Articles
Rajini Series by Tamil Hindu (2021)
Jayalalitha clarifies acting with Rajini
Rajini painting at Singapore wall (2016)
India Today Birthday Special (2011)
Sri Devi Prayed for Rajinikanth (2011)
Arab Newspaper on Rajini (2010)
Rajini fame in Pakistan (2008)
Rajini in CBSE School Book (2008)
Watched Rajini Movies 100 Times
Rajini Route ... SPM ... Kalki (2007)
Letter to India Today (2007)
Los Angeles Times on Rajini (2007)
Rajini the Real BO King (2006)
Manmohan Singh praise Rajini in Japan (2006)
Ithu Aandavan Kattalai - Vikatan Thodar (2005)
Rajini Express (2005)
Kollywood King - India Today (2005)
How big is Chandramukhi? - Sify (2005)
Why Rajini refund Baba loss (2002)
Baba or Amma? (2002)
Padaiyappa in USA (1999)
India Today Magazine (1999)
Rajini declined to be Chief Minister (1996)
Rajini write up in Thuglak (1996)
Rajini Internet Buzz (1996)
Filmfare Magazine (1995)
India Today article on Valli (1993)
Singapore Musical Show (1992)
Movie Magazine (1992)
Kalki Tharasu - Rajini Politics Q & A
Rajini statement against Karnataka (1991)
India Today Magazine (1988)
Rajini protest for Sri Lankan Tamils (1984)
Rajini & Kamal Interaction in Bommai Magazine (1984)
MGR poster in Rajini movie (1983)
Rajini Cut Out Record (1983)
Rajini at Sivaji Ganesan House (1981)
Rajini Wedding News (1981)
Sivaji, Rajini & Kamal Market in 1980
Order of Actor Names in Early 80s
Rajini & Spiritualism
Rajini Articles in Singapore
Rajini to Superstar
Rajini's Power in 80s
80's Articles
70s Articles
Miscellaneous Paper Articles

  Join Us

Interesting Articles

Rajini Express / ‘ரஜினி எக்ஸ்பிரஸ்’

On Saturday morning (10 Dec 2005), Vijay Television made elaborate arrangements for the birthday celebration.

It brought in Rajini Express, a 1000-metre white cloth on which VIPs signed their best wishes for the Superstar.

It travelled all over the city for the past week, meeting nearly 40,000 people at various places in the city like Satyam Theatre and Abirami Mega Mall.

Director K. Balachander launched the Rajni Express by writing on the banner, `Anbil Uyaram Nee, Endrum Sigaram Nee, Vazhga Nee Rajni'. Nearly 28 artists and technicians such as Vikram, Surya, Simbu (who not only wrote the wishes but also drew a figure like Rajnikant) Nayanthara, and Namitha wrote their thoughts and wished the actor on his birthday.

Kamal Haasan, in his message, said Rajni's age should be calculated based on the year he entered film field. "I wish Rajnikant all the best in his endeavours."

Rajni, who took a look at the banner, however said he did not wish to celebrate his birthday this year. "I did not want to celebrate my birthday mainly because of sufferings the people of Tamil Nadu due to the rain and floods. When so many people want to wish me I am happy. My birthday wish is that from next year the rain gods should not give us floods." He then went on to cut a 10 kg birthday cake specially made for the occasion, wishing him "Happy Birthday Super Star."

Courtesy : The Hindu


1950_ம் வருடம் டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதி தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் உதயமாகப் போவதை அவரது தாய், தந்தையர் அறிந்திருக்க மாட்டார்கள்.

சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக இருந்தவரை ‘ரஜினி’யாக தமிழகம் கரம் குலுக்கி வரவேற்றது மட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் என மகுடம் சூட்டி அழகு பார்த்தது. ரசித்தது.

இப்போது அவரது ஐம்பத்தாறாவது பிறந்தநாளுக்கு ஸ்டார் விஜய் டி.வி. ‘ரஜினி எக்ஸ்பிரஸ்’ என்கிற மொபைல் வேனை சென்னை முழுக்க, எல்லா தெருக்களிலும் உலா வரவிட்டு, சாதாரண மக்கள் முதல் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக ரஜினியோடு தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

வருகிற பன்னிரெண்டாம் தேதி ரஜினியின் பிறந்தநாள். அன்றே விஜய் டி.வி.யில் அந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்ய முயற்சிக்கிற அவர்கள், நீங்களும் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல வாருங்கள் என்று அழைக்க... குமுதம் டாட்காம் வாசகர்களின் சார்பாக நாமும் ரஜினிக்கு வாழ்த்து சொல்லச் சென்றோம்.

