Related Articles
Rajini-Starrer Becomes Highest 3-Day Grosser of 2014 in Chennai
Superstar Rajinikanth storm into 100 Crore Club within 3 days
Rajinikanth-Starrer Creates New Record Worldwide
Roaring Lingaa celebration by Rajinikanth fans in California
Maharaja Rajinikanth as Raja Lingeswaran
Lingaa earns more than the latest Hunger Games movie at U.S. box office
Lingaa draws family and fans
Lingaa celebrations at Kaasi Theater
The Day Before Superstar Rajinikanth Birthday
Keeping it simple, Lingaa style - Nikhaar Dhawan

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
நெகட்டிவ் விமர்சனங்களை நொறுக்கி தள்ளிய சூப்பர் ஸ்டார்
(Tuesday, 16th December 2014)

கடந்த 12ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா வெளியான மூன்றே நாட்களில் ரூ.100

கோடிக்கும் மேல் வசூல் செய்து இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் செய்யாத சாதனையை செய்துள்ளது. இனிமேலும் இந்த சாதனையை முறியடிக்க இன்னொரு ரஜினியின் படம்தான் வரவேண்டும் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

லிங்கா வெளியான தினத்தில் பெரும்பாலான ஊடகங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்துக்கொண்டிருந்த நிலையில் ஒருசிலர் மட்டும் வேண்டுமென்றே நெகட்டிவ் ரிசல்ட்டுக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். பொய்யான சில தகவல்களை கூறி லிங்கா படம் படுதோல்வி அடைந்துவிட்டதுபோல் ஒரு மாயையை ஏற்படுத்தினர். ஆனால் பெரிய பெரிய அரசியல் முதலைகளையே தனது மெளனத்தால் வென்ற சூப்பர் ஸ்டார் அமைதியை நடப்பதை கூர்ந்து கவனித்து வந்தார்

முதல் நாள் பரவிய வதந்தி இரண்டாவது நாள் கொஞ்சம் வலுவடைந்தாலும் மூன்றாவது நாள் அடியோடு நொறுங்கிப்போனது என்பதுதான் உண்மை. மூன்றே நாட்களில் லிங்காவின் வசூல் ரூ.100 கோடியை தாண்டிவிட்டது என்று பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் வெளிவந்ததும் புரளியை கிளப்பிய புல்லுறுவிகள் காணாமல் போயினர். நெகட்டிவ் விமர்சனம் செய்த ஊடகங்கள் அவசர அவசரமாக தாங்கள் முன்பு போட்ட விமர்சனங்களை டெலிட் செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய பாசிட்டிவ் விமர்சனங்களை எழுதத்தொடங்கிவிட்டனர். அதுதான் சூப்பர் ஸ்டாரின் பவர்.

தன்னுடைய படத்தை நெகட்டிவ்வாக எழுதியதற்காக கோபப்படாமல் அமைதியாக இருந்து தான் ஒரு நிறைகுடம் என்பதை நிரூபித்துவிட்டார் சூப்பர் ஸ்டார். நேற்று திங்கட்கிழமை வாரத்தின் முதல் வேலைநாளாக இருந்தும் அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல் ஆனதில் இருந்தே படம் சூப்பர் ஹிட் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பதுபோல், லிங்கா எதிர்ப்பாளர்கள் முதலில் வென்றது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்பட்டாலும், இறுதியில் வென்றது சூப்பர் ஸ்டார் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் அபாரமான நம்பிக்கைதான். கடைசியாக அவருடைய லிங்கா படத்தில் வரும் பாடல்தான் அனைவருக்கும் ஞாபகம் வருகிறது.

'உண்மை ஒருநாள் வெல்லும்,
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயே,
பொய்கள் புயல் போல் வீசும்
உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்.....


- Indiaglitz.com






 
0 Comment(s)Views: 721

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information