Rajini Story
1 ரஜினி கதை -எஸ்.விஜயன்

2 சினிமாவுக்கு வருவதற்கு முன்னாலேயே முரட்டுக் காளை-எஸ்.விஜயன்

3 சினிமா ஆசை -எஸ்.விஜயன்

4 எம்.ஜி.ஆரிடம் மோகம் -எஸ்.விஜயன்

5 திரைப்பட உலகில் ரஜினியின் அனுபவங்கள்

6 'எங்கள் குடும்பத்திற்குப் பண உதவிகள் செய்தார் ரஜினி'

7 ரஜினியின் திரையுலக அனுபவங்கள்

8 ரஜினிக்கு திரையுலக வாழ்வு கசந்தது

9 மணவாழ்க்கையில் ரஜினி

10 லதா-ரஜினியின் இல்லற வாழ்க்கை

11 ரஜினியின் எளிமை

12 கமலைப் பாராட்டிய ரஜினி

13 மாறுபட்ட ரஜினியைப் பார்த்து ரசித்தேன் -கமல் ஹாசன

14 நண்பனைப் பற்றி ரஜினி

15 நண்பனை நடிக்க வைத்த ரஜினி

16 ரஜினியின் ஸ்டைல் கல்லூரி பெண்களைக் கவர்ந்தது - ராஜ்பகதூர்

17 ரஜினியின் ரசிகை நடிகை ராதா

18 ப்ளட் ஸ்டோன்

18A கறுப்பு நிறத்திலும் ரஜினியின் தேஜஸ்.... -எஸ். கோபாலி

19 கடுமையான கட்டுபாடுகள் என்னை கவர்ந்தது: ரஜினி

20 இடைவிடாத முயற்சி பலன் தரும் -ரஜினி

21 தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் -ரஜினி

22 மனைவியின்உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி -பீட்டர் செல்வராஜ்

23 ரஜினியின் நடிப்பு அனைவரையும் ஈர்த்தது

24 ரஜினியின் நிஜ சண்டை

25 ஓவியத்தில் லயித்தது ரஜினியின் மனது

26 ரஜினியின் மொட்டை ஸ்டைல்

27 ரஜினியின் திரைப்படக் கல்லூரி அனுபவங்கள்

28 நட்பில் எந்தக் குறையும் இல்லை

29 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர்கள்

30 ரஜினியைப் பற்றி திரைப்படக் கல்லூரி நண்பர் சதீஷ

31 ரஜினி கதை: ரஜினியின் ஸ்டைலே அலாதி

32 இயல்புக்கு மாறன வெட்டியான் வேடத்தில் ரஜினி

33 ரஜினியின் ஆருயிர்த் தோழன் யார்?

34 ரஜினியும் ரசிகர் மன்றமும்

35 ரஜினியின் மனிதாபிமானம்

36 ரஜினிகாந்த் ஒரு அபூர்வமான ரகம்

37 ரஜினி மீது இனம் புரியாத அன்பு!: திருமதி ரெஜினா வின்சென்ட்

38 ரஜினியின் மீது நான்கு சூன்யம்

39 நான் கேள்விப்பட்டிராத நிகழ்ச்சி: டாக்டர் செரியன்

40 உணர்ச்சி வசப்பட்டு அடிக்கும் பழக்கம்

41 ரஜினியின் காதல் ஒருதலைக் காதலா?

42 ரஜினி காட்டிய வேடிக்கை

43 ரரஜினியின் மீது நம்பிக்கை பிறந்தது

44 ரஜினி கேட்ட ஓவியம்

45 ரஜினியிடம் கண்ட மாற்றம்

46 ராகவேந்திரா கல்யாண மண்டபத்திற்கு ரஜினி அழைத்து சென்றான்! -திருமதி ரெஜினா வின்சென்ட

47 ரஜினிக்கு ஏற்பட்ட வேதனை!

48 மின்னலைப் போல வந்தார் ரஜினி -ஏ.வி.எம்.சரவணன

49 ரஜினியின் கற்பனையில் விளைந்தவை

50 ரஜினிக்கு ஏற்பட்ட விபத்து

51 மனிதன், மனிதன்... இவன்தான் மனிதன்!

