Other Articles
ரஜினியின் கேள்வியும் நண்பர்களின் அமைதியும்!!
Enthiran shooting at Goa from 7 October onwards
Good turn out for Bangalore fans meeting
ரசிகரா அல்லது தொண்டரா?
எத்தனை பேர் ரஜினிக்கு ஆதரவுக் கரம் நீட்டுவார்கள்?
Actress Radha admired and respected Rajini
உங்களோடு சில நிமிடம் - 1
ஒருவேளை இந்த முறை அரசியலுக்கு வந்துவிட்டால்?
ஒரு பரபரப்பான சூழலில் அமெரிக்காவிலிருந்து இன்று வருகிறார்!
Superstar never liked wearing wig or beard
லயோலா கல்லூரி வெளியிட்ட கருத்துக் கணிப்பு குறித்த நமது பார்வை
Sathyaraj praising our Thalaivar ...
ரஜினிக்குப் பட்டிருக்கும் நன்றிக்கடன் அடுத்த ஜென்மத்திலும்கூட தீராதது
ஜப்பானில் ரஜினி
நம்ம ரஜினி சார் இந்த நூற்றாண்டின் இணையில்லாத மனிதர் என்கிறார் இயக்குநர் மனோபாலா
தலைவர் என்ன சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களே
Actress Saritha Speaks
Superstar served food to the waiters!
Translate Rajini Tamil Articles to English
Enthiran Shooting Spot Photos (Updated)

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!
(Thursday, 2nd October 2008)

தான் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்; உலக அளவில் போற்றப்படும் நடிகர் என்ற நினைப்பு ஒருநாளும் இருந்ததில்லை ரஜினிக்கு. எப்போதும் எளியோனுக்கு எளியோனாய், மனதவில் ஒரு யோகியைப் போலவே வாழ்பவர் அவர்.

நடிப்பு, தொழில் என்று வந்துவிட்டால் நமது தலைவரின் ஈடுபாட்டுக்கு நிகரே கிடையாது. ஒரு காட்சியை இயக்குநர் மனம் திருப்தியுறும் விதத்தில் அவர் நடித்துக் காட்டும் பாங்கிருக்கிறதே... அதை நேரில் பார்த்து அனுபவிப்பது ஒரு தனி பரவசம். பல முறை அந்தப் பரவசம் எனக்குக் கிடைத்திருக்கிறது.

தான் எடுத்த முடிவில் ஏதாவது மாற்றம் வேண்டியுள்ளதா என தன் மீது அக்கறை கொண்ட அனைவரிடமும் எத்தனை முறை வேண்டுமானாலும் கருத்துக் கேட்கும் நம்பர் ஒன் ஜனநாயகவாதி அவர். ஆனால் முடிவு எடுத்த பின் அதிலிருந்து பின்வாங்குதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...

அதுதான், ‘யோசிக்காம பேசமாட்டேன்; பேசின பிறகு யோசிக்க மாட்டேன்’, என ஒரு வரி திருக்குறளாய் அவர் வாய் மொழியாகவே மலர்ந்தது. இது அவர் பாபாவில் பேசிய வசனம் மட்டுமல்ல... ரஜினியின் வாழ்க்கையில் மிகவும் நெருக்கடியான கட்டமாகப் பார்க்கப்பட்ட 2002- காவிரி உண்ணாவிரதத்துக்கு இரு தினங்களுக்கு முன் அருணாச்சலா ஓட்டல் அறையில் அவர் உணர்ச்சி வேகத்தில் இந்த வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல அதை பிரமிப்போடு கேட்டுக் கொண்டிருந்தேன் அந்தப் போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்த தமிழ்நாடு எழுத்தாளர் சங்க பிரதிநிதிகள் ஐவரில் நானும் ஒருவன்!).

எனவே ரஜினி என்ற உண்மையான மனிதரைப் பற்றி இட்டுக் கட்டிய செய்திகளைத் தரவேண்டிய அவசியம் நமக்கில்லை... அந்த மகா திருப்பணியைச் செய்ய ஆவிகள், ஜூவிகள் மற்றும் ரிப்போர்ட்டர்கள் இருப்பதால் அவர்கள் ஏரியாவுக்குள் நாம் நுழைவதும் இல்லை.

இந்த மாதிரி பொய்களைப் படித்தே பழகிவிட்ட நமது நண்பர்களுக்கும், உண்மைக்கும் புனை கதைகளுக்குமான வித்தியாசம் தெரிய மறுப்பதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை!

ரஜினியின் எதிர்காலத் திட்டங்கள், ரசிகர்களுக்காகவும் தன்னை வாழவைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்யத் திட்டமிட்டுள்ள நல்ல காரியங்கள் பற்றியெல்லாம் நம்மிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டவர் லதா ரஜினிகாந்த் அவர்களின் மிகமிக நெருங்கிய உறவினர். நமது நீண்ட கால நண்பர். ஒரு விதத்தில் மூத்த பத்திரிகையாளர்.

