சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2007-ல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம் சிவாஜி. இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகம் முழுக்க இந்த படம் பெரிய வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.
சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் மாஸுடன் ஷங்கரின் கிளாஸ் இணைந்துகொள்ள படம் பலரது Favourite ஆக ஆனது.இவர்களுக்கு உறுதுணையாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிரட்டினார், ஷ்ரியா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார். சுமன்,மணிவண்ணன்,விவேக்,வடிவுக்கரசி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
படம் பெரிய வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக நிலைத்து நின்று வருகிறது. அப்படி மறக்கமுடியாத வெற்றியை தந்த இயக்குனர் ஷங்கரை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவாஜி வெளியாகி 15 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தயாரிப்பாளர், இயக்குனர், படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தை பெரும் வெற்றி ஆகிய ரசிகர்களுக்கு நன்றியும் மகிழ்ச்சியும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடியோ பதிவை ஏவிஎம் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சிவாஜி திரைப்படம் வெளியாகி 15 வருடங்கள் ஆவதை ரசிகர்கள் 15 Years Of Sivaji என ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வந்தனர்.
இந்நிலையில் சிவாஜி படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தாரின் ஏவிஎம் சரவணன், எம்.எஸ்.குகண், அருணா குகண் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். சிவாஜி 15 ஆண்டை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
முன்னதாக இயக்குனர் ஷங்கரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து 45 நிமிடங்கள் உரையாடியிருந்தார். அந்த சந்திப்பில் இருவரும் தற்போதைய சினிமா நிலை மற்றும் ராம் சரண் இயக்கத்தில் ஷங்கர் இயக்கும் படம் குறித்து பல விஷயங்களை விவாதித்துள்ளனர்.
|