இலங்கை தமிழர்கள் இலங்கை அரசாங்கத்தால் படுகொலை செய்யப்பட்டு வந்ததை கண்டித்து, இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்த முதல் நடிகர் சூப்பர்ஸ்டார் 'ரஜினிகாந்த்' தான். இலங்கை அரசிற்கு எதிராக கண்டன கூட்டத்தை நடத்திய முதல் ரசிகர்கள் ரஜினிகாந்தின் ரசிகர்கள் தான்.
1984ம் ஆண்டு ஏப்ரல் 29 ந்தேதி சென்னை மெரினா கடற்கரையில் ரஜினியின் ரசிகர்கள் இலங்கை அரசின் அராஜகத்தை கண்டித்து ஒரு நாள் அடையாள "உண்ணாவிரத போராட்டம்" துவங்கினார்கள். காலை 9 மணியளவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் துவங்கி வைத்த இந்த உண்ணாவிரத போராட்டத்தில், ரஜினி பங்கேற்று மாலை 6 மணியளவில் தன் ரசிகர்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்து, இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றினார்..
☆இலங்கை அரசின் வன்முறை செயல்களை கண்டித்து, மேடை ஏறி இலங்கை தமிழர்களுக்காக பேசிய முதல் நடிகர் 'ரஜினிகாந்த்'.
☆1984 ஏப்ரல் மாதத்தில் ரஜினி தன் ரசிகர்களோடு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
☆1984 நவம்பர் மாதத்தில் சென்னை மெரினா கடற்கரை தொடங்கி நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கை தூதரகத்தை நோக்கி தன் ரசிகர்களோடு கண்டன ஊர்வலமும் நடத்தினார்.
☆சூப்பர் ஸ்டார் ரஜினி தானாக முன்வந்து இலங்கை தமிழர்களுக்காக 1984ம் ஆண்டில் தன் ரசிகர்களை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்டதை கண்டு திரையுலகமே திகைக்க, அதற்க்கு அடுத்த ஆண்டான 1985-ல் கமலஹாசன் தன் ரசிகர்களோடு ஊர்வலம் நடத்தி தனக்கும் தமிழர்கள் மீது அக்கறை உண்டு என்பதை போல் காட்டிக்கொண்டது, ரஜினியின் போராட்டம் எந்த அளவிற்கு பலர் கண்களை அச்சுறுத்த வைத்துள்ளது என்பதை உணர்த்தும்.
☆விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் போன்றவர்களுக்கு முன்பே இலங்கை அரசுக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியவர் இந்த ரஜினிகாந்த் தான்.
☆80கள், 90கள், 2000-, 2010-ம் ஆண்டுகள் என 4 காலக்கட்டங்களிலும் முன் நின்று இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசிற்கு கண்டனங்களை மேடை ஏறி தெரிவித்து வந்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.
|