Related Articles
Thalaivar rule in aamchi Mumbai - Kaala shooting pics
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் களத்திற்கு வரப்போவது நிச்சயம்: தமிழருவி மணியன் பேட்டி
Rajinikanth next movie with Pa Ranjith titled as "Kaala Karikaalan" : First look released
நான் தமிழன்டா... என் பூர்வீகம் தெரியுமா? - ரஜினிகாந்த்
அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை சேர்க்க மாட்டேன் - ரஜினி
Rajinikanth at Bharathiraja film institute launch
Vikram Prabhu Neruppu da Audio Launch By Superstar Rajinikanth
Malaysian PM Najib Razak calls on Superstar Rajinikanth
Superstar Rajinikanth at Nadigar Sangam New Building Foundation Laying Ceremony
நேரம் வரும்போது சந்திப்போம்! இலங்கை தமிழர்களுக்கு தலைவர் ரஜினி கடிதம்

Year Category : Rajini News
2020 2010
2019 2009
2018 2008
2017 2007
2016 2006
2015 2005
2014 2004
2023 2013 2003
2022 2012 2002
2021 2011 2001

  Join Us

Article
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நதிகள் இணைப்புக்காக உடனடியாக ரூ.1 கோடி தரத் தயார்
(Monday, 19th June 2017)

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்தார். 

அப்போது நதிகள் இணைப்புக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி உறுதி அளித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 

பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு போராட்டம் நடத்தினார்.

தில்லி ஐந்தர்மந்தர் பகுதியிலும் விவசாயிகளை திரட்டி தொடர் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இன்று 11 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு விவசாயிகள் சங்க தலைவர் பி.அய்யாக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் வந்தனர். அங்கு ரஜினிகாந்தை சந்தித்து சால்வை அணிவித்தனர். 

தமிழக விவசாயிகளின் கஷ்டங்கள் பாதிப்புகள் குறித்தும் நதிகள் இணைப்பு தொடர்பாக கோரிக்கை மனுவையும் ரஜினிகாந்திடம் வழங்கினார்.

மேலும் தென்னிந்திய நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்குவதாக ரஜினி காந்த் ஏற்கனவே அறிவித்து இருந்தார். 

அந்த நிதி உதவியை பிரதமரிடம் உடனே வழங்குமாறு ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை விடுத்தார். அதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டு விரைவில் ரூ.1 கோடி நிதியை வழங்குவேன் என உறுதி அளித்தார்.



ரஜினியை சந்தித்த பின் வெளியே வந்த அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நதிகள் இணைப்புக்காகவும், பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளின் நலன்களுக்காகவும் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தோம். 

நதிகள் இணைப்பு திட்டத்துக்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். அந்த நிதியை பிரதமரிடம் வழங்க கோரினோம். தான் அறிவித்தபடியே ரூ.1 கோடியை தருவதாக ரஜினிகாந்த் உறுதி அளித்தார்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, தென் பெண்ணை, பாலாறு, காவிரி ஆகிய நதிகளை இணைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். விவசாயிகள் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும். 

விவசாயிகள் போராட்டத்துக்கும் விவசாயிகளுக்கும் ஆதரவளிப்பதாக உறுதி அளித்தார் என்றார் அவர்.






 
0 Comment(s)Views: 825

 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information