29 August 2012
ஜெயா டி.வி.யின் 14 வது ஆண்டுவிழாவும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.எம்.எஸ்.விஸ்வநாதன்- ராமமூர்த்தி அவர்களுக்கு பாராட்டு விழாவும் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று மாலை 5.00 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினி, கலைஞானி கமல் ஹாசன், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட முக்கிய திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் நாம் நண்பர்களுடன் கலந்துகொண்டோம். நிகழ்ச்சி குறித்த மற்ற சுவையான அப்சர்வேஷங்களை பின்னர் சொல்கிறேன். நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் உரை இதோ. (எழுத எழுத அப்டேட் செய்கிறேன்). Photographs will be updated later.
சூப்பர் ஸ்டாரின் பெயர் மைக்கில் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே, அரங்கமே கைத்தட்டல்கள் அதிர்ந்தது.
(கைத்தட்டல்… விசில்) “இந்த விழாவின் நாயகன் எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களே, இந்த விழாவிற்கும் தலைமை தாங்க வந்திருக்கும் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, (கைத்தட்டல்… விசில்) இந்த மேடையில் அமர்ந்திருக்கும் என்னுடைய குருநாதர் கே.பி. சார் அவர்களே, சரவணன் சார் அவர்களே, இசைஞானி இளையராஜா அவர்களே (கைத்தட்டல்… விசில்), என்னுடைய நண்பன் கமல் ஹாசன் அவர்களே(கைத்தட்டல்… விசில்), இங்கே வருகை தந்திருக்கும் சோ சார் அவர்களே, சிவக்குமார் அவர்களே, மற்றும் திரையுலக சிறந்த பெரியவர்களே, அமைச்சர்களே, பத்திரிக்கை நண்பர்களே, என்னை வாழ வைக்கும் (பலத்த கைத்தட்டல்… விசில்), வாழ வைத்த தமிழக மக்களே (கைத்தட்டல்… விசில்) அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். (கைத்தட்டல்… விசில்)…..
“சி.எம். பதவிக்கு பதவிக்கு வந்தபிறகு நான் கேள்விப்பட்டேன் இண்டஸ்ட்ரில இருக்கிறவங்க எல்லாரும் அவங்களுக்கு பாராட்டுவிழா நடத்தனும்னு சொல்லி ஆசைப்பட்டாங்க. ஆனா அவங்க தான் “இப்போ வேண்டாம்”னு சொன்னதா கேள்விப்பட்டேன். அவங்களே இப்போ இங்கே வந்து எம்.எஸ்.வி.அவர்களுக்கு பாராட்டு விழா நடத்துறாங்கன்னு சொன்னா ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச மாதிரி. மிகப் பெரிய விஷயம். இது உங்களுக்கும் கூட ஒரு மிகப் பெரிய சந்தர்ப்பம். இல்லேன்னா… உங்களை கூட பாராட்ட இப்போ எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்க முடியாது.”
“முதல்ல ஜெயா.டி.வி. 13 ஆண்டுகள் முடிந்து 14 ஆண்டுகள் அடியெடுத்து வைக்கிறாங்க. அந்த சாதனைக்காக அங்கே வேலை பார்க்குற அத்துனை பேருக்கும் நான் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிச்சிக்குறேன். நானும் ஜெயா.டி.வி. நிகழ்ச்சிகளை நிறைய பார்க்குறேன். சரவணன் சார் சொன்ன மாதிரி காலைல போடுற நிகழ்ச்சிகள் (பக்தி, ஆன்மிகம்) எனக்கு ரொம்ப பிடிச்சவை. அதே போல, இந்த நியூஸ் போடுறதுக்கு முன்னால போடுற ‘வரலாற்று சுவடுகள்’ எனக்கு ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் சோ சாரோட ‘எங்கே பிராமணன்’ தொடரை நான் ரொம்ப விரும்பி பார்ப்பேன். அதுல சோ சார் கொடுக்குற விளக்கங்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா அது அப்புறம் ஸ்டாப் ஆயிடுச்சு. நான் கூட சோ சார் கிட்டே இது பத்தி கேட்டேன். அதுக்கு சோ சார் சொன்னனாங்க… “சி.எம். கூட இது பத்தி என்கிட்டே கேட்டாங்க. “எனக்கு நேரமில்லே!”