ரஜினி எக்ஸ்பிரஸ் வேன் சென்னை தியாகராய நகரில் நுழைந்ததும் முதலில் வாழ்த்து எழுத ஓடிவந்தவர்கள் ஆட்டோ டிரைவர்கள். ‘‘எங்க தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து எழுதறோம். ஆனா அவரு அரசியலுக்கு வருவாரா?’’ என்று தங்கள் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டபடி அவரவர் ‘விருப்பப்படி மகிழ்ச்சியாக,’ ‘ஐ லவ் ரஜினி’ ‘தலைவா நீ நீடூழி வாழ்க,’ ‘தலைவா உனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வயதில்லை. அதனால் வணங்குகிறேன்’ என அவர்கள் முகம் முழுதும் சந்தோஷத்தோடு பிறந்த நாள் வாழ்த்து எழுதினார்கள்.

அடுத்து தி.நகர் ரங்கநாதன் தெருவிற்குள் மொபைல் வேன் நுழைந்ததும், எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்தது என்றே தெரியவில்லை. மள மளவென சுற்றிக் கொண்டார்கள். ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்தை நீங்கள் எழுத வேண்டும் என்று சொன்னதும் நீ, நான் என முந்திக் கொண்டார்கள். இத்துணை வருட கலைப் பயணத்தில் ரஜினி சம்பாதித்திருக்கும் இந்த அன்பான மனங்களை பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

நிகழ்ச்சியின் முதல் நாள் ‘ஹலோ தமிழா’ மமதி, ரஜினி எக்ஸ்பிரசுடன் வர... ரஜினியை உருவாக்கிய சிற்பி பாலச்சந்தரின் வீட்டுக்கு சென்றது. அதுதான் நிகழ்ச்சியின் முதல் ஆரம்பம் என்பதால் பாலச்சந்தர் மனது நிறைவாகி தனது வாழ்த்தை ரஜினிக்கு பதிவு செய்தார்.

ஹலோ தமிழா... உங்க ரஜினிக்கு நீங்க பிறந்தநாள் வாழ்த்து எழுத வாருங்கள் என்று தனது வேகமான பேச்சில் மமதி அழைக்க... கல்லூரி மாணவர்கள் ‘வந்துட்டேன் மமதி’ என்று விஷயம் கேட்டறிந்து உடனே ஆங்கிலத்திலும் தமிழிலும் ரஜினிக்கு வாழ்த்து மழையை பொழிந்துவிட்டார்கள்.

நடிகர் சூர்யா வாழ்த்தெழுதும்போது... என்னோட இன்ஸ்பிரேஷன்னு மட்டும் ரஜினி சாரை சொல்ல மாட்டேன். என்னை ரொம்ப ரொம்ப யோசிக்க வச்சவர் அவர்தான். என்னை மாதிரி நடிகர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒரு சூழலில் _ காட்சியில் அவரை நினைச்சே ஆகணும். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வது எனக்கு பெருமிதமாக இருக்கு என்றவர், ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆப் தி டே என்று எழுதினார்.

சூர்யாவைப் போன்றே நடிகை ஸ்ரேயா, இயக்குனர் பி. வாசு, தயாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், பாடலாசிரியர் பா. விஜய், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என சினிமா பிரபலங்கள் பலரும் ரஜினிக்கு தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை அன்போடு பரிமாறிக் கொண்டார்கள்.

எல்லாவற்றிலும் முக்கியமாக, கண் பார்வையற்ற சிறுவர்களிடம் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்தை எழுதுகிறீர்களா! என்று கேட்டதும், சட்டென்று அவர்கள் முகம் பிரகாசமானது. உடனே எங்கே எழுதணும் என்று அவர்கள் ஆர்வமாய் தங்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தியது நெகிழ்வூட்டியது.

நாமும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று எழுதி விட்டு வந்தோம்.

 

Courtesy : Kumudam



 
Website maintained by rajinifans creative team

© All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information