Popular comedy actor King Kong aka Shankar became famous after appearing in a brief role in Superstar Rajinikanth's 1990 Tamil film Adhisaya Piravi.
King Kong also acted in several films of Ajith and Vijay, his comedy episodes with Vadivelu were big hits. In 2009, the actor won a National Award for the Empowerment of Persons with Disabilities (Outstanding Creative Adult Person with Disabilities).
For the past ten years, King Kong has been trying to meet Rajinikanth to take a pic with him and get his wishes for the National Award. Only recently, Rajinikanth saw King Kong's request in an interview.
A few days back, King Kong got a call from Rajinikanth's office. "Rajini sir told me that my request didn't reach him for the last ten years. He has now asked me to come with my family to his Poes Garden residence after the rage of COVID 19 pandemic comes down", said King Kong.
நகைச்சுவை நடிகர் கிங்காங்கின் ஆசையை நிறைவேற்றிய ரஜினிகாந்த்
நடிகர் கிங்காங் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து நேற்று முன் தினம் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்தார், தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால் தற்பொழுது வரை வாழ்த்து பெற முடியவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.
சமூக வலைதளத்தில் இந்தப் பதிவை பெருமளவில் ரஜினி ரசிகர்கள் பகிர்ந்தனர். சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பத்தாண்டுகளுக்கு முன்பு உங்களைச் சந்தித்திருப்பேன்; ஆனால் இந்தத் தகவல் எனக்கு சரியாக வந்து சேரவில்லை மன்னித்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.
நீங்கள் விருது பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துகள் எனக் கூறிய நடிகர் ரஜினிகாந்த், நிச்சயமாக ஒரு நாள் நாம் சந்திக்கலாம் விரைவில் உங்களை அழைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
|