உலகின் பெருமைக்குரிய திரையரங்குகளுள் ஒன்றான பாரிசின் ரெக்ஸ் அரங்கில் கபாலி சிறப்புக் காட்சி திரையிடப்படுகிறது. இந்த அரங்கில் ஒரு தமிழ் சினிமா இந்த அரங்கில் திரையிடப்படுவது இதுதான் முதல் முறை.
தமிழ் சினிமாவுக்கு பெருமையான நேரம் இது என்றால் எந்த வகையிலும் அது மிகையாக இருக்காது.
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி இந்தியப் படம் என்பதைத் தாண்டி, சர்வதேச அளவில் எதிர்ப்பார்க்கப்படும் படமாகிவிட்டது. முதல் முறையாக 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கபாலி ரிலீசாகவிருக்கிறது. குறிப்பாக ஐரோப்பாவில் தமிழ்ப் படங்களே ரிலீசாக இத்தாலி, போலந்து போன்ற நாடுகளில் கூட கபாலி வெளியாகிறது.
பிரான்சில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ப் படங்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக ரஜினி படங்களுக்கு இங்கிலாந்துக்கு அடுத்து பெரிய மார்க்கெட் பிரான்ஸ்தான்.
பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள ரெக்ஸ் சினிமா அரங்கம் மிகவும் புகழ்பெற்றது. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அரங்கமும் இதுதான். பிரான்ஸ் நாட்டின் கட்டடக் கலையின் சிகரமாக அந்நாட்டு அரசு ரெக்ஸ் சினிமாவை அறிவித்துள்ளது. 2800 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த பிரமாண்ட அரங்கில், இதுவரை ஹாலிவுட் மற்றும் டிஸ்னியின் படங்கள்தான் சிறப்புக்காட்சியாக போடப்பட்டு வந்துள்ளன.
முதல் முறையாக இப்போது ரஜினிகாந்தின் கபாலி படம் வரும் ஜூலை 14-ம் தேதி இந்த அரங்கில் சிறப்புக் காட்சியாக திரையிடப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்குப் பிறகு, இந்த அரங்கில் சிறப்புக் காட்சியாக வெளியாகும் முதல் படம் ரஜினியின் கபாலிதான்.
சிறப்புக் காட்சி குறித்த அறிவிப்பை ரெக்ஸ் சினிமாவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரெக்ஸ் சினிமாவின் 65 ஆண்டு வரலாற்றில் அங்கு திரையிடப்படும் முதல் ஹாலிவுட் அல்லாத படம் கபாலிதான்.
|