Other Articles
ரஜினி – அமிதாப்: ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்ட திரைச் சக்கரவர்த்திகள்!..
சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிதான்! – மதன்
தலைவர் பிறந்தநாளைக் கொண்டாடும் ராஜ் டிவி!
மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ரஜினி - பீட்டர் செல்வகுமார்
Superstar Rajini's first stage show in Singapore
சன் டிவியில் ரஜினி
எம்ஜிஆருக்குப் பின் ரஜினிதான்! - மதன்
ரஜினி விஷயத்தில் நடுநிலை தவறுகிறதா சன்?
இதுவும் தீவிரவாதம்தான்!
ஜேம்ஸ் பாண்ட் வேண்டாம், ரஜினிதான் வேண்டும் - பிரியங்கா சோப்ரா
Sivaji stylish animation still for your mobile
கண்ணீர் அஞ்சலி.... wish the heros of our Nataion
ரஜினி தன்னைப் பற்றி சரியாக உணர்ந்தவர் - பீட்டர் செல்வகுமார்
ரஜினி பதில்கள் - 2
கனிமொழி எம்.பி. வெளியிடும் நூல்
Vishnuvardhan back in Tamil with Superstar
சென்னையில் எந்திரன்!
Rajini photo quiz - When, Where and What?
‘Enthiran’ shooting on in Chennai
ரஜினியைப் போன்ற தேசியவாதி எங்களுக்கு இல்லையே! - பால் தாக்கரே

  Join UsSubscription

 Subscribe in a reader

Article
ரிஸ்க் எடுப்பதை எப்போதும் விரும்பும் ரஜினி!
(Wednesday, 3rd December 2008)

 

ரிஸ்க் எடுப்பதில் ரஜினிக்கு எப்போதுமே அலாதி ஆர்வம். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரைப் போல உண்மையான ஈடுபாடு கொண்ட கலைஞர்களைப் பார்ப்பது அரிது என்கிறார் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன்.

சிவாஜியில் ரஜினியின் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றியவர் பீட்டர் ஹெய்ன். வியட்நாமில் ஒரு காராத்தே பயிற்சியாளரின் மகனாய் பிறந்து பின்னர் இந்தியாவில் செட்டிலாகிவிட்டவர் பீட்டர். இவரது தந்தை வழி மூதாதையர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். குங்ஃபு கலையில் நிபுணத்துவம் பெற்றவர்.

சமீபத்தில் அவரை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த போது ரஜினியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

“அவருடன் நான் பணியாற்றிய ஒரே படம் சிவாஜிதான். ஆனால் என் ஆயுசுக்கும் பெருமை சேர்க்கும் படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.

இந்தப் படத்தில் பணியாற்றிய போது என் மீது ரஜினி சார் கோபித்துக் கொண்டார் என்றெல்லாம் செய்திகள் வந்தன.

அதில் துளியும் உண்மையில்லை.

சார் என்னிடம் எப்போதும் சொல்வது, ‘கண்ணா... ஸேப்டி பர்ஸ்ட்!’ அதன்படிதான் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் போதிய பாதுகாப்பு ஏற்படுகளுடன் ஸ்டன்ட் காட்சி அமைக்கப்பட்டது. ரஜினி சாருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக்கு இணையாக மற்ற ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டது. இன்னொன்று, மற்ற ஸ்டன்ட் கலைஞர்கள் போலத்தான் நானும் நடந்து கொண்டேன்.

அப்படியும் ஓரிரு அசம்பாவிதங்கள் நடந்துவிட்டன. ரஜினி சாரின் முன்னெச்சரிக்கைக்கு அர்த்தம் புரிந்து, முன்னிலும் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டேன். இப்போதும் அதைக் கடைப் பிடிக்கிறேன். இந்தியில் ஆமிர்கானுடன் கஜினி படம் பண்ணும்போது கூட, சிவாஜியில் ரஜினி சார் சொன்ன அறிவுரைகள்தான் என் மனதுக்குள் ஓடின...

இதோ இப்போது நானும் ஒரு இயக்குநராக மாறியிருக்கிறேன். ஒரு சிறந்த பொழுது போக்குப் படம் எப்படி இருக்க வேண்டும்? ரஜினி சார் படம் மாதிரிதான் இருக்க வேண்டும். அதில் எந்த இரண்டாவது கருத்துக்கும் இடமில்லை.

சாருடைய படங்களில் எனக்குப் பிடித்த அம்சம்... சண்டைக் காட்சிகளைக் கூட பாலிஷாக வைக்கச் சொல்வார். ரத்தம் கொப்பளிக்க, வன்முறை தாண்டவமாடுவது போன்ற காட்சிகள் அவருக்குப் பிடிக்காது. காரணம் குடும்பப் பெண்களும், குழந்தைகளும் அதை விரும்ப மாட்டார்கள் என்பதால்தான்.

சண்டைக் காட்சிகள் தொழில் நுட்பத்துடன், தரமாக இருக்கலாம். ஆனால் அருவருக்கத்தக்கதாக இருக்கக் கூடாது என்ற அவரது எண்ணத்தைத்தான் நான் இயக்கும் படத்திலும் பின்பற்றப்போகிறேன்.

காரணம் ரஜினி சார் ஒரு விஷயம் சொன்னால் அதில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும்... பயன்கள் அதற்கு மேலேயே இருக்கும்!

-சங்கநாதன்

 

 
9 Comment(s)Views: 5028

k.thulasirajan,india/thanjavur
Monday, 8th December 2008 at 05:17:01

I am always proud to be a rajini fan
Vinod,India
Friday, 5th December 2008 at 04:45:56

please translate into English
s.seshadri,india/chennai
Friday, 5th December 2008 at 02:28:08

தலைவர் தலைவர்தான்
s.seshadri,india/chennai
Friday, 5th December 2008 at 02:26:31

தலைவர் எப்பவும் மிக சரியா க‌
Arooran,London
Thursday, 4th December 2008 at 12:38:18

Translate it in English!!! You are always posting your articles in Tamil but i cant read tamil!
SL Boy,Sri Lanka
Thursday, 4th December 2008 at 08:56:24

please translate into english
jaychandran,malaysia
Thursday, 4th December 2008 at 06:30:32

plz translate in english ! 10q
Manikandan Bose,Chennai
Thursday, 4th December 2008 at 03:15:04

காரணம் ரஜினி சார் ஒரு விஷயம் சொன்னால் அதில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும்... பயன்கள் அதற்கு மேலேயே இருக்கும்!

மிகச் சரியான உண்மை..

VASANTH-SWIS,SWITZERLAND
Wednesday, 3rd December 2008 at 15:05:49

நுரு வீகீதாம்

 
Website maintained by rajinifans creative team

All Rights Reserved - www.rajinifans.com

Disclaimer Information