Endhiran 100 days celebration in Singapore
Our Superstar’s Enthiran completed 100
days successfully in Rex theatre. With the initiative of
Singapore Rajinifans.com members Rex management agreed
for a celebration in their premises which eventually
turned as a grand event. Thanks to Mr.Shajahan and
Magesh for organizing the event, contacting members and
for that enjoyment we experienced today. Magesh prepared
superb banners and arranged for cake, sweets. Rex
management decorated their premises and advertised in
Tamil Murasu, a local tamil daily about celebration with
Singapore Rajinifans.com members contributing 50% of ad
expenses. Also, Tamil Murasu reporter visited the
theatre and covered the event.
எந்திரன் சாதனை வரலாற்றில் இதோ மற்றுமொரு
சிறகு. சிங்கப்பூரில் ரெக்ஸ் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடி
சாதனை படைத்துள்ளது எந்திரன். தமிழகம், இந்தியா மட்டுமல்ல…
உலகம் முழுதும் எந்திரன் சாதனைகளை குவித்து வருகிறது
எந்திரன் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா என்ன…!
சிங்கப்பூரை பொறுத்தவரை அங்கு நூறு நாள் சாதனையை
நிகழ்த்தியது தலைவரின் படங்களே. சந்திரமுகி. 3
திரையரங்குகளில் ரிலீசாகி ஒரு திரையரங்கில் நூறு நாட்கள்
கண்டது. சிவாஜி 8 திரைகளில் ரிலீசாகி ஒரு திரையரங்கில் நூறு
நாட்கள் கண்டது. எந்திரன் அதிகபட்சமாக 14 ஸ்க்ரீன்களில்
ரிலீசாகியும் கூட நூறு நாட்கள் கண்டது. சிங்கை திரை
வரலாற்றில் இது ஒரு மிகப்பெரும் சாதனையாகும். (ஷங்கரின்
ஜீன்ஸ் திரைப்படம் ஒரு தியேட்டரில் ரிலீசாகி பின்னர் நூறு
நாள் கண்டது.)
சிங்கப்பூரில் எந்திரன் சாதனை – 100 வது
நாள் கொண்டாட்டங்கள் !
தலைவர் பேனருக்கு பாலபிஷேகம், சூரத்தேங்காய்,
திருஷ்டி பூசணிக்காய் மலர்த்தூவல் எல்லாம் அமர்க்களமாக
நடந்தேறியது. மெகா சைஸ் கேக் திரையரங்கு உரிமையாளரால்
வெட்டப்பட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும்
இனிப்புகளுடன் வழங்கப்பட்டது. இதெல்லாம் நம்மாளுங்க ஏற்பாடு…
திரையரங்கின் சார்பாகவும் அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது. திரையரங்கின் சுற்றியிருந்த கடைக்காரர்களும்,
திரையரங்கை கடந்து சென்ற பொதுமக்களும் கொண்டாட்டத்தையும்,
ஆர்ப்பாட்டத்தையும் பார்த்து அதிசயித்தனர். அனைவரும் இந்த
கொண்டாட்டங்களை தங்கள் செல்பேசியில் பதிவு செய்யத்தவறவில்லை.
பின்னர், திரையரங்கில் முதல் காட்சி பார்ப்பது போன்ற
ஆர்ப்பாட்டத்துடன் நுழைந்தோம். திரையரங்கு அறுபது சதவீதம்
நிறைந்து இருந்தது. பல குடும்பங்கள் வந்திருந்தது விசேஷம்.
நாங்களெல்லாம் படம் ஆரம்பிக்கும்போது திரைக்கு பக்கத்தில்
சென்று கலர் காகிதங்கள் தூவி ஒரே அமர்க்களம் பண்ணிவிட்டோம்.
வெளியே நாங்கள் கொண்டாடியதை பார்த்துவிட்டு டிக்கெட்
எடுத்து படம் பார்க்க வந்தவர்கள் பலர். தலைவர் அறிமுகம்,
சிட்டி அறிமுகம், ‘செல்லாத்தா’ பகுதி, சிட்டி வெர்ஷன் 2.௦
அறிமுகம் போன்ற காட்சிகளில் நாங்கள் யாரும் இருக்கையில்
அமரவில்லை. செம கலாட்டா… இங்கே FDFS பார்த்த திரையரங்கில்
அந்த அளவு இடவசதி இல்லாததால் சற்று அடக்கி வாசிக்க
வேண்டியிருந்தது. எல்லாத்துக்கும் சேத்து இன்னிக்கு
கலக்கிட்டோம். நாங்க பண்ண எல்லா அராஜகத்துக்கும் பொறுமை
காத்து, நாங்க போட்ட குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்து,
கொண்டாட்டத்தில் பங்கும் பெற்ற ரெக்ஸ் திரையரங்கு
உரிமையாளர் மற்றும் உரிமையாளர்களை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்.
சந்திரமுகி, சிவாஜியைத் தொடர்ந்து ‘எந்திரன்’ 100 நாட்களை
கடந்து விட்டது… மார்க்கெட்டிங் உத்தி, ஆலிவுட் காப்பி
என்று வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்த ‘புண்ணியவான்கள்’
இன்னிக்கு சிங்கப்பூர்ல இந்த கொண்டாட்டத்தையும், இவ்வளவு
சின்ன நாட்ல இவ்ளோ நாள் ஓடியும் இன்னிக்கு வந்த
கூட்டத்தையும் பார்த்தா எல்லாத்தையும் மூடிப்பானுங்க…
தலைவர் ராக்ஸ்…
|