Other Articles
இளம் நடிகர்களின் இதயங்களில் இன்று அதிக புகை வரவழைப்பவர் யார் தெரியுமா?
Enthiran: From Amazon to Anamalai!
ரஜினிபேன்ஸ்.காம் நடத்தும் ரத்த தான முகாம்!
பிரபுதேவா மகனுக்கு ரஜினி அஞ்சலி ...
அவர் பார்க்கவில்லை என்றாலும், அவர் பார்வையிலிருந்து எதுவும் தப்பாது
வாழ்க்கை வரலாறு – ரஜினி வாழ்த்து
தலைவர் பெயரில் வசூலிப்பதை அனுமதிக்க முடியாது! - சுதாகர்
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்
(Sunday, 7th December 2008)

ருவேளை கடவுள் மட்டும் இன்று கண்ணெதிரில் தோன்றினால்… பாபா படத்துக்கு ஒரு டிக்கெட் வேண்டும் என்றுதான் முதல் கோரிக்கை வைப்பார்கள் தமிழ் மக்கள்!

-தினமணி நாளிதழில், பாபா வெளியீட்டுக்கு முந்தைய வாரம் எழுதப்பட்ட ஒரு கட்டுரைக்கு தரப்பட்டிருந்த முன்னுரை இது!

சிவாஜிக்குக் கூட அவ்வளவு செய்திகள் வந்திருக்குமா தெரியவில்லை… அவ்வளவு பரபரப்பு செய்திகள்… சிறப்புக் கட்டுரைகள், துணுக்குகள், விமர்சனங்கள், எதிர் விமர்சனங்கள் என பாபா மயமாக இருந்தது 2002-ம் ஆண்டு முழுவதும்.

தனது வியாபாரத்துக்கும் ரஜினி, விமர்சனத்துக்கும் ரஜினி, அறிவுஜீவித்தனத்தைக் காட்டிக் கொள்ளவும் ரஜினி என ரஜினியை வைத்து எக்கச்சக்கமாய் சம்பாதித்து வரும் விகடன் குழும பத்திரிகைகள், பாபாவுக்கு மட்டும் 60-க்கும் மேற்பட்ட அட்டைப் பட சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டன. குமுதம் மட்டும் சளைக்குமா… அவர்களும் போட்டுத் தாக்கினார்கள்.

இத்தனைக்கும், ரஜினி தொடர்பான செய்திகளை வெளியிட சட்ட ரீதியான அனுமதி பெற வேண்டும் என லதா ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டிருந்த நேரம் அது.

எதிர்பார்ப்பு என்ற சொல்லுக்கு நிஜமான அர்த்தம் பாபா பட வெளியீட்டின்போது அருகிலிருந்து கவனித்தவர்களுக்குத்தான் புரியும். ஒரு பக்கம் பெருமை… மறுபக்கம் படபடப்பு…
ரசிகர்களுக்கே இப்படியென்றால், சூப்பர் ஸ்டாருக்கு எப்படி இருந்திருக்கும்… ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவே இல்லை.

‘தி வெயிட் ஈஸ் ஓவர்’ என்ற வாசகத்தோடு, பாபா டிக்கெட்டுகளை நமக்கு ஒரு நாள் முன்பே அனுப்பி வைத்தார் ரஜினியின் பிஆர்ஓ நிகில்.

படத்தின் சிறப்புக் காட்சிகள் சத்யம் வளாகத்திலிருந்த 5 திரையரங்குகளிலும் ஒரு நாள் முன்பே விடியவிடிய திரையிடப்பட்டன. சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் சிறப்புக் காட்சிகளில் கூட்டம் திமிலோகப்பட்டது.

படம் முடிந்து வெளியில் வந்தபோது, உடன் வந்திருந்த சில நண்பர்கள், “என்னய்யா… தலைவர் இப்படி ஏமாத்திட்டாரே… “ என புலம்பத் தொடங்கிவிட்டனர். அதுவரை, ‘ஆஹா… சொல்ல வந்த விஷயத்தை நெத்தியடியா சொல்லிட்டார் தலைவர்” என நம்பிக் கொண்டிருந்த நமக்கு பக்கென்றது.