52 எனக்கொரு டி.வி.கிடையாதா? -ரஜினி

53 ரஜினியின் பேச்சுவன்மை

54 ஜினியை வைத்து அதிகம் படம் இயக்கியவன் நான்தான் எஸ்.பி.முத்துராமன்

55 முதல் வெளிநாட்டு படப்பிடிப்பில் ரஜினி

56 ரஜினியின் வேகம் அவரைக் காப்பாற்றியது!

57 ரஜினியை எப்படி உதைக்கலாம்? - கொதித்தார்கள் ரசிகர்கள்

58 ''ரஜினி வசனங்கள் எனக்கு புரியவில்லை, என் பேரன்களுக்கு புரிகிறது!

Rajini Story

தமிழ் திரையுலகில் திறமைதான் பாராமீட்டர் - ரஜினி (பாகம் 21)

''வசனங்களை நாம் எழுதிக் கொடுப்பதை மெருகேற்றுவதில், ரஜினிக்கு இருக்கும் திறன் அபாரம். வசனங்களை முன்பின் இடம் மாற்றிப் பேசும் அவரது ஸ்டைலைக் கண்டு பலமுறை வியந்து நின்றேன். எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று நாம் நினைக்க முடியாத அளவில் அவரிடம் வேகம் இருக்கும்.''

பாரதிராஜா, ரஜினி பற்றி கூறுகிறார்:
ஒரு நாள் ரஜினி திடீரென்று அழைத்தார். "உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும்" என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தார். "உங்களது டைரக்ஷனில் நடிப்பதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. சரியாக நடிக்காவிட்டால் நீங்கள் கடுமையாகத் திட்டுவீர்களாமே? சில சமயம் அடித்துவிடுவீர்களாமே!" என்று தான் கேள்விப்பட்டதை என்னிடம் சொன்னபோது எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

"நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். உங்களைப் போய் நான் திட்டுவேனா? அல்லது அடிக்கத்தான் முடியுமா? தவிர நான் உங்களுக்கு நடிப்புச் சொல்லித் தர வேண்டிய அவசியமும் இல்லை" என்றேன்.

அதற்கு "அட, நான் என்னத்தை பெரிசா நடிச்சுட்டேன். ஏதோ ஸ்டைல், தந்திரங்கள் செய்துட்டு வர்றேன். மற்றவங்க சொல்றாங்களேன்னு நீங்களும் என்னை சூப்பர் ஸ்டாருன்னு சொல்லி தள்ளி வச்சுடாதீங்க. நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்களோ, அதைச் செய்து கொடுக்க வேண்டியது என் கடமை" என்றார் ரஜினி.

'கொடி பறக்குது' படத்தில் ரஜினி நடிப்பதாக முடிவாகி, படப்பிடிப்பு துவங்க சற்று நாட்களானது. அதனால் அந்த இடைவெளிக்குள் 'வேதம் புதிது' படத்தை முடித்து வெளியிட்டோம். 'கொடி பறக்குது' ஆரம்பமாகுமுன்பே நானும் ரஜினியும் நட்பில் நெருக்கமாகிவிட்டோம்.

'கொடி பறக்குது' படப்பிடிப்பில் எங்கள் நட்பு இன்னும் வலுவானது. அப்போதுதான் ரஜினியின் நடிப்புத் திறமை எப்படிப்பட்டது என்பதை உணர்ந்தேன்.

ரஜினி தமிழை வேகமாகப் பேசுகிறார் என்று நாம் சொல்கிறோம். ஆனால் தமிழில் அவருக்குத் தெரியாத வார்த்தை எதுவும் இருக்க முடியாது. அதே போல் வசனங்களை நாம் எழுதிக் கொடுப்பதை மெருகேற்றுவதில், ரஜினிக்கு இருக்கும் திறன் அபாரம். வசனங்களை முன்பின் இடம் மாற்றிப் பேசும் அவரது ஸ்டைலைக் கண்டு பலமுறை வியந்து நின்றேன். எந்த நேரத்தில் எதைச் செய்வார் என்று நாம் நினைக்க முடியாத அளவில் அவரிடம் வேகம் இருக்கும்.