சி.எம்.சொல்லி கூட கேட்க்காத ஒரு ஆள் தமிழ் நாட்டுல இருக்காங்கன்னு சொன்ன அது சோ சார் தான். (பலத்த கைத்தட்டல்… விசில்)
சோ அவர்களை காமிரா குளோசப்பில் காட்டுகிறது. அவர் தலையில் கை வைத்துக்கொள்கிறார். “இதையெல்லாம் ஏன்பா சொல்றே நீ?” என்கிற அர்த்தத்தில்.”
“ஒரு சின்ன செடியா இருந்த ஜெயா டீ.வி. இன்னைக்கு கமல்ஹாசன் சொன்ன மாதிரி ஒரு மரமா வந்திருக்கு தன்னோட சொந்த முயற்சியால என்பது பெரிய விஷயம்.”
“எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி சார் அவர்களுக்கு இங்கே பாராட்டு விழா. இங்கே மேடையில் அமர்ந்திருக்கும் எல்லோரைவிட நான் சினிமாவில் ஒரு ஜூனியர் தான். எம்.எஸ்.வி. அவர்களை பாராட்டுவதற்கு இளையராஜா சார், கமல்ஹாசன், கே.பி.சார் அவங்களே தயங்கும்போது வார்த்தைகள் இல்லைன்னு சொல்லும்போது நான் மட்டும் எப்படி பேசுவேன்? என்னோட படங்கள் கூட அவர் நிறைய செய்யலே.”
“ஆனா பெங்களூர்ல நான் இருக்கும்போது – கன்னடா பேசுறவங்க எல்லாம் – “போனால் போகட்டும் போடா”ன்னு பாடுவாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே. “நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்”னு பாடுறாங்க. அதோட மீனிங்கே தெரியாமலே.” (பலத்த கைத்தட்டல்… விசில்)
“நான் மொழியே தெரியலேன்னாலும் படங்களுக்கு போவேன். அந்த கதையோட அம்சத்தை தெரிஞ்சிக்கிறதுக்கு. ‘சர்வர் சுந்தரம்’ அப்படின்னு ஒரு படம். ஒரு சர்வர் சினிமா ஆக்டர் ஆகுறான் அப்படின்னு ஒரு கதை. நானும் கண்டக்டரா இருந்து சினிமா ஆக்டரா ஆகணும்னு ஒரு நினைப்பு. கனவு. அதனால அந்தப் படத்துக்கு போனேன். அந்த படத்துக்கு நான் போயிருந்தபோது, ‘அவளுக்கென்ன அழகிய மனம்’ அப்படின்னு ஒரு பாட்டு. அதுல மியூசிக் வாசிக்கிற மாதிரி, ஒரு MUSICIAN கம்போஸ் பண்ணும் சீன வர்றப்போ ஒரே கைதட்டல் விசில். ஒரு எம்.ஜி.ஆர். ஒரு சிவாஜி இங்கல்லாம் பர்ஸ்ட் டைம் இன்ட்ரோட்யூஸ் ஆகும்போது எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஒரு கைதட்டல் ஒரு விசில். எனக்கு புரியவேயில்லை. எதுக்கு எல்லாரும் இதுக்கு இப்படி கை தட்டுறாங்கன்னு. ஏன் இவ்ளோ ஆரவாரம்னு. என் பக்கத்துல இருக்குறவருகிட்டே கேட்டேன். “அந்த மியூசிக் கம்போஸ் பண்ற மாதிரி ஒருத்தரை காட்டுறாங்க இல்லே… அவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அவருக்கு தான் நாங்க கைதட்டுறோம்” அப்படின்னு சொல்றார்.”
“ஒரு இசையமைப்பாளருக்கு இவ்ளோ ஆரவாரம்… ஃபேன்ஸ்… மதிப்பு…. அப்படிங்கிறது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு. அதுக்கப்புறம் நான் மெட்ராஸ் வந்ததுக்கப்புறம், ‘அபூர்வ ராகங்கள்’ சமயத்துல தான் நேர்ல பார்த்தேன். நான் சினிமாவுல பார்த்ததுக்கும் நேர்ல பார்க்குறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பார்க்கும்போது காவி உடையில, நேத்தியல் குங்குமம் சந்தனம் இதெல்லாம் வெச்சிகிட்டு இருந்தாரு.”