அவர்களிடமிருந்து விடைபெற்று, மாண்டியத் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, சில நிமிடங்கள் கண்ணை மூடி யோசித்த போது, இன்னொரு நண்பர் போன் செய்தார். அவரும் நம்மைப் போன்ற மனநிலையில்தான் இருந்தார்.

“தலைவர் எடுத்திருப்பது நல்ல படம்தான். இன்றில்லாவிட்டாலும், போகப் போக மக்கள் புரிந்து கொள்வார்கள். இப்போது கிடைக்காத பாராட்டும் புகழும் பின்னால் கிடைக்கலாம்… நீ வேணும்னா பாரு…” என்று அமைதியாக, அழுத்தமாகக் கூறினார்.

அடுத்த நாளே தினமலர் ஒரு சர்வே நடத்தியது. அதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் இந்தப் படம் அருமையாக இருப்பதாகவும், அரசியல் குறித்த ஒரு நல்ல செய்தியை ரஜினி தங்களுக்கு அதில் கூறியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆனாலும் பாபாவுக்கு எதிரான விஷமப் பிரச்சாரம் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டது. படப்பெட்டிகள் சூறையாடல், தியேட்டருக்கு தீவைத்தல், திரைக் கிழிப்பு என அராஜகங்கள் அரங்கேற்றப்பட்டதை யாரும் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

வழக்கமாக ஒரு வாரம் கழித்து விமர்சனம் வெளியிடும் விகடன், அடுத்த நாளே மட்டமான விமர்சனம் எழுதி தங்கள் ‘நடுநிலை’யைக் காட்டியது.

இந்த நேரத்தில் இதை வெளியிடக் காரணம் இருக்கிறது. பாபாவைப் பற்றி இன்னும் கூட சிலர் ‘குரைத்து’க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அந்தப் படம் பலவிதத்திலும் சிறப்பான படைப்பு என இன்றைக்கு பலரும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
குறிப்பாக கடந்த இரு மாதங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் சந்திக்கும் நண்பர்கள், நடுநிலை விமர்சகர்கள் அனைவருமே பாபாவுக்கு நற்சான்று அளித்து வருகிறார்கள்.

சக பத்திரிகையாளர் நண்பர் ஒருவரின் மகன் (கல்லூரிக்குப் போகும் வயசு!) வாரம் ஒருமுறையாவது அந்தப் படத்தைப் போட்டுப் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இத்தனைக்கும் இந்தப் படத்தை கடுமையாக விமர்சித்து ஒரு வார இதழில் கட்டுரை எழுதியவர் அவர் (பெயர் வெளியிடுவது தர்மம் ஆகாது!)

அன்று பாபாவால் பெரும் நஷ்டம் என்ற பிரச்சாரம் எழுவதற்கு முன்பே, விநியோகஸ்தர்களையும், தியேட்டர்காரர்களையும் அழைத்து அவர்கள் குறிப்பிட்ட நஷ்டத் தொகைக்கு மேல் ஒரு தொகையை ரஜினி கொடுத்தார்.

ஆனால் அவர்களே இன்று சொல்கிறார்கள், ‘பாபா தோல்விப் படமல்ல. எங்களுக்கு அந்தப் படத்தால் லாபம் கிடைத்தது உண்மைதான்’ என்று. (இதுகுறித்து ஏற்கெனவே ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளோம்)

இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது அந்த மகாவதார் பாபாஜியின் விருப்பம் போலிருக்கிறது…

இந்தப் படம் குறித்த நடுநிலையாளர்கள் சிலரது இன்றைய பார்வைகளை நம்மால் முடிந்த அளவு தொகுத்திருக்கிறோம். கூடவே அதுபற்றி சூப்பர் ஸ்டாரின் கருத்தும். அது அடுத்த பதிவில்…

-ஷங்கர்


 
15 Comment(s)Views: 5680

K.Thulasirajan,india/thanjavur
Friday, 12th December 2008 at 04:39:10

KANDIPPA BABA PADAM PALARIN KULAPPATHIRKU VIDAI KUDUTHA PADAM. THALAIVAR KANDIPPA VARUVAR, ETHTHANI NAL WAIT PANNOM ENNUM 2 VARUDAM KALITHU RASIGARGAL 'THONDANAGA' MARUM KAALAM.
alagan.rajkumar,madurai
Wednesday, 10th December 2008 at 08:30:45