ரஜினி நடிப்பது ஆக்ஷன், மசாலா படங்களாக இருந்தாலும், உள்ளுக்குள் அவருக்கு அதில் உடன்பாடில்லை. நல்ல கலையம்சமுள்ள படங்களை அதிகம் பார்க்கின்றவர் ரஜினி. அந்தப் படங்களைப் பற்றி விவாதிக்கின்றபோது, அவருக்குள் ஒரு நல்ல இயக்குநர் இருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

'கொடி பறக்குது' நாங்கள் எதிர்பார்த்த அளவில் போகவில்லை என்றாலும், கீழ் மட்டத்தில் அதற்குரிய வசூலைப் பெற்று விட்டது. அந்தப் படத்தைப் பொறுத்தவரையில் அது ரஜினியைக் கவர்ந்திருக்கிறது.

எங்களது நெருங்கிய நட்பு படத்தின் வெற்றியைப் பாதித்திருக்கும் காரணங்களில் ஒன்றாகும். ரஜினியை என் போக்கில் வேலை வாங்காமல், நட்பின் காரணமாக அவரது போக்கிலேயே விட்டுவிட்டேன். அதனால் மாறுபட்ட ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து விட்டார்கள். ரஜினிக்கும் இதே கருத்து இருந்தது என்றார் பாரதிராஜா.

ரஜினியின் தமிழ்நாட்டுப் பற்று

ரஜினி சொல்கிறார்:

'நாம் இந்தியன்' என்கிற மனோபாவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் நான். இருந்தாலும் ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.

கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் கலைஞர்கள், குறிப்பாக நடிகர்கள் தலை சிறந்து விளங்க முடியாது. ஆனால் தமிழ் மொழிப் படங்கள் இதற்கு விதிவிலக்கு. காரணம் தமிழர்கள் பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

கலை பிறந்து வளர்ந்தது தமிழ்நாட்டில், வடக்கே எந்த ஊருக்குப் போனாலும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்களைப் பொதுவாக 'மதராஸி' என்றுதான் அழைப்பார்கள்.

தமிழ்ப்பட உலகின் சாதனையாளர்களான எம்.ஜி.ஆர்., சிவாஜியை தென்னாட்டில் எந்த மூலை முடுக்கில் கேட்டாலும் சொல்லி விடுவார்கள்.

வட நாட்டில் பல மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் முக்கிய இடத்தை வகிப்பது இந்தி. அதைப் போல் தென்னாட்டில் தமிழ் குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது.

இந்தி தெரிந்திருந்தால் வட இந்தியா முழுவதும் சுற்றி வந்து விடலாம. அதைப் போல தமிழ் மொழி அறிந்திருந்தால் தென்னிந்தியாவில் எல்லா இடங்களுக்கும் போய் வரலாம்.

அன்று நான்கு மொழி சேர்ந்திருந்த மாநிலங்களுக்கும் சென்னை தலைநகரமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ இன்றும் சென்னையில் நான்கு மொழிகளையும் பேசுபவர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து வடக்கே போன கலைஞர்கள் இன்றும் இந்திப் படவுலகில் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.

பெங்களூரில் இருந்தபோதுகூட நான் அதிகமாக எம்.ஜி.ஆர், சிவாஜி, பாலச்சந்தர் படங்களையே பார்ப்பேன்.

தமிழர்கள் நல்ல உழைப்பாளிகள். உலகில் எந்த இடத்திற்குப் போனாலும் நன்றாக உழைத்து முன்னுக்கு வருபவர்கள்.

என்னைக் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றோ, மராட்டியன் என்றோ கருதாமல் அவர்களில் ஒருவனாக ஏற்றுக் கொண்டவர்கள் தமிழக மக்கள், தமிழ்ப்பட ரசிகர்கள்.

ஒரு கலைஞன் திறமை இல்லாவிடில் வேற்று மொழிப் படங்களில் சமாளித்து விடலாம். ஆனால் என் அனுபவத்தில் தமிழ்ப் பட உலகைப் பொறுத்தவரையில் திறமைதான் பாராமீட்டர்! திறமை இல்லாவிட்டால் தமிழ்ப்பட ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள்.

'நம்ம ஊர் ஆள். அந்த ஊர் ஆள்' என்பதெல்லாம் தமிழ்ப்பட ரசிகர்களிடம் கிடையாது. திறமை இருந்தால் கைதட்டி வரவேற்பார்கள்.

என்னுடைய வளர்ச்சியில் அக்கறை கொண்ட தமிழ் மக்களின் பெருந்தன்மையை, வரவேற்பை வேறு எங்கும் என்னால் காண முடியவில்லை.

