லிங்காவும் வசூலைத் தரவில்லை என்று வழக்கம் போல ரஜினியை வம்புக்கு இழுக்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழக வினியோகஸ்தர்கள்.
கேரளாவிலும் லிங்காவின் வசூல் டல் தான் என்று அடுத்தடுத்து செய்திகள் வந்த நிலையில், அப்படி வந்த செய்திகள் எல்லாமே திட்டமிட்டு பரப்பப்பட்ட வதந்திகள் என்று தெரிய வந்துள்ளது.
அதேபோல பனிக்காலம், ஐயப்பன் சாமிக்கு மாலை போடுவது, மாணவர்களுக்கு பரீட்சை நேரம் என பல சீசன்கள் ஒரே நேரத்தில் வந்ததால் கேரளாவில் ரிலீசான எந்தப் படத்துக்கும் எதிர்பார்த்த ரசிகர் கூட்டம் இல்லை. இருந்தபோதும் கூட லிங்கா மட்டும் தான் அங்கு ஓரளவுக்கு நன்றாக போய்க் கொண்டிருந்தது.
லிங்காவைப் பொறுத்தவரை கேரளாவில் 250 தியேட்டர்களில் அந்தப்படத்தை ரிலீஸ் செய்தது தான் மிகப்பெரிய தவறு என்கிறார்கள். இதனால் நேற்று முதல் லிங்காவுக்கு தியேட்டர்கள் எண்ணிக்கை 60 ஆக குறைந்து விட்டது. அதற்கு காரணம் கடந்த வெள்ளிக்கிழமை மலையாளத்தில் பிரியதர்ஷனின் ஆமையும் முயலும் மற்றும் வைசாகன் இயக்கிய கசின்ஸ் ஆகிய படங்கள் ரிலீசானது.
மேலே சொன்ன இரண்டு புதிய மலையாளப் படங்கள் அங்கு ரிலீசானதால் தியேட்டர்களை பிரித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் லிங்கா வினியோகஸ்தருக்கு ஏற்பட்டது.
அதேசமயம் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைந்தாலும் நேற்றுமுதல் லிங்காவுக்கு வரக்கூடிய ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ஆமையும் முயலும், கசின்ஸ் ஆகிய இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. அந்த இரண்டு படங்களையும் மண்ணைக் கவ்வ வைத்து, லிங்காவில் வசூல் ரெண்டாவது வாரமாக அங்கு தொடர்கிறது என்பதே லேட்டஸ்ட் நிலவரம்.
இதனால் அந்தப் படங்களுக்கு வரக்கூடிய ரசிகர்களும் லிங்காவுக்கே வருகிறார்கள். மேலும் பரீட்சைகளும் முடிந்து விடுமுறை வந்து விட்டதால் பெண்கள் குடும்பத்தோடு படம் பார்க்க படையெடுத்து வருகிறார்கள்.
இருந்தாலும் லிங்காவைப் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்களுக்கு படத்தின் கிளைமாக்ஸ் பலூன் சண்டைக்காட்சி மட்டும் பிடிக்கவில்லை என்றும், அதை ரஜினி என்கிற மிகப்பெரிய ஹீரோவுக்கு வேறு மாதிரியான நல்ல சீனை யோசித்து செய்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் ஒட்டுமொத்த கேரள ரசிகர்களின் ஒரே கருத்தாக இருக்கிறது.
மேலும் மக்கள் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கும்படியாக லிங்கா மட்டுமே இருப்பதால் கேரளாவிலும் லிங்கா மிகப்பெரிய ஹிட் என்பதே உண்மை.
http://www.soundcameraaction.com/hot-news/lingaa-kerala-release-latest-report/
|