Other Articles
ரஜினி பிறந்த நாள் ஸ்பெஷல் – வீடியோ - III எஸ்வி சேகர் மனத்திரையில் நினைத்துப் பார்த்ததுமே, முகத்த
உலகப் புகழ் பெற்ற ஒரே இந்திய நடிகர்!
பிறந்த நாள் ரத்து: ஹைதராபாத்தில் ரஜினி!
Why Thalaivar s films not released on his birthday ?
ரஜினி பதில்கள் - 3
உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும்??
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜினி பற்றிய ஒரு அட்டைப் படக் கட்டுரை.
துபாய் ரசிகர்களின் கொண்டாட்டங்கள்
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?
(Friday, 12th December 2008)ரசிகர்: ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?

ரஜினி: பாருங்க... வெளியூரிலிருந்து என்னை மெட்ராஸ் வந்து பார்க்கணும்னா 400 ரூபாய் செலவு செஞ்சிட்டு வந்தாகணும். ஆளுக்கு 400 ரூபாய் என்றார் இருபத்தைந்தாயிரம் பேருக்கு ஒரு கோடி. ஐம்பதாயிரம் பேருக்கு இரண்டு கோடி. இவ்வளவு பணம் வேஸ்ட். இரண்டாவது லாரி, பஸ் வேன்களில் வரும்போது நிறைய ஆக்சிடெண்ட் நடந்திருக்கிறது. அதில் நிறைய பேருக்கு அடிபட்டிருக்கு. நிறைய பேர் இறந்தும் போயிருக்காங்க. மூன்றாவது இதனால பொதுமக்களுக்கு நிறைய இடைஞ்சல் வரும். இதையெல்லாம் தடுக்கறதுக்காகத்தான் நான் வந்து என் பிறந்த நாள் அன்றைக்கு யாரையும் சந்திக்கிறது இல்லை. (1995 தூர்தர்ஷன் பேட்டி)

ரசிகர்: ... ... தங்கள் பிறந்த நாளன்று தங்களை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்..

ரஜினி: என்னோட பிறந்த நாளன்னிக்கு, நான் ஏன் பிறந்தேன்னு யோசிக்க எனக்கு நேரம் வேணும். அன்னிக்குதான் தனிமையில உட்கார்ந்து நான் அதைப் பத்தி யோசிப்பேன். பிறந்த நாளன்நிக்கு எனக்கு தனிமை வேணும். அதனால அன்னிக்கு என்னைப் பார்க்கறது ரொம்ப கஷ்டம்... (2008, நவம்பர் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு)

ரஜினியை, அவரது பிறந்த நாளன்று பார்க்க முடிவதில்லையே என ஏங்கும் ரசிகர்களுக்காக ரஜினி இருவேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ள பதில் இது.

அவரது நேர்மையும், தூய இதயமும் இந்த பதில்களில் தெரிவதைப் பார்க்கலாம்.
இன்றைக்குப் பலரும் எப்போதடா வாய்ப்புக் கிடைக்கும்... ரசிகர்களை சென்னையில் கூட்டி, நகரையே ஸ்தம்பிக்கைச் செய்து, தனது பலத்தைக் காட்ட (யாருக்கு?!) துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், லட்சக்கணக்கான ரசிகர்கள் தனது கண்ணசைவுக்குக் காத்திருக்க, ரஜினியோ இப்படி ஒரு துறவு மனநிலையில்!

ஒரு பக்கம் ரசிகர்களின் நலன் காக்கப்பட வேண்டும். கூட்டமாக சென்னைக்கு வந்து அடிபட்டு, கஷ்டப்பட்டு திரும்பக் கூடாது என்ற நல்லெண்ணம்... மறுபக்கம் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஞான முயற்சி... இப்படி ஒரு அதிசயப் பிறவியை உலகின் எந்த நாட்டிலாவது பார்க்க முடியுமா...

‘காசு பணம் இல்லாம கஷ்டப் பட்டப்பவே நான் பொய் பேசியதில்லை. இன்னும் வாழப் போற கொஞ்ச நாளில் எதுக்குப் பொய் பேசணும்?’ – ரஜினியின் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் எந்த அளவு இதய சுத்தியோடு வருகின்றன என்பதற்கு அவரது இந்த வார்த்தைகளே சான்று.

இன்று நம் அன்பு சூப்பர் ஸ்டார், தலைவர் ரஜினிக்கு பிறந்த நாள். உலகமே இந்த நாளை தீபாவளிக்கு நிகராய், கிறிஸ்துமஸுக்கு சமமாய், புத்தாண்டுக்கு சற்றும் குறைவில்லாத உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க, அவரோ யாருக்கும் தெரியாத இடத்தில், அமைதியில் தன்னைத் தேடும் முயற்சியில் இருப்பார்.

அவரது ஞானத்தில் உங்கள் உண்மையான வாழ்த்துகள் ஒலிக்கட்டும்...

பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழுங்கள்!

குறிப்பு: இன்று பெங்களூரில், தான் விரும்பும் தனிமையில் தனிமையான இடத்தில் ரஜினி இருப்பதாக நம் பத்திரிகை நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், பெங்களூரு வந்த ரஜினி, மீண்டும் ஐதராபாத்துக்குத் திரும்பி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

எங்கிருந்தாலும், அவர் தேடும் தனிமையும், அவரது ஆன்ம தேடலுக்கான விடையும் கிடைக்கட்டும்!

வீடியோ - 3 (ரசிகர் சந்திப்பில்...)

 


 
2 Comment(s)Views: 3179

sankaranarayanan,India - Chennai
Friday, 12th December 2008 at 04:42:48

Nice article. Yew today morning we convey our wishes to our only Thalaiver in the time of MEDITATION. HAPPY BIRTHDAY THALAIVA.
Today Myson's birthday also. (12.12.97)

Jax,Denmark/Herning
Friday, 12th December 2008 at 04:23:59

Dear Beloved Super Star! It's our pleasure wishing you on your very special day. We wish you a Happy B'day and many many more happy returns of the day from the bottom of our heart. May the Almighty always be with you and your family and bless you for ever and ever.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information