இதைப் பார்க்கும் போது, நினைக்கும்போது என் கண்களில் என்னையறியாமலேயே நீர் முட்டிவிடும்.

வாழ்க்கையில் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, சந்நியாசி ஆக நான் தீர்மானித்தபோது, தமிழக மக்கள், ரசிகர்கள் ஒவ்வொரு இடத்திலிருந்தும் 'நீங்கள் படவுலகை விட்டுப் போகக் கூடாது' என்று எழுதிய கடிதங்களை அன்புக் கட்டளையாக ஏற்றேன்.

தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டு தமிழ்நாட்டிலேயே வாழ்கிறேன். வீட்டில் தமிழில்தான் பேசுகிறேன்.

ஒரு பைசா கையில் இல்லாமல் சென்னைக்கு வந்தேன். இன்று நான் சாப்பிடுவது, கார், பங்களா, நல்லதொரு வாழ்க்கை எல்லாமே வரக் காரணம்.... தமிழ்ப் பட உலகமும், தமிழக மக்களும், தமிழ்ப்பட ரசிகர்களும்.

படவுலகில் அடியெடுத்து வைத்தபோது, ஆரம்ப நாட்களில் என் தமிழ் உச்சரிப்பை ஏற்று நான் செய்த தவறுகளையெல்லாம் மன்னித்து இன்று என்னை ஆதரிக்கிறார்கள் தமிழ் மக்கள். அவர்களுக்கு என் உயிரைக் கூடத் தரத் தயாராக இருக்கிறேன்.

தமிழக மக்களுக்கும் ரசிகர்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, உறவு எப்பொழுதும் எந்த நிலையிலும் பிரிக்க இயலாதது. இந்த உறவு நீடித்துக் கொண்டே இருக்கும். இன்னும் வளரும்...

இவ்வளவு அன்பும் பாசமும் காட்டிய தமிழ் மக்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்...? என்றார் ரஜினி.

பொறுத்திருந்து பாருங்கள்.

ரஜினியுடன் பழகிய பீட்டர் செல்வகுமார் என்ன சொல்கிறார்?

அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம், பொன்மனச் செல்வன் ஆகிய படங்களைத் தயாரித்த, 'தாயம் ஒண்ணு' படத்தைத் தயாரித்து இயக்கிய பீட்டர் செல்வகுமார் ஆரம்பத்தில் கதாசிரியராக இருந்தவர். 'மூன்று முகம்' படத்தின் கதாசிரியர் அவரே. அவர் கூறினார்:

ரஜினியை விட நான் வயதில் மூத்தவன் என்றாலும் 'ரஜினி சார்' என்பேன். அதற்கு அவர், "ரஜினி என்று சொல்லுங்கள் போதும். ஏன் 'சார்' போடுகிறீர்கள்?" என்று தன் சங்கடத்தைத் தெரிவித்தார். "சார் போட்டு அழைக்குமளவிற்கு தகுதியுடையவர் நீங்கள்" என்றேன். இப்போதும் நான் அவரை அப்படித்தான் அழைக்கிறேன்.

'மூன்று முகம்' படத்தில் ரஜினிக்கும் மூன்று வேடம். நான் அந்தப் படத்தில் கதை, வசனம் எழுதினேன். நான் எழுதியதையெல்லாம் ரஜினி தன் அபார திறமையால் மெருகேற்றி நடித்தார்.

அலெக்ஸ் பாண்டியன் என்ற போலீஸ் அதிகாரி வேடத்திற்காக மேக்கப்பில் தானே சில வித்தியாசங்களைச் செய்து கொண்டார். விக், மீசை இவற்றில் மட்டுமின்றி, முகத்தில் மேலும் முரட்டுத்தனம் வேண்டுமென்பதற்காக கீழ்த் தாடையை பெரிதாக்கிக் கொள்ள பொய்யான தாடையொன்றைப் பொருத்திக் கொண்டு நடித்தார். தாடையில் அது உறுத்தலாக இருக்குமென்றாலும், கேரக்டரின் சிறப்புக்காக ரஜினி அதைப் பொறுத்துக் கொண்டார்.

பீட்டர் தனது அனுபவங்களை வரும் இதழிலும் பகிர்ந்து கொள்கிறார்.

Previous Page

Previous

 

Next Page

 

Next





 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information