BABA PURINTHAVANGALUKKU ORU PUYAL.PURIYATHAVANGALUKKU ORU PUDIR.
A.Sundaresan,Oman
Tuesday, 9th December 2008 at 06:38:32

I don't care about media and others.When i feel mental distrub i watch Baba then i will get more energy.This is true.
SL BOY,Sri Lanka
Tuesday, 9th December 2008 at 02:29:37

Thank u for posted in ENGLISH
mettu street k.muthu,chennai
Monday, 8th December 2008 at 20:54:12

hi! truely saying means every thalaivar fans excited very much after saw the baba movie and they thought thalaivar indicates he surely entered into politics and think to serve for our state, the politicians also knows that, before the movie released they came to know how the movie'll be, thats why they create bad rumours about the movie and done lot of disturbances to the movie, because of that and heavy ticket rates the womens and who normally came huge amount wity=h thier family was not able to came to theatres, mainly ladies crowd makes our thalaivar,s movie always victory with fans crowd, so this,s the main demerit for this movies failure ! but one thing.s sure if that movie was got victory means, surely that was the last movie of our thalaivar and surely he was entered into politics on that time itself !
Baskar,Bangalore,India
Monday, 8th December 2008 at 14:27:52

Hai Shankar,
Yeh as you said....the first day, when i saw 'BABA' in coimbatore....the very first thought which came to my mind is ...wwwoowww Superstar had taught everyone a good lesson.....from a school going boy to a politician...he has told everyone ..how to be in their life in the movie....


But, few were speaking wrong things about the movie and after that, as you said...we know wht happened by some politicians.....

Whatever the thing, Thalaivar is Thalaivar....no change in that...

NOTE:
one more thing i wanted to say here, you know BABA is the favourite film for my Mum,Dad and my grandma........she still keeps saying that it is a good movie.....

That is Rajini...........

Karthik,Mamsapuram
Monday, 8th December 2008 at 08:25:55

ஒரு உண்மையான ரசிகனின் உள்ளக்குமுறல்:

சன் டி.வி மட்டுமல்ல பலரும் தங்களுடைய சுயநலத்திற்காக் தலைவரை பயன்படுத்திவிட்டு பின்பு படுத்தி விடுகிறார்கள்.

(உதா)ரணம்:

1. ஆனந்த விகடன்:

பாபா பக்கம் போட்டு (திருட்டுத்தனமாக புகைப்படத்தை பயன்படுத்துவது பாபா டு சிவாஜி வரை) இரண்டாம் இடத்திலிருந்து
முதலிடத்திற்கு வந்தவர்கள், இன்று ரஜினி விரோத போக்கை கடைப்பிடிப்பது ஏன்??

இதன் நிர்வாகம் திரு.பாலசுப்ரமனியத்திடம் இருந்து அவரது புதல்வர் திரு.சீனிவாசன் கைக்கு வந்தபின்பு ரஜினி விரோத போக்கு அதிகரித்துள்ளது. திரு.சீனிவாசன் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பது விகடன் வாசகர்களுக்கே வெளிச்சம்.
1. சந்திரமுகியை விட சச்சின் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் படங்களுக்கு அதிக மதிப்பென் வழங்கியது(சந்திரமுகியின் வெற்றி உலகறிந்தது)
2. சமீபத்திய விஜயகாந்தின் ஊர்வலம் தொடர்கட்டுரை பாரம்பரிய வாசகர்ளுக்கே விகடன் மீது வெறுப்பை சம்பாதித்து கொடுத்துள்ளது. இதன் பின்னனியில் இருப்பது பணம்.

யார் யாரை தந்திரன் என்பது.

