரசிகனாவது தவற விடுவானா? யார் காதில் பூச்சுற்றல்?! அதுவும் ரஜினி ரசிகர்கள் மேல் ரொம்பவே அக்கறை ஜூ.வி.க்கு!
பாபா ஸ்பெஷல் என்ற பெயரில் வாரா வாரம் அனுமதியின்றி படங்களை வெளியிட்டு 'எச்சரிக்கை' பெற்ற பிறகு ரஜினி எதிர்ப்பு என்ற நிலையை எடுத்திருப்பார்களோ?
விகடன், ஜூ.வி. விற்பனை எப்பொழுதெல்லாம் சரிகிறதோ, அப்போதெல்லாம் உடனடியாக அதனை தூக்கி நிறுத்த அவர்களுக்கு தேவை ஒரு ரஜினி கவர் ஸ்டோரி. உப்பு பெறாத செய்திக்கு கூட கை, கால் வைத்து ஒரு பில்டப் கொடுத்து அட்டையில் சூப்பர் ஸ்டாரை போட்டு காசு பார்த்து, இப்போதும் கூட இதிலும் ரஜினியின் படத்தை அட்டையில் போட்டு காசு பார்க்கிறர்கள். இது எவ்வளவு பெரிய கேவலம்?
இயக்குநர் இமயம் கே.பி. படங்களின் விமரிசனம் பல ஆண்டுகளுக்கு விகடனில் வெளி வந்ததில்லை. காரணம் தெரியுமா?
விகடன் குழுவினர் உண்மையிலேயே தைரியம் இருந்தால், இனிமேல் ரஜினி குறித்த எந்த செய்தியையும் வெளியிட மாட்டோம் என்ற சபதம் எடுக்க வேண்டும். ரஜினி தான் தமிழர்களின் எதிரியாயிற்றே. அவரை அட்டையில் போட்டு எதற்கு நீங்கள் எழுத வேண்டும்?!
காசு பார்க்க மட்டும் ரஜினி தேவையா? கெட்ட வார்த்தை வருது வாயில.. என்ன, பழகிய இடமாயிற்றே என்று அமைதி காக்கிறேன்.
யோவ், அந்த கட்டுரை உண்மையிலேயே விகடன் தரத்துக்கு ஏற்றதா? நம் (முன்னாள்) எம்.டி. பாலசுப்ரமணியம் அவர்களிடம் மேற்படி கட்டுரையை படித்துப் பார்க்கச் செய்து அவரின் கருத்தைக் கேட்டு மனசாட்சிபடி எழுதுங்கள் பார்ப்போம்.
ஒரு கட்டுரை வெளியிடும் முன்னர் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாதவர்கள் பத்திரிகை நடத்துவதை விட ஊத்தி மூடி விட்டு ஓடி விடலாம். இல்லாவிட்டால் எப்போதும் போல அவர்கள் தரப்பில் சொல்கிறார்கள் என்ற வழக்கமான ஜூ.வி. டைப் 'வழ வழா கொழ கொழா' என்று எதையாச்சும் தானாகவே சப்பைக்கட்டு எழுதி தொலைத்திருக்கலாமல்லவா?!
இந்த அளவிற்கு தனிப்பட்ட முறையில் ஒருவரை தாழ்த்தி எழுதியதற்கு பின்னால் உள்ள நுண்ணரசியல் விரைவில் வெளிவரும். சூப்பர் ஸ்டாரே மன்னித்தாலும், தமிழ் திரையுலக பிதாமகன் மறைந்த வாசன் அவர்களின் ஆவி கூட இவர்களை மன்னிக்காது.
இறைவா, எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். துரோகிகளிடமிருந்து எங்களையும், எங்கள் பர்ஸையும் காப்பாற்று.
- சூப்பர் ஸ்டாரின் உண்மை ரசிகர்கள்...
http://mayavarathaan.blogspot.com/2008/08/455.html
|