Rajinikanth on Thursday (31 Aug) gave an interview to a TV channel in Hyderabad, where he was to attend the release of Kuselan, and said that he had "learnt a lesson" from the episode and "will think 10 times" before he is asked to speak in any function.
"It was a mistake. I have learnt a big lesson. What's important is that the mistake is not repeated. I will be careful while speaking in future and see that I don't hurt anybody," he said.
Rajnikanth said he “bowsâ€Â his head before good people but would not apologise to “goondasâ€Â. He insisted that he had not spoken against Kannada activists but against people who used violence to achieve their ends.
After the TV interview, Karnataka Rakshana Vedike volunteers announced that they were ending their protest.
Kuselan was released on Thursday night at the Cauvery and Urvashi theatres in Bangalore and tickets were sold exclusively for fans of the actor.
A press meet was held in the morning of 2nd August and superstar Rajinikanth clarified his stand on the recent 'apology' he had made to the Kannada media.
'I am happy where I stand today. My speech during the protest meeting over the Hogennakkal issue was directed only to the people who indulged in violence and not to Kannadigas in general' said Rajinikanth.
Speaking at a function organized to distribute financial aid to the technicians who worked for his latest film 'Kuselan', Rajinikanth said, 'Now I say that I have learnt my lesson'.
It may be recalled that Rajini's reported apology to Kannadigas evoked protests from a section of Tamil film personalities.
Earlier, speaking at the function, director Balachander said, 'I discovered Rajinikanth and know him very well as a man of principles and integrity. He had only expressed his regret and did not apologize. Put an end to this once and for all and let us not be party to a fight within Tamil cinema'. He also appealed to everyone to stay united.
Tamil Version :
நான் கன்னட மக்களிடமோ, கன்னட அமைப்புகளிடமோ மன்னிப்புக் கேட்கவில்லை. வருத்தம்தான் தெரிவித்தேன் என்று ரஜின்காந்த் இன்று தெரிவித்துள்ளார்.
நேற்று வெளியான ரஜினியின் குசேலன் திரைப்படத்தில் திரைக்குப் பின்னால் பணியாற்றிய அனைத்துக் கலைஞர்களுக்கும் தனது சம்பளத்திலிருந்து ரூ.20 லட்சமும் தயாரிப்பாளர்-இயக்குநர் சார்பில் ரூ.20 லட்சமும் சேர்த்து ரூ.40 லட்சம் வரை உதவித் தொகையை இன்று வழங்கினார் ரஜினி.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடந்த விழாவில் உதவித் தொகையை வழங்கியபின் ரஜினிகாந்த் பேசியதாவது:
இந்தப் படம் வெளியாவதற்கு முன் நடந்த பல சம்பவங்கள் என்னை நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன.
குசேலன் படம் வெளியாவதற்காக நான் மன்னிப்புக் கேட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். நான் பேசியது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. பல பத்திரிகைகளில் வெளியாகியும் உள்ளது.
நான் கன்னட மக்களிடமோ, அங்குள்ள கன்னட அமைப்புகளிடமோ மன்னிப்புக் கேட்கவில்லை.
ஓகேனக்கல் குடிநீருக்காக உண்ணாவிரதமிருந்த மேடையில் நான் பேசும்போது, ஒரு விஷயத்தைத் தெளிவாகப் பேசியிருக்க வேண்டும். 'இந்த குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களையும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் உதைக்க வேண்டாமா?' என்று கூறியிருக்க வேண்டும்.
இதைத்தான் இப்போது தெளிவுபடுத்திக் கூறி, கர்நாடகாவில் குசேலன் வெளியாக ஒத்துழையுங்கள் கேட்டுக் கொண்டேன்.
நான் கூறியதை கன்னட மக்கள் அனைவரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுதான் வருத்தம் தெரிவித்தேன். இது எனக்கு ஒரு பாடம். இனி எந்த நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் எனக் கற்றுக் கொண்டேன்.