2.குமுதம்:

குசேலன் படத்தை வெகுவாக புகழ்ந்துவிட்டு பின்பு ஊரோடு சேர்ந்து படம் சரியில்லை என்று ஒப்பாரி வைத்துவிட்டு(உபயம்:ஞானி, அரசு) அதை சமாளிக்க ரஜினிக்கு ஆதரவான கருத்துக்கணிப்பை வெளியிட்டு.... அடடா அடடா...
முன்பு குமுதமும் விகடன் போல விஜயகாந்தை மிகத்தீவிரமாக ஆதரித்துவிட்டு, அனந்தநாயகி தொடர்பான பேட்டியில் அவரது சுயரூபம் தெரிந்து (மூக்குடைபட்டு)இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.
என்ன ஒரு குழப்பம்.

யார் யாரை குழப்பவாதி என்பது.

3.தி.மு.க:
இதை நான் பதிவு செய்துதான் ஆகவேண்டும், ஏனென்றால் தலைவரால் பெரும் பலன் அடைந்தது தி.மு.க தான்.

பாபா படம் வெளியான நேரம், படமும் ரசிகர்களும் பா.ம.க வெறியாட்டத்திற்கு இரையான நேரம், அனைத்து கட்சிகளும் பா.ம.க வின் வன்முறையை கண்டித்த நேரம், ஒரு திருமணவிழாவில் (விழுப்புரம் என நினைக்கிறேன்) கலந்து கொண்ட தி.மு.க தலைவர்," 2000வருடம் வாழ்வதாக அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று யாரும் அறிவிழந்து நம்பிவிட வேண்டாம்" என்று கூறினார். மதுரையில் நமது ரசிகர்கள் தாக்கப்பட்டபோதும், கூட்டணியில் இருந்த பா.ம.க வுக்காக வாய்திறக்கவில்லையே....

1996ஆம் ஆண்டு இதே தி.மு.க தலைவர்,"தம்பி ரஜினிகாந்த் மீதோ இல்லை அவரது ரசிக கண்மணிகள் மீதோ சிறு கீறல் விழுந்தால், நானோ தி.மு.க தொண்டனோ பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம்" என சூழுரைத்தார்.

நெஞ்சு பொறுக்கலை தலைவா.......

உன்னால் வென்றவர்கள்
உன்னாலேயே தோற்கடிக்கப்பட வேண்டும்........

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......

பொருத்தது போதும்
பொங்கிஎழு தலைவா.......


Manikandan Bose,Chennai
Monday, 8th December 2008 at 03:52:52

Hi all
I like to share onething regarding Baba.. When i was working in QUBE digital cinema, i had a visit to calicut..
There is a theatre named DAVISON. When i was speaking with the Owner he told lot about Our Thalaivar and he was very much impressed with the money returned by our Thalaivar for BABA..
He said that for all the Theatre people from Kerala, he gave the money they lost and even the to and fro train fare and 500 rupees for food..
See how much he is caring about people..

Manikandan Bose,Chennai
Monday, 8th December 2008 at 03:49:43

Hi all
I like to share onething regarding Baba.. When i was working in QUBE digital cinema, i had a visit to calicut..
There is a theatre named DAVISON. When i was speaking with the Owner he told lot about Our Thalaivar and he was very much impressed with the money returned by our Thalaivar for BABA..
He said that for all the Theatre people from Kerala, he gave the money they lost and even the to and fro train fare and 500 rupees for food..
See how much he is caring about people..

Manikandan Bose,Chennai
Monday, 8th December 2008 at 03:40:56

தலைவரால் வாழ்ந்தவர் பலர்... வீழ்ந்தவர் எவருமில்லை... இனிமே வீழப்போகிறவர்கள் பலர் (அரசியலில்).....
kumaresan,india/madurai
Monday, 8th December 2008 at 02:51:37

thalivar thalaivarthan
S.MURUGAN,RAYAPURAM, TIRUPUR,INDIA
Monday, 8th December 2008 at 01:43:41

என்ன கொடுமை சங்கர் ஸார் இது"
k s amarnath,India/Bangalore
Monday, 8th December 2008 at 00:51:54

please post in english
R.RAMACHANDRAN,TIRUPUR/INDIA
Monday, 8th December 2008 at 00:37:44

"என்ன கொடுமை சங்கர் ஸார் இது"
jaga,bangalore
Monday, 8th December 2008 at 00:15:56

Hi. Every one are the biggest fans of Superstar Rajnikanth. we are eager to study whar they have written. But some people doesnt understand tamil. please try to update in tamil.

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information