20 November 2012
‘சிவாஜி 3D’ 12.12.2012 அன்று வெளியாகிறது – ஏ.வி.எம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
20 November 2012
ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘சிவாஜி 3D’ திரைப்படம் டிசம்பர் 12, 2012 சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் அன்று வெளியாகிறது.
இது குறித்து ஏ.வி.எம்.ப்ரொடக்ஷன்ஸ் தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுதும் மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக ‘சிவாஜி 3D’ வெளியாகும் என்று தெரிகிறது.
வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், ஏ.வி.எம். நிறுவனம் தற்போது படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக திரையரங்குகளுடன் பேச்சு வார்த்தை நடத்திவருகிறது. பல தியேட்டர்களில் படம் ஏற்கனவே புக் செய்யப்பட்டுவிட்டது.
‘சிவாஜி’ ஒரிஜினல் பதிப்பு 2007 ஆம் ஆண்டு வெளியானபோது, வர்த்தகம், வெளியான தியேட்டர் எண்ணிக்கை, நிகர வசூல் (சுமார் 300 கோடிக்கும் மேல்), நட்சத்திரங்களின் ஊதியம், என ஒன்று விடாமல் அனைத்திலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
“என் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு வழங்கியிருக்கும் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு நன்றி!” – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிப்பு!
21 November 2012
ஏ.வி.எம். நிறுவனம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான சிவாஜி படத்தை பிரசாத் EFX நிறுவனத்தின் மூலம் முப்பரிமாணத்தில் சிவாஜி 3D யாக படமாக்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளான 12-12-12 ஆன்று ஆவரது ரசிகர்களுக்காகவும் மற்றும் ரஜினி மீது பிரியமுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து ரசிகர்களுக்காகவும் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்கள்.
இது பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.வி.எம். நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த ஓரு பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருப்பதாவது :-
“ஏ.வி.எம்.நிறுவனம் டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தார்கள். அது மாபெரும் வெற்றி பெற்றது. இப்பொழுது அந்தப்படத்தை சிவாஜி 3D யாக உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் சிவாஜி 3D படத்தின் பிரம்மாண்டம் 100 மடங்காக உயர்ந்திருக்கிறது. மூன்று பிரம்மாண்டமான படங்களை எடுக்கின்ற செலவில் இந்த சிவாஜியை சிவாஜி 3D-யாக உருவாக்கியிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை எனது பிறந்த நாளான 12-12-12 அன்று வெளியிட்டு என் அன்பு ரசிகர்களுக்கு எனது பிறந்தநாள் பரிசாக இந்தப் படத்தை ஏ.வி.எம். நிறுவனம் வழங்குகிறது. இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் மாபெரும் வெற்றி படமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.” என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.
படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வருமாறு : ஒளிப்பதிவு – கே.வி.இனந்த், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், வசனம் – சுஜாதா, கலை-தோட்டாதரணி, எடிட்டிங் – ஆன்டனி, சண்டை – பீட்டர் ஹெய்ன், பாடல்கள்- கவிஞர் வாலி, கவிப்பேரசு வைரமுத்து, பா.விஜய், நா.முத்துக்குமார். நடனம் – பிரபுதேவா, ராஜூ சுந்தரம், லாரன்ஸ், பிருந்தா.
சிவாஜி 3D – ப்ரோமோஷன்களை துவக்கியது ஏ.வி.எம். – நாளிதழ் விளம்பரம் வெளியீடு!
22 November 2012
ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு CONTENT என்று சொல்லப்படும் சரக்கு எத்தனை முக்கியமோ அதே அளவு விளம்பரம் மற்றும் ப்ரோமோஷன்கள் முக்கியம். ஏ.வி.எம். நிறுவனம் அதில் ஒரு மிகப் பெரிய எக்ஸ்பர்ட்.
எத்தனையோ ஹிட் படங்களை தங்களது ப்ரோமோஷன் மூலம் சூப்பர் ஹிட் படங்களாக்கியிருக்கிறார்கள்.
சிவாஜி 3D படத்தை பொறுத்தவரை அவர்கள் பெருந்தொகையை முதலீடு செய்திருப்பதால் ப்ரோமோஷன் புதிய படங்களுக்கு இணையாக பட்டையை கிளப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்றைய முன்னணி நாளிதழ்களில் சிவாஜி 3D திரைப்படத்தின் அசத்தல் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
படம் வெற்றி பெற்று ரசிகர்கள் அனைவரையும் மகிழ்விப்பதுடன் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவரும் லாபமடைய வாழ்த்துவோம்.
SIVAJI 3D PAPER ADVERTISEMENTS
|