Related Articles
ஜெயிலர் சக்ஸஸ் மீட் : சத்தமில்லாமல் வெற்றியை கொண்டாடிய ரஜினி.!
Jailer total gross collection crosses historic numbers, Sun Pictures official announcement
ரஜினிகாந்த் 2023 இமயமலை பயணம் புகைப்பட கவரேஜ்
அலப்பற கெளப்புறோம் : ஜெயிலர் ஸ்பெஷல்
ரஜினி சார் ஒரு ரெக்கார்ட் மேக்கர் - ஜெயிலர் இசை வெளியீட்டு விழா
தலைவரின் அலப்பறை… மாஸ் காட்டும் ஜெயிலர் Hukum பாடல்!
ஜெயிலர் காவாலா பாடல் – VIBE அலையிலிருந்து வெளிவராத ரசிகர்கள்!
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை உயர் அதிகாரி அழைப்பு
முத்துவேல் பாண்டியனின் என்ட்ரி - ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என்டிஆர் (NTR) நூற்றாண்டு விழாவில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்!

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
பட்டயை கிளப்பும் ஜெயிலர் வசூல்.... ரஜினிக்கு காசோலை மற்றும் சொகுசு காரை Surprise Giftஆக கொடுத்த கலாநிதி மாறன்
(Thursday, 31st August 2023)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எதிர்பார்த்த வெற்றியை விட தற்போது இந்த படம் பல மடங்கு வசூல் சாதனை செய்திருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

மொத்த பட குழுவும் இந்த வெற்றியை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அதே நேரத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் நேற்று, சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தின் வெற்றி பரிசாக ரஜினிக்கு காசோலை ஒன்றை கொடுத்திருக்கிறார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW i7 மற்றும் BMW X7 மாடல் கார்களை அவரது முன்பு நிறுத்திய கலாநிதி மாறன், அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு ரஜினியிடம் கூறினார்.

அதில் BMW X7 மாடல் காரை ரஜினி தேர்ந்தெடுத்தார். அதனை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இயக்குநர் நெல்சனுக்கு செக் ஒன்றை கொடுத்தார். பின்பு தற்போது Porsche கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

 

அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் அவர் Porsche கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

 

 






 
0 Comment(s)Views: 1242

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information