உதவி செய்வதில் ஆனந்தம்:
உதவி செய்யும்போது எப்போதுமே ஆனந்தமாக இருக்கிறது. அதனால்தான் இனி குசேலன் படத்திலிருந்து, நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும் கலைஞர்களுக்காக எனது சம்பளத்திலிருந்து ஒரு தொகையை உதவியாக வழங்க முடிவு செய்திருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனது சம்பளத்திலிருந்து ரூ.20 லட்சமும், இயக்குநர் வாசு சார்பில் ரூ.5 லட்சமும், தயாரிப்பாளர்கள் சார்பில் ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
என் அடுத்த படமான சுல்தானில் பணியாற்றும் கலைஞர்களுக்கும் இதுபோன்ற உதவிகள் தொடரும். அந்தப் படத்தின் தயாரிப்பாளர்-இயக்குநர் என்ற முறையில் செளந்தர்யாவும் ஒரு பெரிய தொகையை இதற்காக ஒதுக்க முன் வந்துள்ளார்.
இதேபோல எனது அடுத்த படம் ரோபோவிலும் உதவித் தொகை வழங்க இயக்குநர் ஷங்கரிடம் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு தயாரிப்பாளரும் இதை நடைமுறைப்படுத்த வேண்டும், என்றார் ரஜினி.
கே.பாலச்சந்தர் பேச்சு:
இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் கே.பாலச்சந்தர் பேசியதாவது:
ரஜினி குசேலனுக்காக யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படிப்பட்ட குணம் கொண்டவரல்ல அவர்.
தயாரிப்பாளரகள், விநியோகஸ்தர்கள், தனது ரசிகர்கள், அப்பாவிப் பொதுமக்கள் என யாருமே இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற பெருந்தன்மையில் அவர் வருத்தம் தெரிவித்தார்.
அதை இங்கே சிலர் தவறாகப் பிரச்சாரம் செய்வது வேதனையாக உள்ளது. இவ்விஷயத்தில் இயக்குநர்கள் பாரதிராஜா, சீமான், அமீர் போன்றோர் புரிந்து கொண்டு பேசியிருப்பது பாராட்டத்தக்கது என்றார்.
விழாவில் பிரமிட் சாய்மிரா நிறுவன நிர்வாக இயக்குநர் சாமிநாதன், தயாரிப்பாளர்கள் புஷ்பாகந்தசாமி, ஜி.பி. விஜயகுமார், இயக்குநர் வாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Bosses of TamilCinema welcomes Rajini stand..
தமிழ் படங்கள் கர்நாடகத்தில் தடையில்லாமல் வெளியாவதற்காக தன்னுடைய புகழை துச்சுமாக நினைத்து சூப்பர் ஸ்டார் விடுத்த வேண்டுகோளுக்கு தமிழ் சினிமாவுலகம் ஆதரவை தெரிவித்துள்ளது.
தயாரிப்பாளர்களும், படத்தோடு சம்பந்தப்பட்டவர்களும் எந்த விதத்தி்லும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தன்னையை துச்சமாக நினைத்து ரஜினி எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியது என்று இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் வருத்தம்தான் தெரிவித்திருக்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் பரந்த மனப்பான்மையுடன் அவர் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் என்று பாராட்டியிருக்கிறார் பாரதிராஜா.
தயாரிப்பாளர் கலைப்புலி சேகரன் கூறுகையில், தனிப்பட்ட முறையிலோ, தனி மனிதராகவோ அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தயாரிப்பாளர், விநியோகஸ்தர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தொழில் ரீதியாக அவர் வருத்தம் தெரிவித்திருப்பதில் நியாயம் உள்ளது. இதைக் கண்டிப்பது சரியல்ல என்று கூறியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கர்நாடகா விஷயத்தில் ரஜினியின் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள்.
குசேலனை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட அமைப்புகள் இரண்டு வாரங்களாகவே மிரட்டி வந்தன. தமிழ் திரையுலகமோ பலத்த மௌனம் சாதித்து வந்தது. 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகை வாழ வைத்துக்கொண்டிருக்கும் ரஜினி சம்பநத்ப்ட்ட படத்திற்கு பிரச்னை வந்தபோது வாய் திறக்காமலிருந்த தமிழ் திரையுலகத்தினர் ரஜினியே முன்வந்து பேசியதும் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Fans reaction:
Rajini fans around world are in the anger mood against the so called cinema stars who fits for nothing other than commenting bad against Rajini. Rajinifans.com will not publish their name here as we feel its ashame to have their name in this place.
Rajinifans.com and Thalaivar fans thanks Bharathiraja, Balachander, Seeman and others who supported thalaivar at this crucial situation. We fans will never forget you. Please accept our sincere thanks and respect.
Better luck next time problem creators and please try to learn some manners from Thalaivar.
மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்.. இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்...
-Rajini fans
|