“எனக்கு ‘மூன்று முடிச்சு’ படத்துல நடிக்கும்போது படத்துல நான் பாட்டு பாடும்போது, அந்த போட்ல வர்ற ஸாங்… ‘மனவினைகள் யாருடனோ’ அந்த ஸாங்…. எனக்கு பெக்கூளியரான ஒரு ஃபேஸ்… அதுக்கு பெக்கூளியரான ஒரு வாய்ஸ் வேணும்னு, எம்.எஸ்.வி.சாரைத் தான் எனக்கு பாட வெச்சாங்க. எனக்கு முதன் முதலா பாடினது எம்.எஸ்.வி. சார் தான். அதுக்கப்புறம் நினைத்தாலே இனிக்கும்… ‘சம்போ…சிவ சம்போ…’ பாட்டை பத்தி நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க…”
“எம்.எஸ்.வி. & ராமமூர்த்தி இந்த மாதிரி சாதனையாளர்களை பத்தி பேசனும்னு சொன்னா எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அதாவது இந்த மரணம்குறது இயற்கையானது. எல்லாருக்கும் நிகழக்கூடியது. இந்த மரணம் என்பது ஒரு தடவை தான் என்றில்லை… ரெண்டு முறை நிகழும்.”
“நிறைய பேருக்கு அதாவது 90% ஜனங்களுக்கு ஒரு தடவை தான். அதாவது உயிர் உடலைவிட்டு போனா ஃபினிஷ். அவ்ளோ தான்.”
“மிகப் பெரிய பேரும் புகழும் பெற்றவர்கள் அந்த பெயரையும் புகழையும் தோல்வியாலேயோ இல்லே வேற சில காரணங்களினாலோ அந்த பெயரையும் புகழையும் இழந்துவிட்டால் அப்போ அவன் சாகிறான். அப்போ ஒரு முறை மரணம் நடக்கும். அதற்கப்புறம் இயற்கையாக உயிர் பிரியும்போது ரெண்டாவது முறையாக மரணம் நிகழும். ஆனா மரணமே இல்லாத சில பேர் இருக்காங்க. அவங்க 1% தான் இருப்பாங்க. அவங்க வாழும்போதும் சரி.. இறந்து போன பிறகும் சரி… அவங்க பேரும் புகழும் என்னைக்குமே இருக்கும். அவங்கல்லாம் பார்த்தீங்கன்னா சாகா வரம் பெற்றவர்கள். (கைத்தட்டல் அடங்க சற்று நேரமாகிறது. அவரால் பேச முடியவில்லை. பின்னர் மீண்டும் தொடர்கிறார்.) அவங்கல்லாம் ஒரு தனிப்பிறவி.”
“நார்த்துல பார்த்தீங்கன்னு சொன்னா… சினிமா துறையில, வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன்… நம்ம தமிழ்நாட்டுல பார்த்தீங்கன்னு சொன்னா… நம்ம காமராஜர் அவர்கள்… பெரியார் அவர்கள்… அறிஞர் அண்ணா அவர்கள்… புரட்ச்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், (கைத்தட்டல்… விசில்), நடிகர் திலகம் சிவாஜி அவர்கள், கண்ணதாசன் அவர்கள், இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. அதே போல, இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சில சாகா வரம் பெற்ற பிறவிகள் நம்மோடு. அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் (கைத்தட்டல்)… விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள். இவங்களுக்கெல்லாம் தோல்வி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.”
“வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும். தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா… அதையெல்லாம் தாண்டி ஒரு லெவல்ல அவங்க இருப்பாங்க. தோல்வி, வெற்றிகளை தாங்கிக்கொள்கிற ஒரு சமமான மனநிலையில இருப்பாங்க. அந்த வரிசையை சேர்ந்தவங்க நம்ம புரட்சி தலைவி அவர்கள்… எம்.எஸ்.வி. அவர்கள். அவங்க வாழ்ந்த காலத்துல நானும் வாழ்ந்திருக்கிறேன். அவங்க கூட பழகியிருக்கிறேன். அப்படிங்கிற மனசு சந்தோஷத்தோட இந்த விழாவுல எனக்கு பேச வாய்ப்பளித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொண்டு புரட்சித் தலைவி அவர்கள் இன்னும் மக்களுக்கு நிறைய சேவை செஞ்சி, இந்தியா மட்டுமில்லே உலக அளவில் அவர் பேரும் புகழும் பெறவேண்டும்…. அதற்கு அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மனநிம்மதியையும் அந்த இறைவன் வழங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வணங்கி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.” (கைத்தட்டல் விசில்… கைத்தட்டல் விசில்).
|