Other Articles
Reach us with a press of button from your mobile
அவர்களுக்குத் தேவை ரஜà®
துபாய் ரசிகர்களின் கொணà
பாபா மயமாக இருந்தது 2002-ம் à®â
இளம் நடிகர்களின் இதயஙà¯Â
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தàÂ
பிரபுதேவா மகனுக்கு ரஜி
'அவர் பார்க்கவில்லை எனà¯Â
வாழ்க்கை வரலாறு – ரஜினà®Â
தலைவர் பெயரில் வசூலிப்àÂ
ரிஸ்க் எடுப்பதை எப்போதàÂ
ரஜினி – அமிதாப்: ஒப்பீடàÂ
சூப்பர் ஸ்டார்னா அது ரஜà
தலைவர் பிறந்தநாளைக் கொà
மனைவியின் உணர்வுகளுக்à
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜÃ
ரஜினி விஷயத்தில் நடுநில

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
உலகில் வேறு யாரை தலைவர்
(Tuesday, 9th December 2008)
'ரஜினியை எப்படி அழைக்க வேண்டும்?'

ரஜினி எப்பேர்ப்பட்ட மனிதர்... எந்த அளவு வசீகரமான, மக்கள் செல்வாக்கு மிக்க விஐபி. அவரைப் போய் பெயர் சொல்லி அழைக்கிறார்களே என சில நண்பர்கள் வருத்தப்படுவதுண்டு.

தன்னை எப்படி அழைக்க வேண்டு்ம் என்பதை ரசிகர்களின் விருப்பத்துக்கே விட்டுவிட்டார் ரஜினி. சிலர் அவரை அன்பின் மிகுதியால் அன்புத் தலைவா என்றும், இன்னும் சிலர் அண்ணன் என்றும், சிலர் சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து மகிழ்கிறார்கள்.

சிலர் உச்ச கட்ட உணர்ச்சி மிகுதியால் அவரை கடவுள் என்று விளிப்பதுண்டு. அதன் விளைவுதான் பாலாபிஷேகம், கற்பூர ஆரத்தி என்று போகிறார்கள். இது ரஜினியே விரும்பாத ஒன்று. அதைப்பற்றி அப்புறம் பார்ப்போம்.

சரி... ரஜினியை எப்படி அழைக்கப் பிடித்திருக்கிறது...?

நமது ரஜினிபேன்ஸ்.காம் சமீபத்தில் நடத்திய கணிப்பின் முடிவுகள் இதோ..!

இந்தக் கருத்துக் கணிப்பில் 2343 பேர் வாக்களித்திருந்தனர்.

அவர்களில் 1397 பேர் அதாவது 59.62 பேர், ரஜினியை தலைவர் என்றே அழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

ஒரு ரசிகர் (பத்து, லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா) இப்படி கருத்து எழுதியுள்ளார்:

நான் சிறு வயதிலிருக்கும் போது, தலைவரின் படத்தில் ஒலிக்கும் இந்த வசனத்தைக் கேட்டேன். அந்த வசனங்கள்தான் இன்னும் என மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றன.

'எனக்கு இருக்கிற கூட்டமெல்லாம் காசு கொடுத்ததால சேர்ந்த கூட்டம் கிடையாது... இது அன்பால தானா சேர்ந்த கூட்டம். யார் நினைச்சாலும் இவங்களை என்கிட்டேயிருந்து பிரிக்க முடியாது.'

ரஜினி அன்பை நம்புபவர். அன்பே கடவுள் என நமக்கெல்லாம் தெரியும். தலைவர் என்று அவரை அழைக்க முடியாவிட்டால், உலகில் வேறு யாரை தலைவர் என்று அழைக்க முடியும். அவரைத் தவிர இந்த அடைமொழிக்குத் தகுதியானவர் கிடையாது.

ரஜினி ரசிகர்கள் சிலர் வேறு நடிகர்களுக்கு ரசிகர்களாக மாறிவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதை நம்ப முடியாது. ரஜினியி்ன் உண்மையான ரசிகன் மூசசு உள்ள வரை வேறு யாரையும் ரசிக்க முடியாது...

சிங்கப்பூரைச் சேர்ந்த சூர்யா இப்படி கூறுகிறார்:

'ஒரு வார இதழ் முன்பு குறிப்பிட்டு இருந்தது போல, தலைவர் என்றால் அது நம்ம தலைவர்தான். ஒவ்வொரு கட்சிக்கும் அதன் தலைவர் வெவ்வேறு.

அவரவர் கட்சிக் கூட்டங்களிலும், கட்சி அலுவலகங்களிலும் தலைவர் என ஒரே ஆளை சொல்லமுடியாது. ஆனால், அகில உலகிலும் உள்ள தமிழர்களிடம் எதுவுமே சொல்லாமல் ஜஸ்ட் 'தலைவர்' என சொன்னால் அது ரஜினிகாந்த் என அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதுதான், தலைவரின் சிறப்பு. தலைவா, உன் ரசிகன் என்று சொல்லும்போது பெருமையடையுது எங்கள் பிறப்பு...'

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, இந்தக் கருத்துக்களை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கருத்துக் கணிப்பில் 25.57 சதவிகிதம் பேர் அதாவது 599 பேர் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

186 பேர் அவரை ஜஸ்ட் ரஜினி அல்லது ரஜினி காந்த் என்று அழைத்தால் போதும் என்று கூறியுள்ளனர்.

68 பேர் அதாவது 2.9 பேர் ரஜினியை கடவுள் என்று அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தளபதி என்று அழைக்க 30 பேரும், சகோதரர் அல்லது மாமா என அழைக்க 30 பேரும், வேறு பெயர்களில் அழைக்க 29 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரோஜாப்பூவை எந்தப் பெயரில் அழைத்தாலும் அதன் வாசமும் மாறாது, அழகும் போகாது. ரோஜா ரோஜாதான்... அதேபோல தலைவர் என்றால் ரஜினி ஒருவர்தான்!

-சங்கநாதன்

Previous

Next
 
   
25 Comment(s)Views: 6838

Previous Page
Previous
12
karthik,
Tuesday, 9th December 2008 at 08:44:50

ரஜினியி்ன் உண்மையான ரசிகன் மூசசு உள்ள வரை வேறு யாரையும் ரசிக்க முடியாது...true words good article
kumaran,pondicherry
Tuesday, 9th December 2008 at 08:36:59

tamil nattu gandhi
harisivaji,Chennai
Tuesday, 9th December 2008 at 08:35:26

Poonai parthu pulinu koopita athu comedy
athumarithan mathavangala thalaiva nu koopidrathu
thalivarku matum than antha thakuthi iruku

saint gervais,france
Tuesday, 9th December 2008 at 08:06:41

தலைவைர் தான் நல்ல ரிசல்ட்
k s amarnath,India/Bangalore
Tuesday, 9th December 2008 at 07:40:52

please post in english
Previous Page
Previous
12

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information