அவர் பெயரை வெளியிட்டால்தான் நாம் தரும் செய்திக்கு நம்பகத் தன்மை கிடைக்கும் என்றால் இனி பல நல்ல தகவல்களை தரமுடியாமலே போகக் கூடும். தகவல் தருபவரின் அடையாளத்தைக் காப்பாற்றுவது மிக முக்கியம்!

நம்முடைய நோக்கம், ‘இதோ வருகிறார் ரஜினி... அங்கே ஜோசியம் பார்த்தார்... 9-ம் தேதி கொடியேற்றுகிறார்...’ என்றெல்லாம் கூறி, ரசிகர்களின் பாக்கெட்டுகளில் கையைவிட்டு பர்ஸடிப்பதல்ல..!

நிறைய பேர் நினைப்பதுபோல் ரஜினி செய்தித்தாள்களைப் படிக்காதவரல்ல... இணைய தளங்களைப் பார்க்காதவருமல்ல. தன்னைப் பற்றிய ஒரு செய்தி யார் மூலம் எப்படி மீடியாவுக்குப் போகிறது என்பது உள்பட ரஜினிக்கு எல்லாம் தெரியும்...

ஆனால் எதையும் அவர் தடுப்பதில்லை. ‘தன் பெயரில் யாராவது பத்திரிகை நடத்துகிறாரா... நடத்திக் கொண்டு போகட்டும். அதன் மூலம் நேர்மையாக அவர் பிழைத்துக் கொண்டால் போதும்’ இதுதான் ரஜினி வழி!

அல்லது அவரைத் திட்டி எழுதினால்தான் ஒருவருக்கு வயிறு நனையும் என்றால் அதையும்கூட அனுமதிக்கும் பெருந்தன்மையாளன் இந்த மனிதன்.

இந்த ரஜினிபேன்ஸ் வலைதளம், அதில் வருகிற எழுத்துக்களின் பின்னணி, எந்த பலனும் எதிர்பார்க்காமல் தனக்காக மீடியாவில் மல்லுக்கட்டிக் கொண்டு எழுதுபவர்கள், பத்திரிகை ஆரம்பிக்க விண்ணப்பம் கொடுத்திருப்பவர்கள், தனக்காக பிளாக் எழுதும் சில ரசிக்க நெஞ்சங்களின் உள்ளக் கிடக்கை... இப்படி எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் மனித ‘எந்திரன்’ அவர்!

ஆனால் ஒரு நல்ல தலைவன் எப்போதும் உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் நடக்காது.

அதனால்தான் தலைவர் அமைதி காக்கிறார். அவரது அமைதியில் அர்த்தங்கள் ஆயிரம்.
ஆனால் இங்கே ஒரு விஷயத்தை அழுந்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன், ரஜினியின் உலகத்தை சற்றேனும் எட்டிப்பார்க்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில்....

ரஜினி நிச்சயம் ரசிகர்களை ஏமாற்ற மாட்டார்!

- Sanganathan


 
25 Comment(s)Views: 4203

Previous Page
Previous
12
rajni bala,Dubai/159
Friday, 3rd October 2008 at 00:08:25

Hi fanz
How ru , first of all thanks to Mr.sanganathan , hatz of to u for ur open speech , enga thalaivaroda adi manasa aaranji sonadharku,Enga thalaivara Naanga(fanz cum rajni rajni devotees )irukuravarikum yaralayum onnu pana mudhiyadhu, freinds did u red last weeks dinakaran

JAWAHAR.T,INDIA - TIRUPUR
Friday, 3rd October 2008 at 00:03:46

நாங்களூம் நிச்சயம் தலைவரை ஏமாற்ற மாட்டோம்

jawahar.tirupur

Albert,
Friday, 3rd October 2008 at 00:01:28

I think Rajini should come to politics. If he comes, I am sure that would be a great revolution in national politics and most political parties will not find their place in the elections.In order to make it happen, he should be firm in his decision and not involve his family memebrs in politics. He should often meet his fans and review their comments and suggestions. Make trip to rural areas and meet preople all over tamilnadu.He should organise meetings with the help of his fans and do welfare activities to the poor people.

Hope he will do once he come into politics.

harisivaji,chennai
Thursday, 2nd October 2008 at 23:41:35

hi,
Rajni seira oru oru seilyu oru artham irukum aana avar amithya iruntha athuku ayram artham irukumnu kelvi patruken "The day will come soon"

Thanks,
harisivaji

From Colombo,Colombo
Thursday, 2nd October 2008 at 23:38:05

ஏமாற்ற மாட்டார்
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information